Monday, August 13, 2018

ஒரு முக்கியமான விஷயம் - ஒரு பக்க கதை. - [REGULATION-2024-00002]






இந்த உலகத்தில் அட்வைஸ் மட்டும்தான் இலவசமாக கிடைக்கும் அதனால இந்த அட்வைஸ் கொஞ்சம் கேட்டுக்கொள்ளுங்கள்.. வாழ்க்கை மிகவும் சிறியது.. இங்க சந்தோஷமும் வேலைக்கு ஆகாது. சோகமும் வேலைக்கு ஆகாது. இமேஜினேஷன் ஆன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சம்பளமே இல்லாமல் வேலைக்கு போறதுக்கு சமமானது. காரணம் என்னவென்றால் கிடைக்கபோவது முக்கியமே இல்ல. அதுக்கு அப்பறம் குறிப்பிட்ட டைம்ல ஒரு வேலைய முடிக்க சொல்வார்கள். உதாரணத்துக்கு 123 பக்கம் எழுத வேண்டும் என்றால் கண்டிப்பாக 5 மணி நேரத்துக்கு மேல் தேவைப்படும் ஆனால் வெறும் ஒரு மணி நேரத்தில் எழுத சொல்வார்கள். இந்த மாதிரி டைம் லிமிட் இருக்கும் வேலைகளை செய்ய வேண்டாம். இதை விடவும் பெரிய கொடுமை வேலையே செய்ய முடியாத இடத்தில் வேலையை செய்ய சொல்வது. கொட்டும் மழையில் உப்பு வியாபாரம் செய்ய சொல்வது போன்றது. இது எல்லாம் எதற்காக பண்ண சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. இங்கே கெட்டவர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள். சினிமா படங்கள் போல கான்கரீட் சுவரை ஒரே அடியில் உடைப்பது எல்லாம் நிஜ வாழ்க்கையில் இருக்காது, இந்த உண்மையான வாழ்க்கை ஒரு ஸ்டீல் சுவரை உடைப்பதுக்கு சமமான விஷயம். இந்த உலகத்தில் அன்பை விலை கொடுத்து வாங்கலாம். கோபம் காட்டி வாங்கலாம். கெஞ்சியும் வாங்கலாம் அப்படி எல்லாம் வாங்கிய அன்பு நிலைக்கவே நிலைக்காது. உண்மையா நிலைக்கும் அன்பு இந்த மனம், உடல், செயல் என்று எதனை சார்ந்தும் வராது. அது ஒரு மாயாஜாலம். அறிவியலால் சொல்ல முடியாத ஒரு ரேண்டம்னேஸ். பொழுது போக்கு என்றால் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள மட்டும்தான். இந்த காலத்தில் சீரியல்களை பாருங்கள், ஒரு குடும்பம், அங்கே ஒருவருக்கு பிரச்சனை. அந்த பிரச்சனை முடித்து வெக்கப்பட்டதும் அடுத்த பிரச்சனை. அந்த பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சனை. இப்படி சென்றுகொண்டே இருக்கும். ஒரு மேஜிக் செய்து பிரச்சனைகளை சந்திக்கும் அந்த கதாப்பாத்திரத்துக்கு வங்கி கணக்கில் ஒரு பெரிய தொகையாக கொடுத்துவிட்டால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும். அவ்வளவுதான் இந்த உலகத்தில் வாழ்வின் ரகசியம். அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். அறிவுக்கு பஸ் டிக்கெட் கொடுத்து வெளியூர் அனுப்பிவிட்டு பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்வது கொஞ்சம் கடினமானது. கட்டுரை நிறைவு செய்யப்பட்டது. அவ்வளவுதான். இப்படிக்கு உங்கள் - WRITER OF THE DREAMS

No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...