இன்றைக்கு தேதிக்கு நீங்கள் பணம் இல்லாமல் யாருக்கும் எந்த ஒரு விஷயமும் செய்யாமல் இருந்து பாருங்கள் உங்கள் குடும்பத்திலேயே உங்களை வெறுக்கத்தான் ஆரம்பிப்பார்கள். நீங்கள் இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவீர்கள் உங்களுடைய குடும்பத்தையா ? நான் சொல்ல வருவது என்னவென்றால் உங்களுடைய குடும்பத்துக்கு ஆதரவு கொடுங்கள் ஆனால் உங்களுடைய குடும்பத்தினை நம்பாதீர்கள். உங்களுடைய குடும்பம் உங்களுக்காக நிறைய விஷயங்களை செய்வது போல ஒரு கற்பனையை ஏற்படுத்தும் ஆனால் உங்களுக்காக நிஜத்தில் எந்த விஷயத்தையும் செய்து இருக்காது. உண்மையில் உங்களுக்கான விஷயத்தை நீங்களே செய்தால் தான் உங்களுக்கு மதிப்பு மற்றவர்களை சார்ந்து இருந்தால் அது உங்களுடைய குடும்பமாகவே இருந்தாலும் உங்களுக்கு என்றும் மதிப்பு மரியாதை என்று எதுவும் இல்லாமல் சென்று விடும்.
உங்களுக்கான மதிப்பு மரியாதை இல்லாமல் உங்களை மிகவும் உதாசீனப்படுத்த தான் செய்வார்கள். இவர்கள் கேட்கும் சிம்பிளான கேள்வி இதுதான் நீ எனக்காக என்ன செய்துள்ளாய் என்ன மயிருக்கு நான் உன்னை மதிக்க வேண்டும் என்பதுதான். இந்த கேள்வியை நீங்கள் கேட்கும் போதே கழுத்தை அறுத்துக் கொண்டு சாவதை போன்று தோன்றும். ஆனால் இவ்வாறு சாவதை விடவும் மோசமான விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இவர்கள்தான் நம்மை வைத்திருப்பார்கள்.
நமக்கு கிடைக்கும் அனைத்து விஷயங்களையும் தடுப்பது இவர்கள் தான் இவர்களுடைய பாதுகாப்பு கருதியே நாம் ஒரு சில விஷயங்களை செய்வோம் ஆனால் இவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் சுத்தமாக மதிக்க மாட்டார்கள். நாம் ஏதாவது நல்ல விஷயம் சொன்னால் கண்களையும் காதுகளையும் இறுக்கமாக மூடிக்கொண்டு முட்டாள் முட்டாள் கத்துகிறது என்பார்கள். இவர்களை எதனால் நம்ப கூடாது என்று சொல்கிறேன் என்றால் சிறப்பான சமயம் வந்துவிட்டால் ஒரு பூச்சியை செருப்பை வைத்து நசுக்கவதை போல உங்களை நசுக்கி விட்டு சென்று விடுவார்கள் அதனால் தான் உங்களுடைய பலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள் இவர்களை சாராமல் முடிந்தவர்கள் இவர்களிடம் இருந்து தனியே சென்று விடுங்கள். இவர்களிடம் இருப்பது சுயநலம் மிக்க குணம் இல்லை என்று மற்றவர்களை நம்ப வைப்பார்கள் மற்றவர்களும் இவர்களைத்தான் மதிப்பார்கள் ஆனால் இவர்கள் உங்களுடைய சுயநலத்தை மறைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
உங்களால் ஜெயிக்க முடியவில்லை என்றால் உங்களை மிகவும் இலக்கரமாகவும் இழிவாகவும் தான் நடத்துவார்கள். உங்களால் ஜெயிக்க முடிந்தால் எப்படியாவது இவர்களை விட்டு வெளியே சென்று விடுங்கள். இப்படிப்பட்ட ஆட்களுடன் நீங்கள் இருப்பது ஒரு ஒரு நாளும் உங்களுடைய மனதை கண்டிப்பாக பாதிக்கும் உங்களுடைய மனது சப் கான்ஷியஸ் அளவில் வெற்றி அடைய முடியாத ஒரு விஷயமாக மாறிவிடும். இவர்களைச் சார்ந்த இருப்பது கண்டிப்பாக உங்களுடைய கழுத்துக்கு நீங்களே தூக்கு போட்டு வருவதற்கு சாமானதாகும். இவர்களுடைய விஷமத்தனமான நடிப்பு வரையில் விழுந்து சிக்கிக் கொள்ளாமல் நீங்கள் தான் உங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களை விட்டு விலகி செல்வது கஷ்டமானது தான் ஆனால் நடக்காத காரியம் அல்ல கண்டிப்பாக நடக்கும். இந்த உலகத்தில் உங்களை மட்டுமே நீங்கள் எப்போதுமே சார்ந்து இருக்க வேண்டும் அடுத்தவர்களை நீங்கள் சார்ந்திருப்பது மிகவும் மட்டமான ஐடியா என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயங்களை யாரும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். குடும்பம் ஒரு கதம்பம் என்று வாழக்கூடிய வாழ்க்கை முறை எல்லாம் இதுபோன்று கண்களை மூடிக்கொண்டு இழிவாக நடத்தக்கூடிய கீழ்தரமிக்க மக்களுக்கு புரிய வைக்க முடியாது. இத்தகைய மக்கள் இருக்கக்கூடிய குடும்பம் கடைசி வரையில் யாருக்கும் பயன்படாத வேலிமுள்ளாகவே இருந்து விடுகிறது இவர்களும் முன்னேறாமல் மற்றவர்களையும் முன்னேற விடாமல் வைத்து விடுவார்கள்.
No comments:
Post a Comment