வாழ்க்கையில் தோல்வி அடைவது எப்படி ? - HOW TO FAIL IN THIS LIFE - EXPLAINED IN TAMIL
இங்கே எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியடைவது எப்படி என்று கட்டுரை எழுதுவார்கள் ? ஆனால் நான் கொஞ்சம் DIFFERENT ஆக வாழ்க்கையில் தோல்வி அடைவது எப்படி என்று ஒரு சின்ன நகைச்சுவையான கட்டுரை எழுதுகிறேன் - இந்த கட்டுரையின் நோக்கம் வாழ்க்கையில் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் ஒரு பொசிட்டிவிடியுடன் சந்திக்க வேண்டும் என்பதே - அதுதான் காரணம்.
1. பயனற்ற விஷயங்களில் நேரத்தை செலவு செய்யுங்கள் :
வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் நேரமாக இருந்தாலுமே வேஸ்ட் பண்ண கூடாது. ஆனால் இன்னைக்கு காலையில் எழுந்து கண் விழித்ததும் ஸ்மார்ட்ஃபோன் பார்க்கும் உலகம். வீடியோ கேம்களில் அதிகமாக டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். வீடியோ கேம்ஸ் நல்ல விஷயம்தான் ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் விளையாடினாலும் சலிப்பு தெரியாமல் இருப்பதால் கடைசியில் நீங்களே யோசிச்சு பார்க்கும்போது கொஞ்சம் அதிகமாவே நேரத்தை ஸ்பெண்ட் பண்ணிட்டேனோ அப்படின்னு உங்களுக்கே மனதுக்குள் தோன்றும். இன்னொரு விஷயம் சீரியல்ஸ் - கொஞ்சம் கொஞ்சம் நல்ல சீரியல்கள் - நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் - ஃபேமஸ் ஆன நிகழ்ச்சிகள் கூட இருக்கிறது. தொலைக்காட்சி தொடர்கள் எனக்கும் கொஞ்சம் பிடிக்கும் என்பதால் சமீப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் எப்போதாவது புதிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சம் நல்ல கருத்துக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சி சீரியல்கள் பொழுதுபோக்குதான். குறைவான செலவில் அதிகமாக நேரத்தை செலவு செய்ய இது எல்லாமே பெஸ்ட் ஐடியா !!
2. பயனற்ற காணொளிகளை பாருங்கள்
OKEY.. இந்த பயனில்லாத காணொளிகள் எல்லாம் வேண்டாம் என்றால் நிறைய பயனுள்ள விஷயங்கள் யுட்யூப் இணையத்தளத்தில் இருக்கிறது. உதாரணமாக சாதித்தவர்களின் இன்டர்வியூக்கள். நிறைய இடங்களை சுற்றிப்பார்க்கும் VLOGS, புது புது TOPICS பற்றிய பேச்சு, நியூஸ் சேனல்கள். இன்டர்நெட் கோர்ஸஸ் - LANGUAGE SPEAKING - தகவல்கள் - TED ED - DOCUMENTRY - INFOTAINMENT என்று நிறைய பயனுள்ள விஷயங்கள் இருக்கிறது. ஒரு இன்டர்வியூ பார்க்கும்போது வெற்றி அடைந்தவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் எப்படி சாதித்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்- அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும்போது இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் . இன்னொரு நல்ல விஷயம் ஆடியோபுக்ஸ் கூட கேட்கலாம். இல்லையென்றால் இணையதளங்களில் பயனுள்ள கட்டுரைகள் படிக்கலாம்.
3. LONG TERM PLANS - இருக்க வேண்டாம் - இன்னும் சொல்லப்போனால் PLANS - இருக்கவே வேண்டாம்.
எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் - உதாரணத்துக்கு உங்களுக்கு பிடித்த ஒரு துறையை அதாவது DEPARTMENT -ஐ தேர்ந்தெடுக்கும்போது கண்டிப்பாக போட்டிகள் நிறைய இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த போட்டியும் பொறாமையும் இருக்கும் உலகத்தை நாம் பார்த்துதான் ஆகவேண்டும். பொதுவாக வெற்றி அடைபவர்கள் எல்லோருமே அடுத்து என்ன பண்ணலாம் ? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருக்க மாட்டார்கள். இங்கே சொல்லை விட செயலுக்குதான் அதிக மதிப்பு இருக்கும். வாழ்க்கையில் எதிர்காலம் சார்ந்த கனவுகளையும் கற்பனைகளையும் நிறைய சேர்த்துக்கொண்டாலும் அந்த கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக செயல்கள் இருக்க வேண்டும். போதுமான திட்டம் இல்லாமல் அனுபவம் சார்ந்த முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும் இருந்தாலும் திட்டமிடல் எப்போதுமே நல்லது.
4. மனதுக்குள் மாற்றங்களை உருவாக்குவதை பற்றி கனவில் கூட நினைக்க வேண்டாம்
வாழ்க்கையில் நம்முடைய மனதை எப்போதுமே நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த விஷயம் எனக்கு பிடிக்கும் - இந்த விஷயம் எனக்கு பிடிக்காது என்று மனதுக்குள் நிறைய விஷயங்களை விருப்பு வெறுப்புகளாக கொண்டிருந்தாலும் வெற்றி அடைந்த மனிதர்களை கேட்கும்போது மனதை மாற்றிக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றியை அடைந்து இருப்பார்கள். ஒரு படம் பார்க்கிறோம். அந்த படத்தின் காட்சிகள் சோகமாக இருப்பதால் அந்த படம் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது. வாழ்க்கையும் அப்படிதான். உண்மையான வாழ்க்கையை பாருங்கள் இங்கே ஒரு ஒரு மனிதருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பிரச்சனையை சரிசெய்ய முடிவில்லை என்பதாலோ அல்லது அந்த பிரச்சனையை சரிசெய்ய விருப்பம் இல்லை என்பதாலோ அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் பிரச்சனை பெரியதாக மாறிவிடும். இதனால்தான் வாழ்க்கை உங்களுக்கு ஒரு செயலை கொடுத்தால் அந்த செயலை செய்துவிடுங்கள். இல்லையென்றால் பிரச்சனைதான். மனதை எப்போதுமே மாற்றிக்கொள்ளுங்கள்.
5. இங்கே ஒருஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்
கொஞ்சம் யோசித்து பாருங்கள் வாங்கும் சம்பளத்தை விட கடன் தொகை அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்த ஸ்டெப் எடுக்க வேண்டும் என்றால் கவனமாகததான் எடுக்க வேண்டும். ஒரு திரைப்பட இயக்குனராக முயற்சிக்கும் ஒருவர் பேப்பர் பேனா எடுத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதும்போது ஒரு கிரியேட்டிவான கதைக்களத்தை உருவாக்க முடியவில்லை என்றால் அங்கே அவர் தெரிந்துகொள்ள வேண்டியது கதைகளை எழுதுவதில் வெற்றியை அடைய முடியவில்லை என்றால் இன்னும் நிறைய துறைகள் இருக்கிறது , வேறு துறைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக செயல்பட்டாலும் சாதிக்க முடியும் என்பதுதான். மோட்டிவேஷன் என்று ஆயிரம் கருத்துக்கள் சொல்லலாம் ஆனால் உண்மையான வாழ்க்கையில் ஃபாலோ செய்வது மிகவும் கடினமானது. உதாரணத்துக்கு பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் ஒரு ஒருவருடைய தனிப்பட்ட செயலால் மட்டுமே முடியாது. நிறைய பேருடைய செயல்களும் சேர்ந்ததுதான். வாழ்க்கையில் எப்போதும் பொசிட்டிவிடி இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment