Sunday, October 29, 2023

CINEMA TALKS - LKG 2019 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

\

 இங்கே நம்ம தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த படங்களில் நிறைய படங்கள் டார்க்காகவும் வயலன்ஸ் நிறைந்த படமாகவும் இருப்பதை மறுக்க முடியாது. புதுப்பேட்டை படம் போல வன்முறை நிறைந்த அரசியல் போர்க்களங்களை பார்த்து இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் இருவர் , அமைதிப்படை , என். ஜி. கெ என்று பொலிட்டிகல் படங்கள் எல்லாமே அரசியலில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஹைலைட் பண்ணி சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமானது. லால்குடி கருப்பையா காந்தி என்ற கவுன்சிலர், அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி மேல் பதவிகளை அடைய முயற்சிக்கிறார். எம். எல். ஏ ஆகவேண்டும் என்ற கனவுக்காக ஒரு கார்ப்பரேட் அனாலிட்டிக்ஸ் கம்பெனியை சார்ந்த மெம்பர்ஸ்களின் சப்போர்ட்டை கேட்கிறார். ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னால் சம்மதித்த நிறுவனம் மிகவும் புதுமையான பப்ளிசிட்டி மெதட்ஸ்களை பயன்படுத்தி எல்.கே. ஜியை ஒரு எம். எல். ஏ ஆக மாற்ற முயற்சி பண்ணுகிறது. இங்கே இவர்கள் அரசியலில் நிறைய தவறுகள் இருப்பதை கண்டுகொண்டாலும் அவைகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வெற்றியை அடைய பயன்படுத்திக்கொள்ளும் மனதுடன் இருப்பதால் அங்கே உள்ளூரின் பெரிய மனிதராக இருக்கும் ராம்ராஜ் பாண்டியனை கொஞ்சம் கொஞ்சமாக குறைகளை கொண்டவராக காட்டி மக்கள் மனதில் இடம்பிடித்து சி. எம். ஆக மாறுவது வரைக்கும் இந்த கதை போகிறது. கதை சோசியல் மீடியா மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் எப்படி நடைமுறை அரசியலில் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தில் இன்னொரு தவறான செயலாக இருக்கிறது என்று தெளிவாக சொல்கிறது. கிளைமாக்ஸ் சிம்பிள்ளாக இருந்தாலும் ரொம்ப பெஸ்ட். பொதுவாக அரசியல் என்பது மூன்று விஷயம் 1. கவர்ன்மெண்ட் 2. பிரைவேட் 3. பப்ளிக் இந்த மூன்று விஷயங்களின் இணைப்புதான் அரசியல். இங்கே GL நிறுவனத்தின் CEO மற்றும் கார்ப்பரேட் மான்ஸ்டர் சுந்தர் ராமசாமி களத்தில் இறங்கி வெற்றி அடைந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமாகுமா ? NGK படம் பார்த்தால் மனது ரொம்ப பாரமாக இருக்கும். இந்த படம் புதுபெட்டை படத்துடைய ரொம்ப டீசண்ட் எடிஷன் போல இருக்கும். அவ்வளவு சீரியஸ்ஸான படம் ஆனால் வெளிவந்த காலகட்டத்தில் நல்ல அப்ரிஸியேஷன் கிடைக்கவில்லை. ஆனால் எல்.கே.ஜி படம் வெளிவந்த டிரெய்லர்ல இருந்தே பெரிய சப்போர்ட்டுடன் இருந்தது. ஆர். ஜெ. பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் இந்த படத்துக்கு பெரிய சப்போர்ட் என்றால் சப்போர்டிங் கேரக்டர்ஸ் பண்ணும் ஜெ.கே. ரித்தீஷ். நாஞ்சில் சம்பத், மயில்சாமி என்று எல்லோருமே அவர்களுடைய பெஸ்ட்டை கொடுத்து இருக்கிறார்கள். சகுனி படம் எந்த எந்த இடங்களில் மிஸ் பண்ணியதோ அந்த இடங்களை இந்த படம் மேட்ச் பண்ணி இருக்கிறது. படத்துடைய முதல் ஸீன் முதல் கடைசி ஸீன் வரைக்கும் மொத்தமாக அரசியல்தான். நிறைய கருத்துக்கள் நல்ல நகைச்சுவை உணர்வோடு சொல்லப்படுவதால் நன்றாகவே வொர்க் அவுட் ஆகிறது. காமிரா வொர்க் ரொம்ப பிரமாதம். ஒரு படம் அதனுடய பட்ஜெட்டை மீறி ஒரு பெரிய பட்ஜெட் படம் லெவல்க்கு நல்ல வெற்றியை கொடுக்க இப்படி ஒரு எக்சல்லன்ட் சினிமாடோகிராபியும் ஒரு காரணம். இந்த படத்துக்கு வெளிவந்த நாட்களில் எல்லாம் இவ்வளவு பிரமாதமான பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது ஒரு நல்ல படம். கடைசியாக ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் ஜெ. கே. ரித்தீஷ் சாரை ரொம்பவுமே மிஸ் பண்ணுகிறோம். இந்த படத்தில் அவருடைய பெஸ்ட்டை கொடுத்து இருப்பார். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...