Thursday, February 1, 2024

TAMIL TALKS EP. 43 - கஷ்டப்பட்டு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை !

 



இங்கே யாருக்குமே கஷ்டப்படவே விருப்பம் இருப்பது இல்லை. கஷ்டப்பட்டு வேலை யாராவது பார்த்தால்தான் சம்பாதிக்க முடியும். உங்களுடைய கைகளில் ஒரு 10 ரூபாய் நோட்டு இருக்கிறது. இந்த நோட்டு இலவசமாக கிடைத்துவிடுமா என்ன ? இந்த நோட்டை சம்பாதிக்க ஒரு மனிதனாக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா ? சமுதாயம் ஒருவரை வேண்டுமென்றே குறை சொல்லும் , ஏமாற்றும் , அவரை எந்த வேலைக்குமே சென்று பணம் சம்பாதிக்க முடியாமல் ஒரு அறைக்குள்ளே அடைத்துவிடும், வாழ்க்கை இப்படி சென்றுக்கொண்டு இருக்கும்போது அப்படி சிக்கிக்கொண்ட அந்த குறிப்பிட்ட மனிதரால் சுமாராக 10 ரூபாய் சம்பாதிப்பது கூட கடினமாக மாறிவிடும். அவருக்கு எல்லோருமே கடன்கள்தான் கொடுக்க முன்வருவார்கள் ஆனால் இலவசமாக பணத்தை வழங்க மாட்டார்கள். பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பயன்படுத்தி அந்த நேரத்துக்கான வேலையை செய்யும்போது அல்லது வேலையை செய்வதற்கு மேலே அதிகாரமாக இருக்கும்போதோ நமக்கு அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ சட்ட திட்டங்களின் அடிப்படையில் சமுதாயத்துக்கு கான்ட்ரிப்யூஷன் பண்ணிய காரணத்துக்காக கொடுக்கப்படும் பாயிண்ட்ஸ்கள். இவைகளை கவனம் இல்லாமல் செலவு பண்ணினால் உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. கவனத்தோடு மட்டும்தான் பணத்தை செலவு செய்ய வேண்டும். பல வருடங்களுக்கு முன்னால் இருந்த பண்டமாற்று முறையின் மோஸ்ட் அட்வான்ஸ்ட் வெர்ஷன்தான் இந்த பணம் என்ற முறை. கவனமாக இருக்க வேண்டும், பணத்தை கொண்டு என்ன விஷயங்களை வேண்டுமென்றாலும் செய்யலாம், பணம் என்பது பொருட்களை செய்வதற்கான மூலப்பொருள் போன்றது. இந்த பொருள் உங்களிடம் அதிகமான ஸ்டாக் இருந்தால் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், மேலும் பணம் என்ற விஷயம் உங்களுடைய வாழ்க்கையில் இருந்தால்தான் உங்களுடைய அறிவுத்திறன் அதிகமாக மாறுவதும் நடக்கும், நம்முடைய உலகத்தில் யார் எப்படி கேட்டாலும் உங்களுடைய பணத்தை கொடுக்க வேண்டாம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பணத்தை கடனாக வாங்கி வட்டி கட்ட வேண்டாம், உங்களுக்கு வரவேண்டிய பணத்தை எப்போதுமே பாரபட்சம் பார்க்காமல் வசூல் பண்ண வேண்டும். உங்களுடைய பணம் உங்களுடைய அடிப்படை. மனிதர்களுடைய மனது மாறிவிடும். இன்றைக்கு உங்களுக்கு சப்போர்ட் பண்ணுபவர்கள் நாளைக்கு சுயநலத்துக்கு சப்போர்ட் பண்ணலாம். உங்களிடம் இருக்கும் பொருட்கள் மட்டும்தான் கடைசி வரைக்குமே உங்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கும். அதனால் கவனமாக இருங்கள். பணத்தையும் பொருட்களையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...