ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான். அன்றும் அப்படித்தான். மந்திரி ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான். மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார். "பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!" சற்றே யோசித்த அரசன், “பத்து நாட்கள்தானே... சரி” என அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார். அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார். முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார். பத்து நாட்கள் முடிந்தது. அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான். சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான். அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன. "இது எப்படி சாத்தியம்?" அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார். "அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா?" மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன், இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.இந்த உலகத்தில் கொஞ்சம் பேருக்கு என்ன சொன்னாலும் புரியாத சாக்கடைதான் புத்தியாக இருக்கும். இவர்களை எல்லாம் எதுவுமே பண்ண முடியாது !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
இணைய காவியம் - #3
Step 1: Understand YouTube Automation YouTube automation involves creating and managing a YouTube channel with minimal human involvement. Th...
-
1. Vimeo: A popular video-sharing platform that focuses on creative professionals and businesses. 2. Dailymotion: A video-sharing platf...
-
1. Freelancing: Offer services like writing, graphic design, programming, and more on platforms like Upwork, Fiverr, and Freelancer. 2. O...
No comments:
Post a Comment