Thursday, February 1, 2024

TAMIL TALKS EP. 39 - எப்போதும் போல எனது கருத்து பகிர்வு !

 


ஒரு விஷயத்தை கிரியேட்டிவ்வாக யோசித்தும் பண்ணலாம் , இல்லையென்றால் அனாலிட்டிக்கல்லில் யோசித்தும் பண்ணலாம் , இந்த இரண்டு விஷயங்களுமே நேர் எதிரான ஃபார்மட் , கிரியேட்டிவ் யோசனைகள் பொதுவாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பொறுத்து முடிவுகளை எதிப்பது என்றால்  அனாலிட்டிக்கல் யோசனைகள் பெரும்பாலும் கடந்த காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு அவைகளை பொறுத்து முடிவுகளை எடுப்பதுதான். கிரியேட்டிவ்வாக இருப்பவர்கள் எப்போதுமே மேலே சென்றுவிடுவார்கள் காரணம் நிச்சயமாக அபாரமான அறிவுத்திறன் என்றே சொல்லலாம். மேலும் கிரியேட்டிவ்வாக இருப்பவர்களுக்கு பணம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம். கிரியேட்டிவ்வாக இருப்பவர்கள் எப்போதுமே மேலேதான் இருப்பார்கள் என்பதால்  அனாலிட்டிக்கல்லில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடுக்கிறேன், நாம் எப்போதுமே கடந்த காலத்தை மட்டுமே வைத்து முடிவுகளை எடுக்கின்றோம். கடந்த காலம் நம்மை மைனஸ்ஸில் மட்டுமே டிராவல் பண்ண வைக்கிறது, நிகழ்காலத்தை மட்டுமே ஃபோகஸ் பண்ணினால் இருக்கும் நிலையில் இருந்து மேலேயும் செல்ல இயலாமல் கீழேயும் செல்ல இயலாமல் அங்கேயே ஸ்டே பண்ணுகிறோம். அதுவே எதிர்காலத்தை ஃபோகஸ் பண்ணும் கிரியேட்டிவ்வாக இருப்பவர்கள் வெற்றிகளை குவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே நாம்  அனாலிட்டிக்கல் விஷயங்களால் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தாலும் நமக்கான மாற்றங்களை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும், நமக்கு தேவையான விஷயங்கள் எப்போதுமே பொருட்கள்தான். கற்பனைகள் அல்ல. நாம் எப்போதும் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் சக்திகளின் அடிப்படையில் சாதித்துக்கொண்டே இருக்க வேண்டும். கிரியேட்டிவ் மக்கள் எப்போதுமே நம்மை பற்றிய தவறான அபிப்ராயத்தையும் பணம் இல்லாமல் இருப்பதால் நம் மேலே ஒரு மார்க்கமான வெறுப்பையும் கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய இந்த மைண்ட்ஸேட்டை நாம் எப்படியாவது மாற்ற வேண்டும். கிரியேட்டிவ் மக்கள் அவர்களுடைய சக்திகளில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே செலவு செய்து வெற்றிகளை சுலபமாக அடைந்துவிடுவார்கள். அவர்களுடைய பணம் அவர்களுக்கு கைகொடுக்கும் ஆனால்  அனாலிட்டிக்கல் விஷயங்களில் இருக்கும் நாம் ஒரு ஒரு சின்ன சின்ன வெற்றிக்கும் நம்முடைய சக்திகளில் இருந்து 95 சதவீதம் செலவு செய்து மீதம் இருக்கும் 5 சதவீதத்தில் பிழைத்து நம்முடைய வாழ்க்கையில் ஒரு வெற்றியை அடைகிறோம். ஒரு டி.எஸ்.எல்.ஆர் காமிராவின் அருமை தெரியாமல் இருப்பவர்களுக்குதான் அந்த ஒரு டி.எஸ்.எல்.ஆர் காமிரா இருக்கின்றது. கிரியேட்டிவ் மக்களுக்கு எப்போதுமே ஸ்மார்ட்னஸ் மிகவும் அதிகம் அவர்கள் வெற்றியை அடைந்துகொண்டே இருந்தாலும் காலத்தில் நாமும் நமக்கான தடத்தை படித்து அவர்களுக்கு மேலே வெற்றியை அடைந்து காட்ட வேண்டும். கிரியேட்டிவ் மைண்ட்ஸேட் நம்மிடம் இல்லை என்றாலும் அனாலிட்டிக்கல் மைண்ட்ஸேட்தான் நம்மிடம் இருக்கிறது என்றாலும் நாமும் இந்த உலகத்தில் நமக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் ? சாதனை செய்ய வேண்டும் ! நமக்கான நேரம் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் நமக்குள் குறைகளை எடுக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நிறைகள் மட்டுமே இருக்க வேண்டும். நாம் செய்யும் விஷயங்களில் அதிகபட்சமாக அக்யூரஸி இருந்தாலே நம்முடைய லைஃப் மிகவும் பெஸ்ட்டாக இருக்கும். இந்த வாழ்க்கை ஒரு ஸ்டோரி புத்தகம் போன்றதே , வொர்க் பண்ணுவது கஷ்டம் , ஸ்டோரியை முழுமையாக எழுதிவிட்டு எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணுவது அதனை விடவும் பெரிய கஷ்டம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...