Friday, February 2, 2024

GENERAL TALKS - நான் கிடப்பில் போட்டு தோற்றுப்போன ப்ராஜக்ட்கள் !

 


இத்தனை ப்ராஜக்ட்களை முடிக்க பணம் காசு போதாது இருந்தாலுமே நான் நிறைய ப்ராஜக்ட்களை கைவசம் வைத்து இருந்து கொஞ்சம் பேருடைய முட்டாள்தனமாக அணுகுமுறையால் காலியாகிவிட்டேன். இந்த ப்ராஜக்ட்கள் யாருக்குமே பிரயோஜனம் இல்லாமல் போவதற்கு இந்த ப்ராஜக்ட்களின் பேஸிக் ஐடியாக்களை நான் இப்போது பகிர்ந்துகொள்கிறேன் !  இந்த கட்டுரையில் வெப் ப்ராஜக்ட்களை பார்க்கலாம் ! அனானிமேஸ்ஸாக எழுதுவதற்கு ஒரு வெப்ஸைட் - கிட்டத்தட்ட நோவ்னி என்ற வெப்சைட் போலத்தான். செக்யூரிட்டி க்வேஸ்டின்ஸ் மூலமாக அவர்களுடைய கட்டுரையை வேண்டுமென்றால் டெலீட் பண்ணிக்கொள்ளலாம். அல்லது பின் நம்பர் ஸேட் பண்ணிக்கொள்ளலாம் ! இல்லையென்றால் எப்படி வேண்டுமென்றாலும் ஆப்ஷன்ஸ் செய்துகொள்ளலாம். இந்த ப்ராஜக்ட் கமேர்ஷியல் பண்ண கண்டிப்பாக நன்றாக பணம் சம்பாதிக்கும் ஒரு பிஸினேஸ் மாடல் தேவைப்படுகிறது. அதனால்தான் கிடப்பில் போட்டுவிட்டேன். நோட்ஸ் மட்டும் எடுத்துக்கொள்ள தனியாக ஒரு மைக்ரோ பிளாக் வெப்ஸைட் , இன்னும் சொல்லப்போனால் பிக்கோ பிளாக் வெப்ஸைட் . வெறும் 2 வரியை கூட பிளாக் போல பப்ளிஷ் பண்ணிக்கொள்ள ஆப்ஷன்ஸ் கொடுக்க வேண்டும். இதுவுமே பிஸினேஸ் மாடல் தேவைப்படுகிறது என்பதால் ரேஜேக்ட் பண்ணிய யோசனைதான். கிரியேட்டிவ்வாக பேக்ரவுன்ட்களை 2500 X 1600 போல பெரிய ரேஸால்யூஸன்களில் கூட உருவாக்க முடியும் என்று ஒரு வேப்ஸைட் ! இது எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கிறது என்று பிராக்ட்டிக்கல் டெஸ்ட் பண்ணினால் மட்டும்தான் முடியும். இன்டர்நெட் ஹியூமர் வெப்ஸைட் தமிழில் பண்ணலாம் என்று பல வருடங்களாக ஒரு யோசனை பெண்டிங்கில் இருக்கிறது. பாட்கேஸ்ட் (பாட்டு கேஸட் இல்லைங்க ! PODCAST ! ) அப்லிக்கேஷன் கொண்டுவர வேண்டும் என்ற விஷயமும் பெண்டிங்தான். இன்னும் நிறைய ஐடியாக்கள் இருக்கிறது ! இருந்தாலும் இன்னொரு போஸ்ட்டில் போடுகிறேன் ! இந்த வலைப்பூவில் இருக்கும் என்னுடைய கருத்துப்பகிர்வுகள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும் !


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...