Saturday, June 17, 2023

CINEMATIC WORLD - KGF FILM SERIES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! KGF CHAPTER 1 & 2 - வேற லெவல் !! [REGULATION 2024 - 000103]

 

இந்த KGF 1 - KGF 2 - சமீபத்தில் வெளிவந்த ஆக்ஷன் படங்களில் மிகவும் அதிகமான அளவு வெற்றியை அடைந்த கன்னட திரைப்பட வரிசை இதுதான். இந்த படத்துடைய கதை : கதாநாயகர் ராக்கி சிறிய வயதில் இருந்தே பெற்றோரை இழந்து பணத்துக்காக அதிகமாக போராடியிருக்கிறார். இந்த போராட்டம் அவர் வளர்ந்த பகுதியில் அவரை யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு வன்முறை நிறைந்த மனிதனாக மாற்றிவிட்டது. ஒரு கட்டத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து அனுமதியற்ற தங்கத்தை எடுத்தல் மற்றும் விற்பனையால் பெரிய அளவில் பணம் பார்க்கும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியம் இருப்பதை கண்டறிகிறார், இந்த தங்க சுரங்கத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள தனி மனிதனாக போராடிய ராக்கி அங்கே வேலை செய்யும் அனைவரின் நம்பிக்கையை பெற்று உலக அளவில் அதிக பணம் படைத்த மனிதராக மாறுகிறார், ஒரு கமர்ஷியல் படமாக மாஸ் நிறைந்து சொல்லப்பட்ட இந்த கதையின் அடுத்த பாகம் மாஸ் லெவலை ஹாலிவுட் படங்களின் விஷுவல் ஸ்டைலுக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்த பாகத்தில் அரசாங்கத்தால் கோலார் தங்க சுரங்க பகுதியில் ஒரு மறைக்கப்பட்ட மாநகரத்தையே ராக்கி உருவாக்கி இருப்பதை கண்டறிந்து அரசாங்கத்தின் வகையில் ஒரு பக்கம் போர் என்றால் இன்னொரு பக்கம் வில்லன்களின் கொலைசெய்யும் திட்டங்கள் என உயிரை பணயம் வைத்து ராக்கி போராடிய நாட்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.


இந்த படத்தின் மிகச்சிறந்த விஷயம் ஒரு கமர்ஷியல் படமாக பார்க்கும்போது நிறைவான ஸ்கிரீன் ப்ரெசெண்ட்டேஷன் இந்த படத்தில் உள்ளது. கதையாக எழுதப்பட்ட மற்றும் விவரிக்கப்பட்ட காட்சிகள் நிறைய படங்களில் காட்சியாக எடுக்கும்போது சரியாக வராமல் போகலாம் ஆனால் இந்த படம் கதையின் கற்பனை வளத்தை மிக சிறப்பாக திரையில் கொண்டுவந்துள்ளது. நடிப்பு, தயாரிப்பு, காட்சியமைப்பு என்று அனைத்து துறைகளும் மிக சிறப்பாக செயல்பட்ட இந்த படம் வெற்றிகளை அடைந்தத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை, மிகவும் ஸ்மார்ட்டாக எடுக்கப்பட்ட இந்த படம் மற்ற கமர்ஷியல் படங்களில் இருந்து தனித்து வெற்றியடைந்து இருக்கிறது. கேமரா வொர்க் அப்பறம் ப்ரொடக்ஷன் வேல்யூ ரொம்ப நன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்டர்நேஷனல் லெவல்லில் ஒரு படத்தின் கிளைமாக்ஸ்ல கெத்து காட்டியிருப்பது உண்மையில் வேறு லெவல். இப்போ எல்லாம் ஒரு சில படங்கள் இதுதான் மாஸ் என்று காட்ட முயற்சி பண்ணி சோதப்பிவிடுவார்கள் ஆனால் இந்த படம் ஒரு கமர்ஷியல் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சட்டப்புத்தகமே எழுதும் அளவுக்கு செம்ம டீடெயில் கொடுத்து எடுத்த படம். ரொம்ப பெஸ்ட்டான படம். கிளைமாக்ஸ்ல ஃபைட் காட்சிகள் இன்னும் கொஞ்சம் பெட்டர்ராக இருந்து இருக்கலாம் !! கொஞ்சம் கதையில் வொர்க் பண்ணி இருக்கலாம். கிளைமாக்ஸ்ல ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி முடிச்சது போல ஒரு திருப்பு முனை இருக்கிறது , ராக்கியின் காதலை கல்லறைக்கு அனுப்பி போன படத்தின் ரொமான்ஸ்ஸை அப்புடியேt காற்றில் பரக்கவிட்ட திருப்புமுனையாக கதாநாயகியை காலி பண்ணிவிட்டார்கள். இது எல்லாமே கதையாக பார்க்கும்போது கிளைமாக்ஸ்க்கு பொருத்தமாக இல்லை. ஆனால் இந்த படத்தின் நிறைய பிளஸ் பாயிண்ட்கள் இருக்கும் மைனஸ் பாயிண்ட்களையும் காலி பண்ணிவிடும். இந்த படம் பெஸ்ட் ஆஃப் பிரசன்டேஷன். கமர்ஷியல் படங்களின் பாதையில் ஒரு மைல் ஸ்டோன். கே.ஜி.எஃப் படத்தில் நான் ரசிச்ச ஒரு டீ-டெய்ல்லின்க் என்னவென்றால் இந்த படத்தில் ராக்கி எப்போது குழந்தையாக பிறக்கிறானோ அந்த நொடியில்தான் கே.ஜி.எஃப் என்ற இடத்தில் தங்கம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ராக்கி எப்போது கடைசி நொடியில் இருக்கிறாரோ அந்த நொடியில்தான் கே.ஜி. எஃப் -ன் கடைசி நொடியாக இருக்கிறது. இதுக்கு மீனிங் என்னவென்றால் ராக்கி பாய் பிறக்கும்போதே கோலார் தங்க சுரங்கத்துடன் வரலாற்று பாதையில் ஆட்சியாளராக வாழவேண்டும் என்பது டெஸ்டினியாக காலத்தால் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதுவே ரொம்ப ஸ்பெஷல்லான விஷயம்தான். இந்த படத்தை சமீபத்தில் வந்த சிலை கடத்தல் டைனோஸார்கள் படத்தோடு கம்பேர் பண்ணி பாருங்கள் இந்த படத்தின் அருமை உங்களுக்கு புரியும் !!  

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...