அறிவியல் திரைப்படங்கள் / EDGE OF TOMORROW - திரை விமர்சனம் !!!
இந்த படத்தின் கதை :
பூமியின் மீது ஒரு சக்திவாய்ந்த வேற்றுகிரகத்திலிருந்து வந்த உயிரினங்கள் படையெடுத்து போரிடுகின்றனர். நிறைய மனிதர்கள் களத்தில் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் நிறைய ஆட்கள் தேவை என்னும் பட்சத்தில் அமெரிக்காவின் பல இடங்களில் இருந்து காவல் படைக்காக நிறைய பேர் அனுபப்படுகின்றனர்.
ஆனால் இந்த பிரச்சனைகளை பற்றி மேலோட்டமான முறையில் மட்டுமே தெரிந்துகொண்ட ஒருவராக இருந்தாலும் இன்னும் சொல்லப்போனால் போதுமான போர் அனுபவம் இல்லாமல் இன்று வரைக்கும் நிர்வாக பொறுப்பில் இருந்து மட்டுமே வேலை பார்த்துக்கொண்டு இருந்ததாலும் இப்போது கடுமையான இந்த போராட்டத்தில் கதாநாயகன் வில்லியம் கேஜ் சண்டை போடுவதற்காக அனுப்பப்படுகிறார்.
நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் களம் இறக்கப்பட்டு அங்கே சண்டை போடும் ராணுவத்துடன் இணைந்து போரிடும்போது இப்போது மற்றவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஒரு இப்போது பூமியை கைக்குள் கொண்டுவர முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு பெரிய ஏலியன் உயிரினங்களின் படையெடுப்பில் என்ன செய்வது என்றே தெரியாமல் அவரால் முடிந்தவரைக்கும் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கவே கதையில் பெரிய டுவிஸ்ட் வருகிறது.
ஒரு பெரிய நீல நிற இரத்தம் உள்ள MIMIC என்ற ஏலியன் உயிரினத்தின் இரத்தத்தால் தாக்கப்பட்டு கரைந்து போனதால் உயிர் தியாகம் செய்தாலும் அடுத்த நாள் மறுபடியும் காலை பொழுதில் கண்கள் விழிக்கிறார். அந்த நாளின் அனைத்து சம்பவங்களும் மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டே இருக்கிறது !! காரணம் என்ன ? இங்கேதான் கதையில் ஒரு பெரிய சர்ப்ப்ரைஸ் !! இந்த உயிரினங்கள் மனிதர்களை விட ரொம்ப ரொம்ப புத்திசாலிகள். இவைகளில் தலைமை தாங்கும் நீல நிற MIMIC களில் ஒரே ஒரு MIMIC இறந்து போனாலும் அந்த நாளையே மறுபடியும் இன்னொரு முறை TIME TRAVEL பண்ணி மாற்றும் மாயாஜால சக்தி இந்த MIMIC களின் இரத்ததில் இருக்கிறது. இப்போது கதாநாயகன் உடம்பில் இந்த இரத்தம் இருப்பதால் கதாநாயகன் இப்போது டைம் டிராவல் பண்ண முடியும் !!
இந்த படம் வெளிவந்த காலத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் பக்காவான ஆக்ஷன் கலந்த ஒரு அருமையான படமாக இருந்தது. TOM CRUISE மற்றும் EMILY BLUNT இன் கேரக்டர் அமைப்பு வேற லெவல். பொதுவாக ஏலியன்களின் நேரடியாக அட்டாக் பண்ணும் காட்சிகளை நிறைய படங்களில் பார்த்து இருப்போம். ஆனால் இந்த படத்தில் பார்க்க புதுமையாக இருக்கும். இன்னுமே நிறைய விஷயங்களை படத்தில் OPEN ENDING -ல் தான் விட்டு இருக்கிறார்கள் ஆனால் படம் பாக்கும்போது சயின்ஸ் ஃபிக்ஷன் பிரியர்களுக்காக ஒரு STORYLINE கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ படமா என்று கேட்டால் அப்படி சொல்ல முடியாது ஆனால் ஒரு தரமான SCI-FI ஆக்ஷன் அனுபவத்தை இந்த படம் உங்களுக்கு கொடுக்கும். இந்த படத்துடைய அடுத்த பாகம் LIVE - DIE - REPEAT படம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் ப்ரொடக்ஷன்னில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment