Friday, February 2, 2024

TAMIL TALKS - EP. 47 - இனிமையான வாழ்க்கை !



பொதுவாக சர்க்கரையை நம்ம உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளவே கூடாதாம் ! அதுக்கு நிறைய காரணம் இருக்கிறது ! சர்க்கரை இன்ஸ்டண்ட்டாக உடைந்து உடலுக்கு கொஞ்சம் சக்திகளை கொடுக்கிறதே தவிர்த்து நியூட்ரிஷியனாக சர்க்கரையிடம் கொடுக்க எதுவுமே இல்லை. இது சம்மந்தமாக இணையத்தை தேடும்போது நிறைய விஷயங்கள் கிடைத்தது ! குறைவாக சர்க்கரை சாப்பிடுகிறோம் என்றாலுமே தினம் தினம் எடுத்துக்கொள்ளும்போது உடல் சோர்வு உருவாக்க ஆரம்பிக்கிறது. சர்க்கரைக்கு அடிக்ஷன் ஆனால் மனதும் சர்க்கரை கிடைக்கவில்லை என்றால் சோர்வாக மாறிவிடும் ! பற்களுடைய எனாமல் பாகங்களை சர்க்கரையை பாகடீரியாக்கள் உட்கொள்ளும்போது கொஞ்சம் கொஞ்சமாக அரித்து சொத்தை பற்களை உருவாக்கிவிடுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் அதிகரிப்பதும் நாம் கவனமான வேலை செய்யும் திறனை இழக்க செய்கிறது ! இதய நோய் , இரண்டாம் வகை சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் கொழுப்பு பாதிப்புகளையுமே சர்க்கரை உருவாக்குகிறது என்கிறது அறிவியல். இதனால் இனிமையான வாழ்க்கை என்பது சர்க்கரை அல்லாத உணவுகளையும் சத்துள்ள உணவுகளையும் சாப்பிட்டால் மட்டும்தான் நடக்கும். இதுக்கு கண்டிப்பாக அதிகமான பொருளாதார வசதி தேவை. நம்ம வாழ்க்கையில் சர்க்கரையை சேர்ப்பதும் இனிப்பு சாப்பிடுவதும் ஒரு வகையான போதை போன்றதுதான். ஆனால் சர்க்கரை பண்ணும் விஷயங்களை இன்டர்நெட்டில் பார்க்கும்போது ஆல்கஹால் விட மோசமாக பாதித்துவிடும் போல இருக்கிறது. நான் படித்த சோர்ஸ் மிகவும் டிடேய்ல்ட்டான ரிப்போர்ட் , இந்த விஷயங்களை நிறைய ப்ரூஃப் வைத்துதான் சொல்ல முடியும். இப்போது நான் மேலோட்டமாக கருத்து பகிர்வை மட்டும்தான் உங்களோடு பகிர்ந்துகொண்டு இருக்கின்றேன்.  

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...