Thursday, February 1, 2024

TAMIL TALKS EP. 41 - தனியே தன்னந்தனியே என்னுடைய அனுபவம் !

 



தனியாக போராடும்போது வாய்ப்புக்களுக்காக காத்திருக்க கூடாது. நமக்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். தனியாக போராடும்போது எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாமே தனிப்பட்ட ஒரு பெர்ஸனாக எடுக்கும் முயற்சிகள் என்பதால் என்னதான் உயிரை கொடுத்து போராடினாலும் நம்முடைய போராட்டத்தின் சக்தி குறைவுதான். இப்படி குறைவாக சக்தி இருந்தாலும் ஒரு ஒரு முறையும் தோற்றுப்போகிறோம் என்று தெரிந்தும் போராட்டத்தை நாம் செய்துகொண்டுதான் இருக்கின்றோம். இது எல்லாமே எங்கே செல்லப்போகிறது என்று கணித்து பார்த்தாலும் அந்த கணிப்புமே நாம் தோல்விதான் அடையப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. தனியாக போராடும்போது மட்டுமதான் நம்முடைய மிகவும் சிறிய தவறுகளை கூட மிஸ்டேக் என்று எடுத்துக்கொண்டு சுற்றுச்சூழல் மிகவும் நேர்த்தியாக நடக்கும் விஷயங்களை அதனுடைய கட்டுப்பாட்டில் எடுத்துககொள்கிறது. நடக்கக்கூடிய சம்பவங்கள் எல்லாம் சுற்றுச்சூழலின் கட்டுப்பட்டுக்குள்ளே சென்றால் நம்மால் எதுவுமே பண்ண முடிவது இல்லை. நாம் நெருக்கமான மனிதர்களை காலத்திடம் இழக்கிறோம் , பணத்தை இழக்கிறோம் , உடல்நலக்குறைவுக்கு காரணமாகிறோம் , நம்முடய மதிப்பு மிக அதிகமாக குறைந்துபோவதை பார்க்கின்றோம். இது எல்லாம் எதனால் நடக்கிறது ? வாழ்க்கை நேரடியாக நம்மோடு எப்போதுமே சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. நாமும் நேருக்கு நேராக துணிந்து வாழ்க்கையுடன் சண்டை போடத்தான் வேண்டும். வாழ்க்கையை நாம் கேட்கவில்லை. வாழ்க்கைதான் நமக்காக உயிரோடு இருக்கும் இதுபோன்ற காலங்களை கொடுக்கிறது ஆனால் வாழ்க்கை நம்மை உயிரோடு இருக்கும் அத்தனை நாட்களும் துன்பமும் துயரங்களும் இருக்கும் நாட்களாகவே வாழச்சொல்லி கட்டாயப்படுத்துவது எதனால் என்று நமக்கு புரியவில்லை. இருந்தாலும் இங்கே என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் நமக்கு நாம்தான் சப்போர்ட் என்று இருந்துள்ளோம். இதனால்தான் நமக்கு நாம் எப்போதுமே மரியாதையையும் மதிப்பையும் அதிகமாக கொடுத்து கௌரவமான மனிதர்களாக வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டும். உங்களுடைய நினைவுத்திறனும் இதுபோன்று ஒரு விஷயத்தில் பங்களிப்பு கொடுப்பதில் மிக முக்கியமானது. உங்களுடைய நினைவுத்திறனை கவனமாக வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் நிறைய விஷயங்களை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...