செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

ARC - 107 - நம்பிக்கை அதானே எல்லாம் !

 

\\


ஒரு நாள் மாலையில் வாக்கிங் முடித்துக் கொண்டு, ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென, மழைச் சாரல் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான், மனைவி பாலத்தை வந்தடைந்தார். மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால், மனைவி கயிற்று பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு மின்னலும், இடியும், சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது, கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள். அவள் கணவனோ திரும்பியே பார்க்கவில்லை. அவளுக்கு அழுகையாய் வந்தது இப்படி பயந்துபோய் அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்? திரும்பி கூட பார்க்கவில்லையே! என மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள். பாலத்தை கடக்கும் போது, இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள். கணவரை கோபத்தோடு பார்க்கிறாள். அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை மிகுந்த சிரமப்பட்டு தனி ஆளாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் மட்டும் தாங்கி பிடிக்காமல் விட்டிருந்தால், பாலத்தோடு அவன் மனைவியும் பள்ளத்தில் வீழ்ந்து மாய்ந்திருப்பாள். அதை பார்த்த அவள், கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள்! நம்மோடு இருப்பவர்களுடைய பாதுகாப்புக்காக நாம் எப்போதுமே போராடுகிறோம் ஆனால் சம்மந்தப்பட்ட ஆட்கள்தான் நம்முடைய அன்பை புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள் !


கருத்துகள் இல்லை:

SCIENCE TALKS - SUPER ABSORBING POLYMER - RISE AND FALL !!

ORBEEZ எனப்படும் நீரில் ஊறி பெரிதாகும் வண்ணமயமான தண்ணீர் ரப்பர் பந்துகள் 2010களில் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. “சூப்பர் அப்சார்பன்ட் ...