பொன்னியின் செல்வன் 1 - கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது, புத்தகத்தில் இருந்து சினிமாவுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் இருந்தாலும் ஒரு கதையாக வரலாற்றின் ஒரு பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்க ஒரு டிக்கெட் கொடுக்கிறது இந்த பொன்னியின் செல்வன். நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தது இல்லை. இப்போது இந்த படம் என்னுடைய பெர்சனல் ஃபேவரெட் திரைப்படமாக மாறிவிட்டது. இளவரசன் ஆதித்த கரிகாலனுக்கு நண்பராக இருக்கும் வந்திய தேவன் இலங்கையில் தற்போது இருக்கும் இளவரசன் பொன்னியின் செல்வனை அவருக்கு வரப்போகும் பேராபத்தில் இருந்து காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் கதைக்களம், கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கிஷோர், பார்த்திபன், சரத் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராய் என்று பெர்பெக்ட் செலெக்ஷன்னாக படத்தின் கதாப்பத்திரங்கள் இருப்பதோடு கலை அமைப்பு , கட்டிடங்கள் , சண்டை காட்சிகள் , திருப்பங்கள் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை இந்த படம் நிறைவாக கொடுத்துள்ளது எனலாம். இந்த படம் ஒரு சகாப்தம் போன்றது, நம்ம தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான ஒரு பிரம்மாண்டமான படத்தை நான் பார்த்ததே இல்லை. ஒரு சில படங்கள் மட்டும்தான் காமிரா வொர்க் உலகத்தரம் என்று அடித்து சொல்ல முடியும் அந்த மாதிரி ஒரு படம்தான் இந்த பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியில் பொன்னியின் செல்வன் V. வந்தியத்தேவன் என்று ஒரு மோதல் காட்சி எனக்கு ரொம்பவுமே பிடித்தமான காட்சியாக இருந்தது. 10 முறையாவது அந்த காட்சியை பார்த்து இருப்பேன். ஒரு பழங்கால பேரரசர்களின் காலத்து படம் என்பதால் கலை மற்றும் கட்டிட அமைப்புகள் மிக மிக சிறப்பாக இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள். நூறுக்கும் மேற்பட்ட பின்னணி நடிகர்கள் இருந்தாலும் காட்சியும் காமிரா வொர்க்கும ஒரு செகண்ட்க்கு கூட சொதப்பவில்லை. கடைசியாக ஒரு விஷயம் மட்டும் சொல்லவேண்டும் என்றால் இந்த படம் நம்ம சினிமா வரலாற்றை இன்னொரு மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுபோன படம் என்றுதான் நான் சொல்லவேண்டும் நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக