Monday, February 5, 2024

GENERAL TALKS - நம்மால் முடியாத விஷயங்களை இப்போது பேசிக்கொண்டு இருக்கின்றோம் !

 



நான் என்னால் முடிந்த வரைக்கும் போராடினேன் இருந்தாலும் என்னுடைய வாழ்க்கையின் 95 சதவீத நேரம் போராடுவதில் சென்றுவிட்டது. மீதம் இருக்கும் 5 சதவீத நேரத்தை கூட நான் ரெஸ்ட் எடுக்கவும் என்னுடைய மனதுக்கு கொஞ்சம் மருந்து போட்டுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் என்னால் வலியை தாங்க முடியாமல் இறந்துவிடுவேன் என்று சொன்னாலும் அடிப்படையில் நல்ல பணத்தின் காரணமாக வெற்றிகளை அடைந்த மனிதர்கள் நம்மை இளக்காரமாக நாயை போல பார்த்து அறியாமை நிறைந்த முட்டாளே உன்னுடைய கண்களால் எங்களின் தரிசனத்தை பார்த்துக்கொள். நாங்கள்தான் அறிவு ஜீவிகள் எங்களிடம்தான் நிறைய செல்வம் இருக்கிறது. காலம் எங்களைதான் ராஜாவாக தேர்ந்தெடுத்து இருக்கிறது. காலத்தால் கேவலமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும் ஈன பிறவியே உன்னுடைய வாழும் ஒரு ஒரு நாட்களும் பூமிக்கு நீ பாரமாக கருதப்படுவாய் ஆதலால் இறந்து போ என்று வாழ்க்கையில் அறிவு இருப்பவர்கள் நம்மை மோசமாக கொடுமைப்படுதுவார்கள். உடலும் மனதும் உடைந்து போய் இருக்கும்போது மேலும் நமக்கு ஆதரவாக இருக்கும் எல்லா விஷயங்களையும் உடைத்துக்கொண்டு இருப்பார்கள்.இந்த அறியாமையை கடவுள் வேண்டுமென்றே நமக்கு கொடுக்கின்றார். நம்மை வாழ்க்கையில் கொடுமைப்படுதுகிறார். துன்புறுத்தவும் செய்கிறார். சக்திவாய்ந்த அரக்கனை போல அவருடைய கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நம்மால் எதுவுமே பண்ண முடிவது இல்லை. வாழ்க்கையில் ஆசைப்பட்ட எதுவுமே கிடைக்காமல் மிகவும் நரகமாக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். இந்த நிலை இப்படியே நீடிக்க வேண்டுமா ? நமக்கு யாரேனும் பாவங்களை செய்து நாம் துணிந்து சண்டை போடாமல் விட்டுவிட்டால் நமக்கு கொடுத்த கஷ்டத்த்தால் சம்பாதித்த போதையால் கிடைக்கும் சந்தோஷத்தை இன்னும் அனுபவிக்க வேண்டுமென்று யாராலும் ஆசையை கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றே ஒருவரை ஏழையாக அறியாமை இருளுக்குள் தள்ளிவிட்டு இன்னொருவரை பணக்காரராக அறிவின் ஒளியில் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ வைப்பது எந்த வகையில் நியாயமானது ? கஷ்டப்பட்ட மனிதனாக நினைவு திறன் குறைபாடு, உடல்நல குறைவால் சேமிப்புகள் கரைந்து சென்று நம்மிடம் இருக்கும் கடைசி கட்ட பணமும் காலியாக மாறுவது, நொடிக்கு நொடி மனதுக்கு பாரத்தை கொடுத்து கஷ்டங்களை கொடுத்து காசுகளை கரைப்பது, மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் மனது கொடுத்து எதுவுமே பண்ண முடியாத பணம் இல்லாத கையாலாகாத ஒரு மனிதனாக மாற்றி நம்முடைய வாழ்க்கையையே நாசம் பண்ணுவது என்று நீங்கள் நிறைய விஷயங்களை செய்துகொண்டு இருந்தாலும் அனைத்திலும் உங்களை வேண்டுமென்றே தோற்கடித்து உங்களை முட்டளாகவே வைத்து இருக்க வேண்டும் அதே சமயத்தில் பணம் இருப்பவர்களை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் ஜெயிக்க வைத்து ஜெயிக்க வைத்து புத்திசாலியாகவே வைத்து இருக்க வேண்டும் என்றால் அடிப்படையில் இது மிகவும் தவறான செயல் ஆகும். இந்த அறியாமை கண்டிப்பாக வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த வாழ்க்கையை நாசம் பண்ணும் சம்பவங்களை தடுத்தே ஆக வேண்டும்.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...