திங்கள், 23 அக்டோபர், 2023

CINEMA TALKS - POLLADHAVAN 2007 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !






இந்த படத்துடைய கதையே இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் ரொம்பவுமே புதுமையாக இருந்தது. ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படம்தான். அதே சமயத்தில் நிறைய பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து யோசித்து பார்த்தாலும் ரொம்பவுமே பிரமாதமான ஒரு அவுட் ஆஃப் பாக்ஸ் படம்தான் இந்த பொல்லாதவன். ஒரு சராசரி பையன் அவனுடைய வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் நல்ல வேலை கிடைக்காமல் நண்பர்களோடு இருக்கிறான். ஒரு பைக் வாங்கவேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை இருந்தாலும் எதுவுமே பண்ண முடியவில்லை. கடைசியாக ஒரு கட்டத்தில் அப்பா அவனை புரிந்துகொண்டு அவருடைய பல வருட சேமிப்பில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்த பணத்தை கொடுத்து பையனுக்கு ஹெல்ப் பண்ணியதால் பையன் பைக் வாங்குகிறான். அப்போது இருந்து அவனுடைய வாழ்க்கையில் எல்லாமே நன்றாக நடக்கிறது. புது வேலை , நல்ல சம்பளம் , காதல் , குடும்பத்தில் மதிப்பு மரியாதை, வெளியில் அங்கீகாரம் என்று எல்லாமே அவனுடைய வாழ்க்கையில் கிடைக்கிறது. இப்போது அந்த பைக் அவனை விட்டு போகிறது. ஒரு கெட்டவங்களின் நெட்வொர்க்கால் அந்த பைக் திருடப்படுகிறது என்னும்போது எப்படியாச்சும் அந்த பைக்கை மீட்கனும்னு அந்த பையன் பண்ணும் போராட்டங்கள்தான் இந்த படத்தின் கதை. சென்னையில் ஒரு கஷ்டப்படும் குடும்பத்துல அபார்ட்மெண்டு வாழ்க்கையின் பேக்டிராப்ல ஒரு தரமான படம் இந்த படம். பிளாக் ஷர்ட்க்கும் பஜாஜ் பல்ஸர் பைக்குக்கும் ரொம்ப பெரிய மாஸ் கிரியேட் பண்ணுண படம் இந்த படம். நம்ம தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம் அப்படின்னு இந்த படத்தை என்னால கண்டிப்பாக சொல்ல முடியும். ஒரு காலத்தில் எல்லாம் ஒரு பாட்டை நான் ரேடியோல கேட்கும்போது இந்த பாட்டின் யுனிவெர்ஸ்லயே வாழனும்னு யோசிச்ச பாட்டு மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் ! இந்த பாட்டு நான் ஒரு ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கும் ஒரு ரொமான்ஸ் சாங்க். காதல்ல இருப்பவர்கள் அவங்களுடைய காதலியுடன் ஸ்பெண்ட் பண்ணும் முதல் மழைக்காலத்தை இந்த பாட்டு உங்களுக்கு கொடுக்கும். இந்த படம் கமர்ஷியல் படங்களிலேயே ரொம்ப மாஸ் நிறைந்த படம். இப்போதுதான் டிஜிட்டல் காமிரா இருக்கிறது ஆனால் அப்போது எல்லாமே பிலிம் காமிராதான். இந்த படம் அளவுக்கு டேடிக்கெட்டட்டாக ஒரு பெரிய இன்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு சில படங்கள் மட்டும்தான் அந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையை மொத்தமாக திரையில் கொண்டுவருவதில் சாதித்துக்காட்டும். இந்த படமும் அப்படிப்பட்ட படம்தான். அப்பா , அம்மா , நண்பர்கள் என்று ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும் நம்ம கதாநாயகன் வாழ்க்கையில் பிரச்சனைகள் நடக்கும்போது இந்த படம் பார்க்கும் நாமும் அந்த கதைக்குள் அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிப்போம் அவ்வளவு நேர்த்தியாக இந்த படத்தின் காட்சியமைப்புகள் நிறைந்து இருக்கும். கிளைமாக்ஸ்ல தனி ஒரு மனுஷனாக அவனுடைய குடும்பத்தை தாக்க வரும் எல்லோரையும் தடுக்கும் காட்சிகள் எல்லாம் மாஸ்ஸின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். 2000 - 2010 காலகட்டத்தில் நான் ரொம்ப நேசித்த படம். இன்னுமே எனக்கு பிடிச்ச படம் இந்த படம். 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...