நம்மால் போராட முடியும் என்று கடைசிவரைக்கும் போராடிக்கொண்டு இருந்தாலும் இந்த வகையிலும் ஒரு கடினமான அறியாமை உருவாகும். இந்த வகை அறியாமை எப்படிப்பட்டது என்றால் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள நேரம் இல்லாமல் வளங்களும் இல்லாமல் உயிரே போகும் ஒரு ஆபத்தில் கடைசி வரைக்கும் சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறோம் என்பதால் மனது அறிவை வளர்த்துக்கொள்ள மறுத்து ஒரு கடினமான அறியாமையை உருவாக்குகிறது. வாழ்க்கையில் நம்மை எல்லோருமே முட்டாள்கள் என்று அழைப்பார்கள். இப்படி முட்டாள்கள் என்று அழைக்கும் மனசாட்சி இல்லாத மனிதர்கள் எல்லாம் நிறைய பணம் காசு வைத்து இருப்பார்கள். பெரும்பாலும் இந்த பணம் காசு எல்லாம் அவர்கள் சம்பாதித்தால் கிடைத்தவையாக இருக்காது. சொத்துக்களுடைய அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்த விஷயங்களாக இருக்கும். நமக்கு ஒரு நாளில் 24 மணி நேரமும் போராட்டமாக மட்டும்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு ஒரு நோடியை வாழவும் அவ்வளவு பயமாக இருக்கும். கண்களை மூடி கடைசி வரைக்கும் நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தால் என்ன என்றுதான் தோன்றும். நம்மை நம்முடைய வாழ்க்கையின் அவமான சின்னமாக பார்ப்பார்கள்.நம்ம வாழ்க்கையில் எல்லோருமே நம்மை தரக்குறைவாக நடத்த நாமும் தோற்றுப்பொய்க்கொண்டு இருந்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கை நரகமாக மாறிவிடும்.இதுவே பெரிய விஷயம். என்னுடைய நிலையில் வேறு யாரேனும் இருந்தார்களேயானால் கண்டிப்பாக வலியை தாங்க முடியாமல் பாரத்தை சுமக்க முடியாமல் இறந்து இருப்பார்கள்.இதனால்தான் நான் ஸ்பெஷல் என்னால் மட்டும்தான் பிரச்சனைகளை சரிபண்ண முடியும். இது கடவுளுக்கும் தெரியும்.பொதுவாக நான் அனுபவங்களை கற்றுக்கொள்வது குறித்து வேறு யாருமே பண்ணாத ஒரு முறையை நான் பயன்படுத்துகிறேன். இங்கே எப்போதுமே சுலபமான ஆப்ஷன் மற்றும் கஷ்டமான ஆப்ஷன் என்று இரண்டு வகையான ஆப்ஷன்கள் இருந்தால் நான் கஷ்டமாக இருக்கும் ஆப்ஷனை செலக்ட் பண்ணுகிறேன். இதனால் சுலபமான ஆப்ஷன்கள் தேர்ந்தெடுப்பவர்களின் எக்ஸ்பீரியன்ஸ் விட என்னுடைய எக்ஸ்பெரியன்ஸ் மிகவும் அதிகமானது !
No comments:
Post a Comment