Thursday, February 1, 2024

TAMIL TALKS EP. 40 - கஷ்டப்பட்டால்தான் முன்னேற முடியும் !

 



நாம் செய்யும் விஷயங்களில் கஷ்டமான விஷயங்களை நமக்காக வேலை பார்ப்பவர்களிடம் பிரித்து கொடுக்கின்றோம். இந்த வகையில் இங்கே நாம் செய்யும் விஷயங்களை நியாயப்படுத்த முடியாது. நம்முடைய முன்னேற்றத்துக்காக இன்னொருவருக்கு வலியை கொடுப்பது என்றால் வலியை கொடுப்பதுதான், உடைத்து போடுவது என்றால் உடைத்து போடுவதுதான் , சேதப்படுத்துவது என்றால் சேதப்படுத்துவதுதான். நம்முடைய வாழ்க்கை  எந்த வகையிலும் நம்மை கடைசி வரைக்கும் பூக்கள் நிறைந்த பாதையில் கொண்டு செல்லப்போவது இல்லை. உங்களுடைய மனதுக்குள்ளே கோபம் இருக்கிறது என்றால் அனைவருடனும் கடினமாக பழகுவதில் அவ்வளவு பெரிய தவறு என்று எதுவுமே இல்லை. நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே சிறப்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அந்த முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான பொறுப்பு. அதுவுமே இல்லாமல் அந்த பொறுப்பை முடிக்க கண்டிப்பாக ஒருவர் மட்டும் போதாது. நிறைய பேர் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு நாம் சொல்லும் விஷயங்கள் சரியானது என்றாலும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நமக்காக வேலை செய்துகொண்டு இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை ஒரு முழுமையை உங்களுக்கு கொடுக்கிறது. நம்முடைய பட்ஜெட் குறைவானதாக இருக்கலாம் ஆனால் செய்யும் வேலைகள் அதிகம் என்றால் பொருளாதார அளவில் நிறைய இலாபம் உங்களுக்கு கிடைக்கும். இந்த இலாபத்தை வைத்து உங்களால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும், பண வகையில் கிடைக்கும் சக்தி என்பது அடிப்படையில் மிகவும் சிறப்பான விஷயம். நம்மிடம் இருக்கும் பணத்தை சரியாக பயன்படுத்தினால் அல்லது நமக்காக வேலை செய்பவர்களை மிகவும் சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டு வேலையை சிறப்பானதாக முடித்தால் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். நமக்காக வேலை பார்ப்பவர்களை நன்றாக நடத்துவதும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். நமக்காக வேலை பார்ப்பவர்கள் அவர்களுடைய வளர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நம்முடைய வளர்ச்சிக்குமே சேர்த்து உதவி பண்ணத்தான் போகின்றார்கள். நமக்காக வேலை பார்ப்பவர்களின் தனிப்பட்ட மரியாதை மற்றும் கௌரவத்தை எப்போதுமே நாம் மதிக்க வேண்டும். ஒரு விஷயத்தில் நிறைய பேர் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்றால் விறுப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது. பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...