ஒரு சினிமா படத்தை எப்படி பார்க்க வேண்டும் ? ஒரு படம் தியேட்டர்ல பார்க்கும்போது நல்ல ஸீன்கள் வந்துச்சுனா கண்டிப்பாக கைதட்டனும் , உங்களுக்கு பிடித்து இருந்தால் அந்த ரசனையை கண்டிப்பாக வெளிப்படுத்தனும் , ஆனால் டிஜிட்டல் முறையில் படம் பார்க்க ஒரு சில விஷயங்கள் கண்டிப்பாக இருக்கிறது, இப்போது இருக்கும் கலாச்சாரத்தில் படம் என்பது குறைந்த பட்சம் 1 மணி 35 நிமிடம் ரன்னிங் லெந்த் இருக்கலாம் அதிகபட்சம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்னிங் லெந்த் இருக்கலாம், ஆனால் படங்களை வெறும் சுருக்கப்பட்ட விமர்சனம் , பாடல்களை தவிர்த்துவிட்டு படம் மட்டும் பார்த்தல் போன்ற வகைகளில் பார்ப்பதால் நேரம் உங்களுக்கு மிச்சம் ஆகலாம் ஆனால் சினிமா என்பது உங்களுக்காக ஒரு ஒரு காட்சியாக எடுக்கப்பட்டது என்றால் முழுமையாக பாருங்கள், ஒரு சில காட்சிகளை விட்டுவிட்டு படம் பார்த்துவிட்டு நானும் படம் பார்த்துவிட்டேன் என்று சொல்ல கூடாது, சில படங்கள் பார்க்க பார்க்க இண்டரெஸ்ட்டுடன் கதை சென்றுக்கொண்டு இருக்கும், இன்னும் சில படங்கள் போர் அடிக்கும் ஆனால் நான் சொன்ன நிபந்தனை நல்லதோ கெட்டதோ அந்த படத்தை முழுமையாக பார்க்க உங்களுக்கு நன்றாக இருக்கும், இது அவசரமான காலம், என்னால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பொறுக்க முடியாது என்ற வகையில் இருந்தால் கண்டிப்பாக மறுமுறை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிடுவார்கள், அடிப்படையில் நிறைய யுட்யூப் சேனல்கள் சுமாரான தூங்கவைக்கும் படங்களுக்கு கூட சுருக்கமான விவரிப்புகள் கொடுக்கின்றனர், சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்கலாம் இருந்தாலும் ரெகமண்ட் பண்ணக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்த படம் உங்களுக்கு சினிமா படமாக பார்த்தாலே நல்லது, சுருக்கமான விவரிப்பு பார்த்தவர்கள் அந்த படத்தை பார்க்காமல் பார்த்துவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாம், ஒரு படம் என்பது ஒரு பெரிய உழைப்பு அதனால் அந்த உழைப்பு காலத்துக்கும் நிற்க வேண்டும் என்றால் படத்தின் தயாரிப்பு குழுவுக்கு இலாபகரமான வகையில் ஒரு படத்தை பாருங்கள், கதையை புரிந்து கொள்ளுங்கள் , கதை சுருக்கம் கதையாக ஆகாது, கதை சுருக்கம் முழு நாவலாக ஆகாது, ஆகவே சுருக்கமாக படம் பார்ப்பதை ஒரு ஆப்ஷன் என கருதுங்கள், கிளைமாக்ஸ் வரை சுருக்கமாக படம் பார்த்துவிட்டால் அதன் பின்னால் முழுமையாக படம் பார்க்கவே மனதுக்குள் தோன்றாது, மனது அடுத்த கதை சுருக்கத்தை தேடி செல்ல ஆரம்பித்துவிடும், ஒரு படம் என்பதை அந்த படத்தின் ரன்னிங் லெந்த் மொத்தமாக செலவு செய்யும் வகையில் காலத்தை கொடுத்துதான் பார்க்க வேண்டும் வேறு வழி இல்லை. இது எல்லாமே நினைவுகளை ஹாண்டில் செய்யும் மூளையின் கெமிக்கல் இம்பேலன்ஸ் மட்டும்தான், ஆனால் சினிமா என்பது கதைகளை காட்சிகளாக ரசிப்பதற்காக தானே !
இணைப்பு : தி டைட்டன் [டிரெய்லர்]
No comments:
Post a Comment