நிறைய நேரங்களில் ஒரு நிர்வாகம் என்பது வேலைக்காரர்களோடு வேலைக்காரர்களாக சேர்ந்து பணியாற்றுவதில் மட்டும் தான் உள்ளது.
தான் தான் முதலாளி என்ற ஆணவம் நிறைய நேரங்களில் வேலைக்காரர்களுக்கு எதிராக கூட திரும்பலாம். காரணம் என்னவென்றால் அதிகப்படியான முதலாளித்துவம் அவர்களுக்கு அதிகப்படியான பணத்தை கொடுத்து விடுகிறது இந்த குணம் கட்டுப்பாட்டற அதிகாரத்திலும் மனிதர்களையும் மனிதத்தன்மையையும் இல்லாமல் நடத்தலாம் என்ற போக்கையும் இவர்களுடைய மனதுக்குள் உருவாக்கி விடுகிறது. மேலும் இந்த முதலாளித்துவமான வாழ்க்கை இவர்களுக்கு பேராசை உருவாக்கி விடுவதால் இவர்களுக்கு கீழே வேலை பார்க்கும் தொழிலாளிகள் கடைசி வரைக்கும் முன்னேறவே கூடாது என்று சாதி அடிப்படையில் பிரிவினை அடிப்படையில் இவர்களுக்கு கல்வி பொருளாதாரம் என்று எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காத அளவுக்கு செய்து விடுவார்கள். இந்தியாவை சேர்ந்த கிராமங்களில் இன்னும் சாதி அடிப்படையில் இருப்பதை நம்மால் கண் முன்னாடியே காண முடிகிறது.
இன்றைய பேர் இதனை கடவுளுக்கு செய்யும் தொண்டு என்றும் கடவுளால் தான் இவர்களைப் பிரிக்கப்பட்டார்கள் என்றும் கதை அளந்து விடுவார்கள் ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் இவர்களின் மூலமாக அதிகமாக பணம் கிடைக்கும்
பொன்னான வாய்ப்பு இருக்கும்போது இவர்களுக்கு படிப்பு என்ற ஒரு விஷயத்தை கொடுத்து இவர்களுடைய அறிவை அதிகப்படுத்தி விட்டால் பின் நாட்களில் எப்படி பணத்தை சம்பாதிப்பது என்ற ஒரு கேவலமான யோசனை தான். படிப்பு மனிதனுக்கு முன்னேற்றத்தை கொடுக்கிறது இந்த படிப்பை மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்பதை மட்டும்தான் முதலாளித்துவமானி ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள். இவர்கள் செய்யும் இந்த மனிதத் தன்மையற்ற செயலை தடுக்க சமுதாயத்தோடு முன்னேறக்கூடிய நிறைய நல்ல விஷயங்களை இவர்களால் படிப்பு மரியாதையும் மற்றும் வாழ்க்கை தரம் என்று அனைத்தையும் இழந்தவர்களுக்கு கவனமாக சொல்லிக் கொடுத்து மனதுக்குள் செலுத்த வேண்டியது இருக்கும்.
இங்கே நம்முடைய உரிமைகளுக்காக போராடுவது மற்றவர்களை பொறுத்தவரையில் வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் நமக்கு தான் அந்த வேதனை புரிகிறது. நம்முடைய உரிமைகளுக்காக போராடும் போது இவர்கள் கொடுக்கக்கூடிய அந்த வேடிக்கையான பரிசுகளுக்கு நாம் ஏமாந்து போய் விடக்கூடாது. வெகுமதியான பணத்தை கொடுத்து நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் நம்முடைய குடும்பத்தையும் உரிமைகளை மட்டும் விட்டுக் கொடுங்கள் என்று இவர்கள் கேட்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. இந்த விஷயங்களை மாற்ற வேண்டும் இதற்கான சக்தியைத்தான் இப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் இதற்கான சக்தியில் கிடைத்தால் நிச்சயமாக நான் அடுத்த நாளிலிருந்து வேலைகளை ஆரம்பிப்பேன் என்று நம்புகிறேன்
No comments:
Post a Comment