இந்த வீடியோ கேம்மை ஒரு வீடியோ கேம்மாக பார்க்காமல் ஒரு பிசினஸ் மாடல்லாக பாருங்கள் , சொல்லப்போனால் இந்த கேம் ரொம்பவுமே ஃபேன்டாஸ்டிக்காக இருக்கு, நிறைய OPEN WORLD கேம்ஸ் சாதிக்காத ஒரு விஷயத்தை FREEFIRE சாதித்து இருக்கிறது. அதுதான் தினம் தினம் அப்டேட் பண்ணுவது. இந்த வீடியோகேம் ஒரு பெரிய விஷயம். அதிகபட்சம் 1.5 கோடி பேர் ஒரே நேரத்தில் இந்த கேம் விளையாடுகிறார்கள் . 1,00,000 கோடிக்கு மேல் இந்த கணினி விளையாட்டு சம்பாதித்து உள்ளது. இந்த கேம் எதனால் இந்த அளவுக்கு சாதனை படைத்து உள்ளது ? கொஞ்சம் அலசி பார்க்கலாம். இந்த குறிப்பிட்ட கணினி விளையாட்டு ரொம்ப ரொம்ப பிரமாதமான கான்செப்ட். அடிப்படையில ஒரு மேப் லொகேஷன். அந்த லொகேஷன்ல இறக்கப்படும் 50 உண்மையான வாழ்க்கையின் ஆன்லைன் பிளேயர்ஸ் , இந்த பிளேயர்ஸ்களில் ரோபோட்கள் இருப்பது போல தெரியவில்லை. ஆனால் நன்றாக காம்பேட் மெதட்ஸ் டிசைன் பண்ணப்பட்டு இருக்கிறது. இந்த 50 பேரும் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் வரைக்கும் மேப்பின் லொகேஷன் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் லொகேஷன் ஒரு சின்ன வட்டத்துக்குள் செல்கிறது. இந்த வட்டம் வரைக்கும் உயிரோடு இருந்தால் டாப் 50 ல் இடம் பிடித்துவிடலாம். புதிய சக்தியை அடைய கோல்ட் அல்லது டைமண்ட்ஸ் வாங்க வேண்டும். அவைகளுக்குதான் பெரும்பாலும் பணம். GOOGLE PLAY அல்லது BANK ACCOUNT ல் இருந்து பணத்தை அனுப்பி புதிய பொருட்களை சக்திகளை வாங்கி இந்த விளையாட்டில் பயன்படுத்தலாம். இந்த விளையாட்டு போகப்போக கடினமாக மாறுகிறது. இங்கே பிளேயர்ஸை கட்டுப்படுத்துவது போல தெரியவில்லை. நிஜ வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்கிறது அதுக்குதான் பணம் சம்பாதிக்க வேண்டும் ஆனால் நிஜத்தில் பணம் அதிகமாக வைத்து இருப்பவரை நம்மால் ஜெயிக்க முடியாது என்றால் இந்த FF போன்ற கணினி விளையாட்டில் வெற்றி அடைய முடிகிறது என்ற சந்தோஷம் கிடைக்கிறது. அதுதான் பிரச்சனை. இங்கே தொடக்கத்தில் பெரிய அக்கவுண்ட் வைத்து இருந்தாலும் சின்ன அக்கவுண்ட் வைத்து இருந்தாலும் அடிப்படையில் கிரவுண்ட்க்குள் விடும்போது எந்த சக்திகளும் இல்லாமல்தான் குதிக்கிறார்கள். இங்கே அனைவரும் சமமான பலத்தோடு ஆரம்பத்தில் இருப்பதால் மோதல் கடினமாகிறது. இங்கே மோதுவது நிஜமான மனிதர்கள் என்பதால் கம்ப்யூட்டர் பாட்ஸ்களுக்கு வேலை இல்லை. இன்டர்நெட் சர்வர் மட்டுமே மெயின்டய்ன் பண்ணுனால் போதும் இன் ஆப் பர்சேஸ்ல கைமேல் பணம். இந்த கேம் நேத்து இருந்தது போல அடுத்த நாள் இருக்காது. ஒரு ஒரு 2-3 நாட்களுக்கும் நிறைய புது புது அப்டேட்கள் இந்த விளையாட்டில் இருக்கும். ரேங்க் எடுக்கும்போது கிடைக்கும் போனஸ்தான் தங்க நாணயங்கள். நீங்கள் விளையாட்டில் வெற்றி அடைந்தால் நாணயங்கள் கிடைத்துவிடும் என்று கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம். ப்ரோன்ஸ் , சில்வர் , கோல்ட் , பிளாட்டினம் என்று ஒரு ஒரு ரேங்க் ஏறும்போதுதான் இங்கே பணம் அதிகமாக கிடைக்கிறது. மொத்தமாக ஒரு நல்ல பொசிஷன்க்கு வரவேண்டும் என்றால் உங்களுக்கு 30 நாட்களுக்கு மேலே கூட தேவைப்படலாம். இன்னொரு ஆப்ஷன் வைரங்களை அள்ளுவது ! இந்த வைரங்களில் 500 வைரங்கள் 10000 தங்க நாணயங்களுக்கு சமம் !! ஆனால் நான் விளையாடிய கணக்குப்படி பார்த்தால் கூட ஒரு ஒரு 1000 வைரங்களுக்கும் குறைந்தபட்சம் ❤ 400/- ரூபாய்யாவது கொடுக்க வேண்டும். இந்த கேம் பெஸ்ட்டான கேம் இல்லை என்று நிறைய பேர் சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் ஒரு டெக்னிக்கல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்த்தால் ரொம்ப பெஸ்ட்டான கேம். தேவையான கிராபிக்ஸ்களை டவுன்லோட் பண்ணிவிட்டால் பின்னால் பிரச்சனையே இல்லை. நெட்வொர்க் மட்டும் இருந்தால் போதும். இந்த கேம்க்கு போட்டியாக இருக்கும் இன்னொரு கேம் போல பெரிய லெவல் ஃபோன் வைத்து இருந்தால்தான் சப்போர்ட் பண்ணுவேன் என்று இந்த கேம் சொல்லாது !! கொஞ்சமாக பணம் வைத்து 12000/- வரை விலை உள்ள ஃபோன் வாங்கினால் கூட கம்மி கிராபிக்ஸ் செட்டிங்கில் மீடியமாக விளையாடலாம். ஒரு AAA கேம் அளவுக்கு OPEN WORLD ADVENTURE இந்த கேம் கொடுக்கும். யாராவது ஒருவரை கம்ப்ளைண்ட் பண்ணினால் கூட தகுந்த ரெஸ்பான்ஸ் இந்த கேம்மில் இருக்கிறது. இந்த கம்பெனியில் இருந்து நிறைய சப்போர்ட் கொடுக்கிறார்கள். மேலும் அப்டேட்கள், ஸ்பெஷல் சீசன்கள் , க்ராஃப்ட்லாண்ட் போன்ற விஷயங்கள் எல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ். 6 HOUR கேம் லிமிட் உண்மையில் ஒரு நல்ல விஷயம். இந்த கேம்ல நிஜமான மனிதர்கள் கூட விளையாடுவதால் செஸ் மற்றும் காரம் போர்ட்க்கு சற்றும் குறைந்தது இல்லை இந்த ஃப்ரீ பயர்.. மொத்ததில் பிரமாதமான முறையில் டிசைன் பண்ணப்பட்ட கணினி விளையாட்டு ஆனால் ஆன்ட்ராய்ட்டில் மட்டும்தான் விளையாட முடிகிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment