இந்த உலகத்திலேயே ரொம்ப மேஜிக்கலான மாயாஜாலாமான வார்த்தைகளை தெரிஞ்சுக்கனுமா ? இந்த இரண்டு வார்த்தைகள்தான் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம். வெறும் இந்த இரண்டு வார்த்தைகள் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பது உங்களுக்கு கொஞ்சம் நேரம் பொறுமையாக யோசித்து பார்த்தால் கூட புரிந்துவிடும். அது என்ன ஹாரி பாட்டர் படங்களில் வருவது போன்று பறக்கும் துடைப்பத்தில் அமர்ந்து பறந்து செல்ல வைக்கும் வார்த்தைகள் என்று யோசிக்க வேண்டாம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. முதல் வாரத்தை "LIKE" மற்றும் இரண்டாவது வாரத்தை "DISLIKE" - இந்த வார்த்தைகளை பொறுத்துதான் வாழ்க்கையில் நிறைய முடிவுகள் எடுத்து வாழ்க்கையில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கிகொள்கிறோம். உதாரணத்துக்கு ஒருவருக்கு திரைப்படம், இசை, நடனம் என்று வேறு வேறு துறைகளில் பணிபுரிய விருப்பம் இருக்கலாம், ஆனால் அந்த துறையில் போதுமான வெற்றியை அடைய முடியாமல் போகலாம். அதுவே அதே மனிதருக்கு பங்கு சந்தையில் அல்லது எலக்டிரானிக்ஸ் துறையில் அதிக திறமை இருக்கலாம் , ஒரு வேளை அவருக்கு பிடித்த அந்த துறைகளை விட்டுவிட்டு பிடிக்காத இந்த துறைகளை தேர்ந்தெடுத்து வேலை செய்தால் வாழ்க்கை அருமையாக இருந்திருக்கலாம், நெட்பிலிக்ஸ்-ல் ஸ்டிரேஞ்சர் திங்க்ஸ் பார்க்கலாமா ? அல்லது தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் பார்க்கலாமா ? இல்லையென்றால் இணையத்தில் ல் "MADAN GOWRI" அவர்களின் காணொளியை பார்க்கலாமா ? என்று எந்த முடிவு எடுத்தாலும் விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கிறோம், இது நல்ல விஷயம்தான் இருந்தாலும் பொழுதுபோக்கு அல்லது அதிகமான பயன்களை கொடுக்காத விஷயங்களில் நேரத்தை செலவிடுவதன் மூலமாக நேரத்தை அதிகமாக இழந்துவிட்டால் நேரம் மறுபடியும் கிடைக்காது, இதனால்தான் LIKE அல்லது DISLIKE என்ற வார்த்தைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டாம். இடம் பொருள் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுப்பதே சிறந்த விஷயம் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு அலைபேசியில் பணம் செலுத்தும் காலகட்டங்களில் வங்கியில் சென்று படிவம் எழுதுவது ஒரு BORING ஆன விஷயமாக இருக்கலாம் ஆனால் இந்த உலகத்தில் சில விஷயங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அவைகளை விருப்பு வெறுப்புகளை கடந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...

1 கருத்து:
1 கோடி சம்பாதிக்கும் வழிகள்
₹100 மதிப்புள்ள பொருளை 1,00,000 பேருக்கு விற்றால் | கோடி சம்பாதிக்கலாம்.
₹200 மதிப்புள்ள பொருளை 50,000 பேருக்கு விற்றால் 1 கோடி சம்பாதிக்கலாம்.
₹250 மதிப்புள்ள பொருளை 40,000 பேருக்கு விற்றால் 1 கோடி சம்பாதிக்கலாம்.
400 மதிப்புள்ள பொருளை 25,000 பேருக்கு விற்றால் 1 கோடி சம்பாதிக்கலாம்.
₹500 மதிப்புள்ள பொருளை 20,000 பேருக்கு விற்றால் 1 கோடி சம்பாதிக்கலாம்.
₹1000 மதிப்புள்ள பொருளை 10,000 பேருக்கு விற்றால் 1 கோடி சம்பாதிக்கலாம்.
கருத்துரையிடுக