Wednesday, February 5, 2025

GENERAL TALKS - கண்டிப்பாக ரிஸ்க் எடுக்க வேண்டும் !


ஒரு ஆற்றங்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆற்றங்கரையின் ஒரு பக்கம் எந்த விஷயத்துக்கும் பயனற்ற ஒரு நிலமாக இருக்கிறது. இந்த பாலைவனம் போல இருக்கும் முள் செடிகள் நிறைந்த இந்த இடத்தில் உங்களால் வேறு எதுவுமே செய்ய முடியாது/ இதுவே இந்த ஆற்றங்கரையின் மறுபக்கம் பசுமை நிறைந்த மிகப்பெரிய நிலங்களும் மிகவும் சிறப்பான மக்களும் உங்களுடைய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயங்களை வென்றாக வேண்டுமென்றால் நீங்கள் ஒலிம்பிக் போல உலக அளவில் கஷ்டப்பட்டு போட்டிகள் வென்றடைய  வேண்டியது இல்லை. நீங்கள் பங்கேற்க வேண்டியது நிச்சயமாக ஒரே ஒரு போட்டிதான் இந்த ஆற்றங்கரையை நீங்கள் தாண்டி செல்ல வேண்டும் ஆனால் உங்களிடம் பழகு இல்லை நீங்கள் இரண்டு விஷயங்களை கவனித்து இருப்பீர்கள் முதல் விஷயம் இந்த ஆற்றங்கரையில் தண்ணீர் எப்போது குறைகிறதோ அப்போது ஒரு ரிஸ்கை எடுத்து நீங்கள் அடுத்த கரைக்கு செல்ல முயற்சி செய்வதுதானே ! இதுதான் நீங்கள் உங்களுடைய கண்களுக்கு தோன்றும் முதல் விஷயமாக இருக்கும் உங்களிடம் படகு இல்லை என்றால் இந்த விஷயம் தான் உங்களுக்கு சிறப்பாக தோன்றும் இதுதான் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். நீங்கள் நினைப்பது போல ஆற்றின் தண்ணீர் குறைந்து விட்டாலோ அதை ஆற்றில் தண்ணீர் வராமல் போனால் இதுதான் சந்தர்ப்பம் என்று ஓடிவிட வேண்டும். ஒரு சில நேரம் கடினமான வெல்லம் வந்து உங்களால் கரை சேர முடியாமல் போகலாம் ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் இதனை சொல்லாமல் இருக்க முடியாது இந்த கட்டுரையின் அடிப்படையில் இன்னொரு பக்கம் இன்னொரு யோசனை இருக்கிறது அந்த வேலி முள்ளாக இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி உங்களுக்கான படகை நீங்களே செய்து விடலாம் இவ்வாறாக வெட்டி அந்த படகை செய்யும் போது நீங்கள் யாரையும் நம்பாமல் இருப்பது மிகவும் சிறப்பானது மேலும் இந்த படையின் உரிமையை யாருக்கும் கொடுக்காமல் இருப்பதும் இந்த படகை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வதும் இந்த படகை எவனும் அபகரிக்காமல் நீங்கள் வைத்து இருப்பதும் உங்களுடைய பொறுப்பு தான் நான் இரண்டாவதாக சொன்ன இந்த விஷயம் உங்களுக்கு கண்களுக்கு கடினமாக தோன்றலாம் உண்மைய சொல்ல வேண்டும் என்றால் நிஜத்தில் நீங்கள் நினைப்பதை விடவும் இது கடினமான காரியம் தான் ஆனால் ஒரு முறை நீங்கள் இந்த காரியத்தை செய்து விட்டால் உங்களால் நிச்சயமாக அடுத்த கரையை சேரக்கூடிய 100 சதவீதம் வாய்ப்பு அதாவது நிகழ்தகவு உங்களுக்கு கிடைக்கும். இதுவே நீங்கள் ஆற்றில் அடித்து செல்வதற்காக இருக்கக்கூடிய நிகழ்தகவு 100 சதவீதம் என்று நிச்சயமாக சொல்ல முடியாது 95 - 90% முதல் 35 - 30% சதவீதம் வரை கூட இத்தகைய நிகழ்தகவு இருக்கலாம். இந்த இரண்டு விஷயங்களைக் கடவும் சந்தோஷமான வாழ்க்கை இருக்கக்கூடிய மறுகறையை செல்வதற்கு உங்களுக்கு இன்னொரு விஷயம் இருக்கிறது நீங்கள் நீச்சலை மிகவும் தெளிவாக கற்றுக்கொண்டு ரிஸ்க் எடுக்கலாம். கடினமான அலைகள் என்றாலும் உங்களுக்கான நீச்சல் மிகவும் திறன் அதிகமாக இருந்தால் உங்களை அடுத்த கரையில் கொண்டு சேர்க்க உங்களுடைய முழு உழைப்பையுமே நீங்கள் கொடுக்க வேண்டியது இருக்கும் இது ரிஸ்க் எடுத்தாலும் மிகப்பெரிய ரிஸ்க்காகவும் இந்த ரிஸ்கின் மூலமாக நீங்கள் 15% முதல் 5% வரையில்தான் வெற்றி அடையக்கூடிய வாய்ப்பை பெறுகிறீர்கள் ஆனால் இந்த ரிஸ்கை நீங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் இரண்டாம் கட்ட யோசனையாக இருக்கக்கூடிய படகை கட்டுவது என்ற ரிஸ்க்கை நீங்கள் பயன்படுத்தலாம் இது ஒரு சைக்கலாஜிக்கல் எக்ஸ்பிரிமெண்ட். நிறைய பேர் இரண்டாம் கட்டத்தில் இருக்கக்கூடிய இந்த விஷயத்தை தேர்ந்தெடுப்பார்கள் ஆனால் வேலையை செய்ய மாட்டார்கள். அல்லது தாமதித்து செய்வார்கள். இப்படிப்பட்டவர்களையும் கடைசி வரைக்கும் திருத்தவும் முடியாது. இவர்களாக வாழ்க்கையில் அடிபட்டு திருந்தினால் தான் உண்டு.


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...