Friday, August 17, 2018

CINEMATIC WORLD - 001 - INTERSTELLAR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00005]



இந்த திரைப்படத்தில் கதை என்னவென்றால் பூமியில் கொஞ்சம் கொஞ்சமா பூமியை அச்சுறுத்தும் தூசுப்புயல் போன்ற ஒரு விஷயத்தால் விவசாயம் பண்ணவே முடியாத அளவுக்கு பூமியில் இருக்கும் தாவரங்கள் மற்றும் பயிர்கள் எல்லாமே  பாதிப்பு அடைகின்றன. இப்படியே போனா என்னப்பா அர்த்தம் இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்று யோசித்து இனிமேல் இன்னொரு பிளானெட்க்குதான் போகணும் என்று முடிவு பண்ணுகிறார்கள்.  ஒரு விண்கலம் அமைத்து ஸ்பேஸ்ல பூமியை போன்ற வேறு  ஒரு கிரகத்தை கண்டறிந்து அங்கே செல்லும் முயற்சியில் ஆராய்ச்சி குழுவின் உதவியுடன் கதாநாயகரின் விண்வெளி குழுவின் விண்கலத்தின் மூலமாக செல்கின்றனர். ரொம்ப தூரத்துக்கு அப்பால் பூமியை போன்ற கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு கிரகத்துக்கு WORMHOLE எனப்படும் போர்டல்களின் மூலமாக செல்ல முயற்சிக்கின்றனர் .. (SPACE TIME என்று ஒரு CONCEPT இருக்கிறது , தெரியாமல் பார்த்தால் மண்டை காய்ந்துவிடும்)

இந்த முயற்சியில் அந்த கிரகத்தை சென்றடைந்த பிறகு ஏற்படும் திருப்பங்களும் அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் தான் இந்த INTERSTELLAR திரைப்படத்தின் கதை .. அறிவியல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக பிடிக்கும் இன்டர்ஸடெல்லார் படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து இந்த படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன பராக்டிக்கல் எஃபக்ட்ஸ்ஸும் வேற லெவல். ஒரு ஏலியன் உலகத்தை மிகவும் தெளிவாக இந்த படம் மட்டும்தான் காட்டியுள்ளதா என்று நீங்கள் கேட்டால் கம்பேர் பண்ண நிறைய படங்கள் இருக்கதான் செய்கிறது. உதாரணத்துக்கு ப்ரோமித்தியஸ் [PROMETHEOS] மற்றும் ஏலியன் - கோவேன்னன்ட் [ALIEN - COVENENT] படங்கள் உண்மையிலேயே வேற லெவல்லில் வேர்ல்ட் பில்ட்டிங் கொடுத்து இருக்கும் ஆனால் இந்த படங்களில் நிறைய கிரிஸ்டோபர் நோலன் ஸ்டைல் திருப்பங்கள் எதிர்பார்க்க முடியாது , இந்த படத்தில் இருக்கும் தூசுப்புயல் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய அலைகள் கொண்ட சுனாமியால் விண்வெளிக்கப்பல் தாக்கப்படும் காட்சிகள் எல்லாமே வேற லெவல்லில் இருக்கும், பொதுவாக சயின்ஸ் படித்தவர்கள் இந்த டுவிஸ்ட் புரிந்துகொள்ள முடியும். XYZ என்று மூன்று ஆக்ஸிஸ் இல்லாமல் நான்காவதாக டைம் ஆக்ஸிஸ் மூலமாக டைம்மில் வேரியேஷன் கொண்டுவந்து இருப்பது உண்மையிலேயே வேற லெவல். ... இப்படி எல்லாம் நம்ம தலைவனால் மட்டும்தான் யோசிக்க முடியும் !!

இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் , ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். இந்த படம் ஸ்பேஸ் படங்களுக்கு ஒரு மைல் ஸ்டோன் என்றும் சொல்லலாம். டைம் என்பதும் பரிமாணம் என்பதும் கொஞ்சம் கம்பிளிகேட்டெட் ஆன கான்செப்ட்கள் ஆனால் கடைசி காட்சியில் விஷுவல்களாக கொண்டு வந்தது ரொம்பவே சூப்பராக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ரொம்பவுமே சிறப்பான விஷூவல் எஃபெக்ட்ஸ் இந்த படத்துக்கு இன்னமும் ஒரு பெரிய சப்போர்ட் ஆக இருக்கிறது. இந்த மாதிரி நிறைய தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை வெளிவந்த நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைத்தளம் NICE TAMIL BLOG - ஐ கண்டிப்பாக சந்தா பொத்தான் மற்றும் ஃபாலோ பொத்தான்களை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளவும். இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். வலைப்பூவின் கமிட்டி சார்பாக வாழ்த்துக்கள். 
 



No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...