Tuesday, April 30, 2019

THE TAMIL VOICE BEHIND SHAZAM : - THANK YOU SO MUCH MR.RAGHUVARAN - WHY TAMIL DUBBING IS SPECIAL ? - [REGULATION-2024-00043]










ஷசாம் திரைப்படத்தின் தமிழ் மொழி DUBBING குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? ஷின் சான் , பென் டென் போன்ற அனிமேஷன் தொடர்களை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்கவே முடியாது , இன்னைக்கு வரைக்கும் ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் கூட கலகலப்பான SHIN CHAN TAMIL EPISODES ஆக இருக்கட்டும் அல்லது ALIEN களை நொறுக்கும் ACTION HERO BEN 10 -னாக இருக்கட்டும் , இந்த மாதிரியான அனிமேஷன் தொடர்கள் உண்மையில் ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழியில் இருந்தாலும் நம்ம ஊரு ஆடியன்ஸ்க்காக அந்த மொழிகளின் தடைகளை எல்லாம் கடந்து இன்றைக்கு இந்த அனிமேஷன் தொடர்களை நம்ம தமிழ் மொழியில் எல்லோரும் விரும்பி பார்க்க காரணமாக இருப்பது இது போன்ற அனிமேஷன் தொடர்களுக்கு தமிழ் மொழியில் சிறப்பாக அருமையாக வசங்களை மொழிபெயர்த்து மேலும் தரமாக பின்னணி DUBBING கொடுத்து சின்ன சின்ன காட்சிகளையும் ரசிக்கும்படி செய்யும் நம்ம ஊரு TAMIL DUBBING TEAM மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது . ஷசாம் 2019 ல் ரிலீஸ் ஆன ஒரு DC காமிக்ஸ் சூப்பர்ஹீரோ திரைப்படம் ஆகும் , இன்று இந்த படத்தை நான் TAMIL DUBBING ல பார்க்கும்பொது இந்த திரைப்படத்தில் BEN 10 அல்டிமேட் ஏலியன் , மற்றும் சின்சான் போன்ற தொடர்களுக்கு வாய்ஸ் கொடுத்த ரகுவரன் சார்தான் வாய்ஸ் கொடுத்து இருக்கிறார்.  இந்த படத்துக்கு ரசிக்கும்படியான கியூட்டாக கொடுத்த நம்ம DUBBING ARTIST MR.ரகுவரன் SIR மற்றும் DUBBING ARTISTS குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .இங்கே சமீபத்திய அவெஞ்சர்ஸ் எண்டுகேம் பிரச்சனைக்கு பின்னால் டப்பிங் என்பது மிகவுமே கவனமாக பண்ண வேண்டிய ஒரு விஷயம். புரஃபஷனல்ஸ்களிடம் வொர்க்ஸ்களை கொடுப்பதே பெஸ்ட் என்று காலகாலமாக ஹாலிவுட் படங்களை டப்பிங் பண்ணும் இடங்களில் இருந்து நிறைய வேண்டுகோள்கள் இருக்கிறது. இங்கே குரல் கொடுக்கும் கலைஞர் நம்ம ரகுவரன் சார் மட்டும் இல்லை நிறைய பேருக்கு இந்த ஒரு டப்பிங் பிரச்சனைக்கான விஷயம் ஒரு கௌரவமான அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஷசாம் படம் டிரெய்லர் பார்க்க இண்டரெஸ்ட்டிங்காக இருப்பதால் நிச்சயமாக தியேட்டர்ல பார்க்க ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் என்று நம்புகிறேன். அப்டேட் : நெடிஃப்லிக்ஸ்ல இப்போது எல்லாம் எந்த ஹாலிவுட் படங்கள் நம்ம தமிழ் மொழியில் டப்பிங் பண்ணப்பட்டாலும் நம்ம மொழியில் டப்பிங் பண்ணியவர்கள் மற்றும் பின்னணி குரல் கொடுத்தவர்கள்களுக்கு END CREDITS ல பெயர்களை மென்ஷன் பண்ணுகிறார்கள். இதுவே ஒரு நல்ல விஷயம்தான். DUBBING TEAM க்கு எப்போதுமே அவர்களுடைய திறமைக்கும் கிரியேடிவிட்டிக்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...