இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறமாக நிஜமாகவே மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ஒரு தரமான நகைச்சுவை திரைப்படம் என்றே சொல்லலாம். கடனை இருக்கு அவருடைய கிராமத்தில் அவருக்கு பிடிக்காத ஒரு சிலர் செய்த சதியால் கடைசி வரைக்கும் பைக் மற்றும் கார் ஓட்டுவது எப்படி என்று கற்றுக்கொள்ளாமல் டிரைவிங் தெரியாதவராகவே இருக்கிறார். இந்த நிலையில் அவர் காதலித்த பெண்ணின் வீட்டில் அவருக்கு கார் ஓட்ட தெரிந்து இருந்தால் மட்டும்தான் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்போம் என்ற நிபந்தனை விடுத்ததால் இவரும் காரை ஓட்ட தெரியும் என்று கதையை அளந்துவிடவே அதனால் ஏற்படும் கலகலப்பான சம்பவங்களும் நகைச்சுவையும் தான் இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளது. கேமரா சினிமாட்டோகிராஃப்பி மிகவும் நன்றாக உள்ளது மேலும் திரைக்கதை நன்றாகவே வேலை செய்துள்ளது. பொதுவாக ஒரு பட்ஜெட் காமெடி படங்கள் எதிர்பார்க்கக்கூடிய எல்லா விஷயங்களுமே இந்த படத்தில் எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக மிஸ் பண்ண வேண்டாம். பாடல்கள் மற்றும் பாடல்களுக்கான காட்சியமைப்புகள் நன்றாகவே உள்ளது. மொத்தத்தில் புதுமைகளை எதிர்பார்ப்பு செய்யாமல் பொழுதுபோக்குக்காக ஒரு நல்ல நகைச்சுவை படத்தை தேர்ந்தெடுக்க நீங்கள் நினைத்தால் உங்களுடைய சாய்ஸ் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு படம் இந்த படம் என்றே சொல்லலாம் !
No comments:
Post a Comment