Friday, February 2, 2024

TAMIL TALKS - EP.48 - பயந்தவர் வென்றதில்லை !

 



பிரச்சனைகளை பார்த்து பயந்து விட கூடாது. பொதுவாகவே நிறுத்தி நிதானமாக யோசித்தால் நல்ல முடிவு உங்களுக்கு கிடைக்கும். இங்கே நிறைய பேர் யோசிக்க பயப்படுகிறார்கள். பிரச்சனைகளை பார்த்து பயந்து கடைசி வரைக்கும் பிரச்சனைகளை சரியே பண்ண முடியாது என்று தப்பான முடிவை எடுத்து போதையில் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களை செய்வதில் நேரத்தை செலவு பண்ண ஆரம்பிக்கிறார்கள். இது தான் தவறான செயல். நிறுத்தி நிதானமாக யோசித்தால் யாருடைய தவறு என்றும் எப்படி இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் என்றும் நமக்கு ஒரு நல்ல யோசனை கண்டிப்பாக கிடைக்கும். இங்கே நான் நிதானமான யோசனை என்று சொல்லும்போது வெறும் யோசிப்பது என்று மட்டும் நினைக்காதீர்கள் ! உங்களுடைய பிரச்சனைகளுக்கு ரெப்ஃபரேன்ஸ் எடுக்க கண்டிப்பாக உங்களுக்கு ஒரி டேட்டா செட் தேவை. வெறும் மாஸ் முயற்சிகளால் கே.ஜி. எஃப் ராக்கி போல வயலன்ஸ் செய்து உங்கள் பிரச்சனைகளை முடிக்கவேண்டும் என்றால் அது எல்லாமே நடைமுறை சாத்தியம் ஆகாது ! நான் பயந்து இருந்தேன் எந்த செயலுமே செய்யாமல் இருந்தேன் அதனால்தான் வெற்றியை அடைந்தேன் என்று யாராவது சொல்லி நீங்கள் கேட்டு இருக்கின்றீர்களா ! அப்படி யாருமே சொல்ல முடியாது. நம்ம மானதுக்குள்ளே பயம் இருப்பது நம்முடைய கல்லறைக்குள் நாம் வாழும்போதே ஒளிந்துகொள்வதற்கு சமமானது. கவனமாக வேலை பார்த்து மூளையை பயன்படுத்தினால் காரியம் என்னவாக இருந்தாலும் ஜெயித்துவிடலாம் ! இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பயம் என்பது பணம் இல்லாமல் போவதால்தான் மட்டுமே வருகின்றது. பயந்து கிடந்தால் பணத்தை பார்க்க முடியாது. பணத்தை கண்டதும் உங்களுடைய பயம் எப்போதுமே சூரியனை கண்ட பனித்துளி போல விலகி செல்வதை நீங்களே பார்க்கலாம் ! 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...