ஜெயிக்கக்கூடிய அளவுக்கு சக்தியையும் வலிமையையும் நமக்குள்ளே உருவாக்கிக்கொண்டால் வெற்றிகள் தானாக நமக்கு கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். இருந்தாலுமே அதனை விடவுமே முக்கியமான ஒரு பலம் என்னவென்றால் கஷ்டப்பட்டு நமக்கான வலியையும் வேதனையையும் சலிப்பையும் தாங்குவதுதான்.. இந்த உலகம் இன்னொருவருக்கு கடினமான் உழைப்பு இருப்பதால்தான் நமக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தற்காப்பு கலைகளை எடுத்துக்கொள்ளுங்களேன். அடிபடாமல் எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ள முடியாது. வலி இல்லாமல் எப்போதுமே நடக்கும் தாக்குதல்களை தடுக்க முடியாது. எல்லோருடைய உடலுக்குள்ளேயும் கொடுக்கும் அதே எலும்புகளையும் சதைகளையும்தான் நமக்கும் கடவுள் கொடுத்து இருக்கிறார். கடினமான உடற் பயிற்சியின் மூலமாக நம்முடைய பலத்தை அதிகப்படுத்தலாம் ஆனால் முறையான வலி இல்லாமல் பலத்தை அதிகப்படுத்துவது என்பதுமே நடக்காது. நீங்கள் உங்களுடைய உடல் மற்றும் மனது அளவில் சிறப்பாக இருக்க வேண்டும். குழப்பம் மற்றும் கவலை என்பது துளியும் அர்த்தம் இல்லாத விஷயங்கள். நமக்கான தோல்விகளையும் வலிகளையம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. கிடைக்கக்கூடிய தோல்விகள் நம்முடைய பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள கிடைக்கும் பொன்னான வாய்ப்புகள் என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் வலியை விட்டு ஓடி ஒளியலாம் ஆனால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் உங்களுக்கான வலிகளை நீங்கள் அனுபவிக்கத்தான் போகின்றீர்கள். இவ்வளவு குறைவான வாழநாட்களே நம்முடைய வாழ்க்கை கொடுக்கிறது என்னும்போது எதுக்காக இத்தனை வலிகள் வேதனைகளை கொடுத்து நம்முடைய வாழ்க்கையை நன்றாக வாழக்கூடாது என்ற காரணத்துக்காக என்னவெல்லாம் வாழ்க்கையினால் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறது. நெடுஞ்சாலையில் ஆதரவு இல்லாமல் வழியே தெரியாமல் நின்றுகொண்டு இருக்கும் நிலையை நம்முடைய வாழ்க்கை நமக்கு அளித்துவிடுகிறது. நம்முடைய கனவுகள் அப்படியே நிறைவேறுவது இல்லை. நம்முடைய கனவுகள் கடைசிவரைக்கும் கனவாகவே சென்றுவிடுகிறது. இரும்பால் ஆன கரங்களை கொண்டு இப்போதே இந்த தோல்விகரமான நிலையை மாற்ற வேண்டும். நம்மை நாம் மேம்படுத்த வேண்டும். வலிக்காமல் வாழ்க்கையை நடத்த முடியாது. இது நம்ம உலகத்தின் எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது என்ன செய்வது ? இந்த வலைப்பூவில் இருக்கும் என்னுடைய கருத்துப்பகிர்வுகள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும் !
No comments:
Post a Comment