Tuesday, August 14, 2018

BATTERY OF HEART - SOME TAMIL MOTIVATION TALKS - யோசிங்க !! யோசிங்க !! [REGULATION-2024-00004]



ஹார்ட்-லே பேட்டரி சார்ஜ் தான் ஆல் இஸ் வெல் - தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல். இந்த உலகத்தில் தோல்வி அடையற எல்லோரையும் பார்க்கும்போது அவங்களுடைய தோல்விக்கு யார் காரணம் என்று பார்க்கும்போது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் அந்த வாழும் சூழநிலையுமே காரணம். ஒரு முயற்சியை தொடங்கும்போதே நீங்கள் செல்ல கூடாத திசைகள் . கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு என்று சொல்ல நிறைய பேர் இருந்தால் கடைசியில் என்னதான் செய்ய முடியும் ? நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றால் இங்க நடக்கக்கூடிய எந்த ஒரு சம்பவத்துக்கு பின்னாலும் ஒரு அட்வாண்டேஜ் இருக்கும். அதுதான் அறிவியல். என்னைக்குமே நம்ம நம்பிக்கையை விட்டுக்கொடுக்க கூடாது. மனசுக்கு கஷ்டமாக இருக்கலாம். வாழ்க்கை ரொம்பவே மோசமாக இருக்கலாம். இங்க யாரிடம் உதவி கேட்டாலும் அவர்களால் செய்ய முடிந்தும் செய்ய முடியாமல் போகலாம். இந்த உலகத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். வாழ்க்கையில் கொஞ்சம் இண்டரெஸ்ட்டிங் ஆன புதிய புதிய சம்பவங்கள் நடக்கவில்லை என்றால் நம்ம வாழ்க்கைக்கும் தொலைக்காட்சி சீரியல்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது இல்லையா ? இந்த உலகத்தில் பிறந்ததில் இருந்து இன்றைக்கு வரைக்கும் பார்க்காத ஒரு சம்பவம் நாளைய நாள் நடக்கலாம். ஆனால் அந்த நாளைய நாள் நல்ல விஷயம் நடந்தாலும் இல்லையென்றால் கெட்ட விஷயம் நடந்தாலும் எல்லாவற்றையும் எதிர்பார்த்து தயாராக இருக்க வேண்டும். தி எக்ஸ்ட்ராவரடினரி ஜர்னீ ஆஃப் ஃபகிர் என்ற தனுஷ் நடிப்பில் வெளிவந்த படத்தில் தமிழ் மொழியில் பார்க்கும்போது ஒரு காட்சியில் ஒரு வசனம் வரும் (இந்த படத்துடைய தமிழ் மொழி பதிப்பு ஆங்கில மொழியை விட நன்றாக இருக்கும்.. இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்) - "உன்னுடைய வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு" - இதுதான் வாழ்க்கையின் உண்மை. வாழ்க்கை என்றால் இப்படிதான் இருக்கும். சினிமாட்டிக் ஆன முன்னேற்றம் எல்லாம் வாழ்க்கையில் அதுவாக நடக்கத்துங்க , நாம்தான் நடத்திக்காட்ட வேண்டும்.

No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...