Wednesday, February 5, 2025

GENERAL TALKS - என்னுடைய எண்ணங்களின் பகிர்வு - 3

 


எப்போதுமே நாம் சம்பாதித்த பணத்தின் மூலமாக நாம் வேலையை பார்த்தால் தான் வெற்றி அடைய முடியும் என்பது அடிப்படையில் சொல்லக்கூடிய விஷயம் என்றாலும் உண்மையில் பணம் யார் சம்பாதித்த பணமாக இருந்தாலும் ஒரு கருவியை போல அந்த பணம் யாருடைய கைகளில் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறது. 

இந்த உலகத்தில் பணம் நம்முடைய கைகளுக்குள் கிடைத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வந்துவிடும். நிறைய பணம் இருப்பவர்களை மட்டும்தான் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவர்களும் மதிப்பார்கள். 

ஒருவருடைய கையில் பணம் இல்லை என்றால் அவருடைய மதிப்பு என்பது பூஜ்ஜியமாகும். இந்த விஷயம் எனக்கும் தெரியும் இந்த வலைத்தளத்தில் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் உங்களுக்கும் தெரியும். ஒரு மனிதரை சந்திக்கிறீர்கள் அவரிடம் நிறைய பணம் இல்லை கொஞ்சம் தான் பணம் இருக்கிறது என்றால் அந்த மனிதருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை என்ன ? 

இதே போல இன்னொரு நிறுவனம் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள்.  இவரிடம் பணம் வெகுவாக உள்ளது இவருடைய பணத்தை வைத்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் இவரிடம் நிறைய அதிகாரமும் இவருடைய நிறுவனத்தில் வேலை பார்க்கக் கூடிய ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மனிதர்களும் இருக்கிறார்கள் என்று யோசித்துக் கொள்ளுங்கள். இவரிடம் பேசும்போது சராசரியான மனிதரிடம் நீங்கள் பேசியது போல பேச முடியுமா ? 

இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பணம் இவருடைய அதிகாரத்தை மிகவும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த சமுதாயத்தில் இவர் பணத்தின் மூலமாக அடைந்த அதிகாரத்தால் இவருடைய மரியாதையும் அதிகமாக உள்ளது. 

பணம் இருப்பவர்கள் தவறான விஷயமே செய்தாலும் பணம் இருப்பவர்களை எதிர்க்க முடியாது என்ற காரணத்தால் அவர்கள் செய்வது சரி என்று அவர்களுக்கு போலி நம்பிக்கை கொடுத்துவிட்டு வெளியே வருகிறோம். இந்த போலி நம்பிக்கை இன்னும் மோசமான செயல்களை செய்ய இவர்களுக்கு அதிகாரப்பூர்வ சமுதாய லைசன்ஸ் கொடுத்து விடுகிறது. 

\சமீபத்தில் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன் நடிகர் விவேக் அவர்களுடைய உருவத்தை கம்ப்யூட்டரின் மூலமாக  விசுவல் செய்து அவர்கள் நடப்பது போலவும் பேசுவது போலவும் காட்டி கண்ணீர் வடிக்க வைக்கிறார்கள் இந்த கார்பெட் நிறுவனங்கள். 

உண்மையில் ஒரு மனிதர் இறந்து விட்டார் என்றால் இறந்து விட்டார் தான் அந்த மனிதருடைய அசையக்கூடிய பொம்மை காணொளிகளை செய்து அதனைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுவது அவருடைய லெகசியை அவமானப்படுத்துவது போன்ற ஒரு செயலாகும். இதில் என்ன தவறு உள்ளது என்று கேட்பவர்களுக்கு இந்த மொத்த விஷயமே மிகப்பெரிய தவறு என்பதை புரிய வைப்பதே மிகவும் கடினமாக உள்ளது இதனைப் பற்றி அடுத்து வரக்கூடிய போஸ்ட்களில் விரிவாக காணலாம். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...