எழுதுவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். உங்களால் ஈஸியாக எழுத முடியும் என்று ஒரு எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்தை கண்டிப்பாக மறந்துவிடுங்கள். நான் பெர்ஸனலாக கணக்கு போட்டு பார்க்கும்போது ஒரு ஒரு 15 நிமிடங்களுக்கும் 183 வார்த்தைகள் மட்டும்தான் மிக நுணுக்கமான ஆவேரேஜ்ஜில் எழுத முடியும், இந்த வேகத்தினை விட அதிகமாக வேகத்தை எடுத்துக்கொள்வது நம்முடைய கைகளுக்குதான் அதிகமான வலியை கொடுக்கிறது. இதுபோல வலைப்பூ எழுதுவது சாதாரணமான விஷயம் அல்ல. வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாகிக்கொண்டு இருக்கும்போது பணம் இருந்தால் மட்டும்தான் பிரச்சனைகளை நம்மால் சரிபண்ண முடியும் என்ற கட்டாயம் உருவாக்கும்போது நம்முடைய வாழ்க்கை கடினமான சோதனைகளுக்கு உள்ளாக்கபடுகிறது.இத்தனை சோதனைகளை கடந்து வரும்போது நமக்காக யாருமே சப்போர்ட் பண்ண மாட்டார்கள். தனிமையில் நமக்கு நிறைய அனுபவம் இருக்கின்றது என்பதால் நம்முடைய அனுபவங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வலைப்பூவாக மாறுகிறது. ஒரு ஒரு புள்ளியிலும் நான் என்னுடைய வாழ்க்கையை இன்னுமே சிறப்பாக மாற்றிக்கொண்டுதான் இருக்கின்றேன். நம்முடைய வாழ்க்கையில் கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பணம் கொட்டிக்கிடக்க வேண்டும் அப்போதுதான் மிகவுமே பெரிய விஷயங்களை சாதிக்க முடியும். இந்த வலைப்பூ என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு பாகம், தொடர்ந்து 1 மாதமாவது இந்த வலைப்பூவுக்காக நான் யோசித்து இருப்பேன். அந்த அளவுக்கு இந்த வலைப்பூ மிக்கவுமே அதிகமாக என்னிடம் வேலையை வாங்கிவிட்டது. வலைப்பூவுடைய டெவலப்மெண்ட் என்பது ஒரு நாளில் நடந்துவிடாது. மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சென்றுக்கொண்டு இருக்கும் ஒரு வேலை இது ஆகும். இந்த வலைப்பூவுடைய எதிர்காலம் என்ன ? நான் இன்னுமே கொஞ்சம் வருடங்களுக்குத்தான் உயிரோடு இருக்க முடியும் என்றால் நான் என்ன சாதித்து என்னதான் பிரயோஜனம் எல்லாமே வாழ்க்கையில் கடைசியில் காலத்துக்கு ஏற்றவாறு மாறத்தான் போகிறது. மிகப்பெரிய அரண்மனைகள் , கோட்டைகள் எல்லாம் இப்போதைக்கு வெறும் காட்சிப்பொருட்கள்தானே ? நான் என்ன சாதித்தாலும் இந்த உலகத்தால் அழிக்க முடியாத அளவுக்கு சாதிக்க வேண்டும் ஆனால் மக்கள் நம்மை நினைவில் வைத்துக்கொள்ள போவதால் நாம் என்ன கல்லறையில் இருந்து எழுந்து காப்பி சாப்பிடவா போகிறோம். நம்ம வாழ்க்கை முடியும்போது நம்மிடம் எது இருந்தாலும் எது இல்லை என்றாலும் கவலையே இல்லை. இந்த வலைப்பூ டெவலப் பண்ணும்போது உலகத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்று வேலைக்கு போகும் சிஸ்டம் என்பதையே மாற்ற வேண்டும் என்று ஒரு பேராசை இருந்தது. இந்த ஐடியா நன்றாக இருந்தால் கண்டிப்பாக டெவலப் பண்ணுங்கள். பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள்.
No comments:
Post a Comment