ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டம். ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குது. நல்லது கேட்டது பார்க்காமல் அவனுடைய மனசுக்கு சரின்னு பட்ட விஷயத்தை பண்ணினால் அவனுடைய வாழ்நாளில் இருக்கும் எல்லா பிரச்சனைகளிலும் வெளியே வந்துவிடலாம். இந்த ஒரு சாய்ஸ் தவிர அவனுக்கு என்று இன்னொரு சாய்ஸ் கிடையாது. இந்த ஒரு விஷயத்தை அவன் கட்டாயமாக பண்ணித்தான் ஆகவேண்டும். அதுதான் இந்த படத்தில் கார்த்திக் கதாப்பத்திரம். இந்த படம் 2012 ல வெளிவந்த படம். விஜய் ஆண்டனி இந்த படத்தில்தான் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருப்பார். இன்றைக்கு பார்த்தால் கூட ஒரு நல்ல THRILLER படம்தான் இந்த படம். கார்த்திக் அவனுடைய வாழ்க்கையில பண்ணின தவறுக்காக டிடென்ஷன் சென்டர்ல வளர்ந்த பையன். வெளியே வந்ததும் வேலை கிடைக்காமல் கட்டாயமான பிரச்சனைகளை சந்திக்கும் கார்த்திக் ஒரு பஸ் ஆக்சிடென்ட் நடக்கும்போது அவருக்கு கிடைத்த சலீம் என்ற பையனுடைய சான்றிதழ்களை வைத்து மெடிக்கல் காலேஜ்ஜில் சேர்ந்துவிடுகிறார், அங்கே கிடைத்த நண்பனான அசோக் அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார், இவர்களின் பணக்கார காதல் , இரவு கலாச்சாரம் எல்லாம் பிடித்தும் பிடிக்காமலும் சலீம்க்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறவே ஒரு மோசமான நாள் அன்று ஒரு விபத்தால் அசோக் அகால மரணம் அடைகிறார். ஆனால் இந்த சம்பவம் காவல் துறையால் கொலை என்று கருதப்பட்டால் கார்த்திக் அவனுடைய வாழ்க்கையே நாசமாக போய்விடும் என்ற இக்கட்டான நிலையில் கார்த்திக் / சலீம் எடுக்கும் முடிவுகள் என்ன ? எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வருகிறார் என்பதை இந்த படத்தின் திரைக்கதையாக அமைத்து இருப்பார்கள். இந்த படம் வெளிவந்தபோது அவ்வளவு வரவேற்பு இருந்தது. "உலகினில் மிக உயரம்" , "மாக்காயலா மாக்கயலா" , "தப்பெல்லாம் தப்பே இல்லை" என்று மூன்று பாடல்கள் இந்த படத்தில் இருக்கிறது. ஒரு சில படங்களில் 5 பாடல்கள் இருந்தாலும் படத்துடைய காட்சிகளுக்கு பெரிய LAG ஆக இருக்கும் ஆனால் இந்த படத்துடைய மூன்று நிலைகளை இந்த பாடல்கள் பிரதிபலிப்பு பண்ணுவது போல இருக்கும். விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொம்பவுமே பெஸ்ட் ஆஃப் பெஸ்ட். மற்றபடி சித்தார்த் வேணுகோபால் , ரூபா மஞ்சாரி , மற்றும் நிறைய சப்போர்டிங் ஆக்டர்ஸ் எல்லோருமே பெஸ்ட்டாக இந்த படத்துக்கு பண்ணிக்கொடுத்து இருப்பார்கள். சினிமாட்டோகிராபி ரொம்பவுமே சூப்பர்ராக இருக்கும். இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் வேல்யூ ரொம்ப முக்கியமானது என்ற விஷயத்தை எப்படி சந்தர்ப்பமும் சூழநிலைகளும் ரொம்பவுமே கஷ்டத்தையும் வலியையும் கொடுத்து மனுஷங்களை வேல்யூ இல்லாத நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தும் என்று நன்றாக சொல்லி இருப்பார்கள். இந்த படத்தின் நிறைய பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. 2012 ல வெளிவந்த நிறைய படங்களில் அந்த வருடத்தின் பெஸ்ட் சினிமா என்று இந்த படத்தை கண்டிப்பாக சொல்லலாம். இங்கே ரஜினி , அஜீத் , விஜய் , சூர்யா போன்ற நடிகர்கள் நடித்து வெளிவந்த படங்கள்தான் ஸ்டார் வேல்யூ காரணமாக பெரிய ஹிட் கொடுக்கிறது. இந்த மாதிரி புது நடிகர்களை கொண்டு வெளிவந்த படங்கள் எல்லாம் நம்ம சப்போர்ட்னால மட்டும்தான் வெற்றி அடைய முடியும். இந்த மாதிரி நல்ல கருத்துள்ள படங்கள் அதே சமயம் மறுமுறை மறுமுறை பார்க்க வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பான படங்கள் நம்ம தமிழ் சினிமாவுக்கு நிறையவே தேவை. சினிமா ஒரு ஃபார்ம் ஆஃப் ஆர்ட் கிடையாது. சினிமா ஒரு புரஃபஷன், இந்த மாதிரி நல்ல படங்கள் கொடுத்தால் மட்டும்தான் சினிமா அதனுடைய நெக்ஸ்ட் லெவல் அடையும். மொத்ததில் இந்த படம் ஒரு நல்ல படம். கண்டிப்பாக பாருங்கள். இந்த மாதிரி நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ளவும் மேலும் நிறைய தகவல்களையும் தெரிந்துகொள்ளவும் என்னுடைய இந்த NICE TAMIL BLOG க்கு நிறைய சப்போர்ட் கொடுத்து FOLLOWBACK கொடுங்கள். இந்த காலத்தில் நல்ல TAMIL BLOG கள் ரொம்பவுமே குறைந்துவிட்டது. நீங்கள் சப்போர்ட் பண்ணினால் மட்டும்தான் தமிழ்ல என்னால இந்த வெப்சைட்டை மேற்கொண்டு இன்னும் நிறைய முன்னேற்றத்தை கொடுத்து கொண்டுபோக முடியும். கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுங்கள். தேங்க்ஸ்.
No comments:
Post a Comment