Thursday, February 1, 2024

TAMIL TALKS EP. 42 - மனதுக்குள் இன்டேக்ரேஷன் வேண்டும் !

 



குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட ஸ்பேஸ் மற்றும் டைம்தான் நமக்கு கிடைத்து இருக்கிறது. இவ்வாறு நமக்கு கிடைத்த விஷயம் கொஞ்சமாக இருந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் மனதுக்குள்ளே இண்டெக்ரேஷன் கொண்டுவந்து கண்டிப்பாக சாதிக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் நிறைய நேரங்களில் மிகப்பெரிய வெற்றியை அடையவேண்டும் என்றால் நம்மை ஒரு கடினமாக உழைக்கும் மெஷின்னாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒரு ஸ்மார்ட்டான கணினியாக மாற்ற வேண்டும். நம்முடைய உடல் மற்றும் மனம் என்ற இரண்டு விஷயங்களிலும் ஆரோக்கியம் மிகவுமே முக்கியமானது. இவற்றில் ஏதாவது ஒரு விஷயம் வேண்டும் என்றால் இன்னொரு விஷயத்தை இழந்தாக வேண்டும். நம்முடையவாழ்க்கை  இப்படித்தான் வேலை செய்கிறது. நம்முடைய அறிவை தொடர்ந்து அப்டேட் பண்ணிக்கொண்டு இருக்கும்போது ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கையை சுற்றி மிகவும் கடினமாக ஒரு போராட்டமே நடந்துகொண்டு இருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. உணவு , உடை , இருப்பிடம் போன்ற அடிப்படையான விஷயங்களுக்காக நாமும் போராடிக்கொண்டுதானே இருக்கின்றோம். நம்முடைய மனதை கட்டுப்படுத்திக்கொண்டால் மனது தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தகவல்களை பெறாது. மனது எப்போதுமே ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்துகொண்டே இருக்க வேண்டும் ஒரு நாள் என்றாலும் இன்னொரு நாள் நன்றாக அப்டேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். இறப்பு எப்போதுமே தவிர்க்க முடியாத விஷயம்தான் ஆனால் இறப்புக்குள்ளே நாம் செய்யும் விஷயங்களை தூய்மையாக , தெளிவாக மற்றும் முழுமையாக செய்யும் அளவுக்கு நம்மை திறமை வாய்ந்தவர்களாக மாற்றிவிட்டால் நம்முடையவாழ்க்கை  சிறப்பானதாக இருக்கும், நம்முடைய வாழ்க்கையில் மனதை எப்போதுமே ஒரு இண்டெக்ரேஷன்னில் வைக்க வேண்டும். போதுமான இண்டெக்ரேஷன் இல்லை என்றால் நமக்கு வருடக்கணக்கில் நேரமும் வாய்ப்புகளும் கிடைத்தாலும் நம்மால் நினைப்பதை சாதிக்க முடியாது. நெகட்டிவ்வாக நடக்கும் சம்பவங்களை தடுக்கவே முடியாது, மொத்த நெகட்டிவ்வான விஷயங்களையும் எப்போதுமே ஒரு பாசிட்டிவ் விஷயங்கள் நிறைந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். நமக்கு சொந்தமான பொருட்களை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். நாம் நிறைய மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு தொடர்ந்து மனதை கட்டுப்பட்டுக்குள்ளே வைத்து இருக்கின்றோம் என்னும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கை மாற ஒரு மென்மையான சான்ஸ் இருக்கின்றது. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட நிகழ்காலத்தில் நேரம் இல்லை, எதிர்காலத்திலும் நேரத்தை கொடுக்க கூடாது. ஒரு கட்டத்தில் ஸ்டேட்மென்ட்ஸ் - தி கேம் ஆஃப் ப்ளட் என்ற ஒரு புத்தகத்தை எழுத முயற்சிகளை செய்துகொண்டு இருக்கிறேன். இந்த புத்தகத்தில் இதுபோன்ற கருத்துக்கள் நிறைய கொடுக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்து இருக்கிறேன். காலம் கொடுக்கும் குறைவான நேரத்தில் சிறப்பான விஷயங்களை நிகழ்த்த என்னால் ஆன எல்லா முயற்சிகளையுமே நானும் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன். குறைகளை நான் வைப்பது இல்லை. பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...