Friday, August 31, 2018

SIMPLE TALKS - LIFE IS AWSOME [REGULATION-2024-00016]




"சரித்திரத்தை ஒரு நிமிஷம் திரும்பி பாருங்க. அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒண்ணுதான். HISTORYன்னு ஒரு விஷயம் உருவாக யாராவது ஏதாவது பதிவு பண்ணியிருக்க வேண்டும்.. இங்கதான் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். 2013 களில் பட்டன் ஃபோன்கள் வைத்து இருப்பது அரிது, ஆன்ட்ராய்ட் ஃபோன்கள் அதனினும் அரிது, அப்போதுதான் இந்த கேம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது,. அதுதான் CANDY CRUSH SAGA.. நண்பர்கள் இந்த விளையாட்டை விளையாடும்போது ஒரு ஒரு லெவலாக முடிக்க நிறையவே கஷ்டப்பட வேண்டியிருந்தத்து. இந்த ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டு அந்த காலத்தில் அவ்வளவு பிரபலமாக இருந்தது. அப்போது எல்லாம் EDGE இணையதளம். அதிகபட்ச இணைய வேகமே 30 முதல் 40 கிலோபைட் வரைக்கும்தான். (ஃபேஸ்புக்கில் ப்ரோஃபைல் பிக்சர் அப்லோட் பண்ணவே 15 நிமிடங்கள் தேவைப்படலாம்) - இந்த இணைய வேகத்தில் யு ட்யூப் காணொளிகள் எல்லாம் கனவில் கூட நடக்காத விஷயம். ஆனால் ஆன்ட்ராய்ட் சரித்திரத்தை மாற்றிய இன்னொரு விளையாட்டு CLASH OF CLANS. அந்த காலத்தில் வாட்ஸ்ஆப் அறிமுகத்தை கடந்து இன்டர்நெட் பயன்படுத்த இன்னொரு காரணம் இருந்தது என்றால் அது இந்த CLASH OF CLANS-தான், இந்த விளையாட்டு. அருமையான கிராபிக்ஸ் அமைப்பு மற்றும் அட்டகாசமான கேம்-பிளே வசதிகளுடன் ஆன்லைன் விளையாட்டுகளின் உலகத்தில் ஒரு மைல்கல்லை உருவாக்கிய விளையாட்டு என்றால் மிகையாகாது. 2013 - 2014 காலங்களில் மறக்க முடியாத ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டுக்கள் என்று இந்த விளையாட்டுக்களை கண்டிப்பாக சொல்லலாம். ஃபேஸ்புக் அக்கவுண்ட் அல்லது ஜிமெய்ல் அக்கவுண்ட் உருவாக்க வேண்டும் என்றால் ஒரு ஸ் டேட் பாங்க் அக்கவுண்ட் உருவாக்குவது போல அவ்வளவு கடினமானது என்று நினைத்துக்கொண்டு இருந்த காலம் அது. ஃபோன்க்கு RINGTONE வெக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு பாடல் பதிவிறக்கம் செய்ய நெட் பேக் மொத்தமும் முடிந்துவிடும் மாயாஜாலங்கள் அந்த காலத்தில் நடக்கும். அதெல்லாம் வேற லெவல் நினைவுகள். இன்றைக்கும் யோசித்து பார்க்கவே அதிசயமாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு எல்லாம் எல்லைகளை கடந்துவிட்டது. " IMAGE CREDITS ; NATILIA SLASTIKOVA - PEXELS

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...