Friday, October 6, 2023

CINEMA TALKS - THE HITCHHIKERS GUIDE TO THE GALAXY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 




இன்னைக்கு இந்த படத்தை பற்றி என்னுடய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் முன்னால் நான் ஒரு சில விஷயங்களை இந்த வலைப்பூவில் பதிவு பண்ண விரும்புகிறேன், என்னதான் நான் விமர்சனம் என்று பெயர் கொடுத்தாலும் இன்று வரைக்குமே நான் கருத்துக்களை மட்டும்தான் பதிவு பண்ணுகிறேன். நான் பாரபட்சம் பார்ப்பது இல்லை. இந்த உலகத்துல பொய் சொல்லி நல்ல பேர் எடுப்பது ரொம்ப ஈஸி ஆனால் உண்மையை சொல்லி உண்மையான மனுஷனாக வாழ்வது ரொம்பவே கஷ்டம். உதாரணத்துக்கு நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" பாட்டு எனக்கு கொஞ்சம் கூட புடிக்காது. இதனால நான் ரொம்ப தப்பான விஷயம் எதுவுமே சொல்லலையே. ஆட்டோகிராப் படம் வெளிவந்த நாட்களில் எல்லாம் இந்த பாடலை ஒரு நாளுக்கு 100 முறையாவது டிவியிலும் எஃப் . எம் . களிலும் போட்டு போட்டு நானும் கேட்டு கேட்டு சலித்து போய்விட்டேன். நான் எதுக்கு பொய் சொல்ல வேண்டும். "ஜூன் போனால் ஜூலை காற்றே" பாடல்க்காக நான் நிறைய நாள் காத்து இருப்பேன். சன் மியூசிக் பக்கமாகவே நான் தொலைக்காட்சி முன்னால் காத்துக்கொண்டு இருப்பேன். ஆனால் என்னமோ உலகத்துல இல்லாத மோட்டிவேஷன் பாடலை கண்டுபிடித்தது போல இந்த ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ! வாழ்வென்றால் போராடும் போர்க்களமே !" அப்படின்னு இந்த பாட்டு கேட்க ஆரம்பிக்கும. இந்த காட்ஸில்லா படத்துல தமிழில் ஒரு வசனம் வருமே "அடக்கடவுளே ! இது என்ன சோதனை ?" என்ற வசனம்தான் நினைவுக்கு வரும். 


இப்போ நான் உண்மையை சொல்லிவிட்டேனா ? உடனே எதிரிகள் கிளம்பிவிடுவார்கள் , "டேய் , உனக்கு ஒவ்வொரு பூக்களுமே எப்படிப்பட்ட பாட்டுன்னு தெரியுமா ? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பிடிக்காதுன்னு சொல்லறயே. உனக்கு எவ்வளவு திமிர் ! நீ மட்டும் நேரில் கிடைச்சா மவனே கைமா பண்ணிடுவேன் " என்று ஆட்டோ டிரைவர் அண்ணன் முதல் இன்போசிஸ் நிறுவனர் வரைக்கும் எனக்கு எதிராக போர்க்கோடி உயர்த்த வேண்டாம் ! அதாவது நான் அந்த பாட்டு மோசமான பாட்டு என்று சொல்லவே இல்லை. நான் எனக்கு அந்த பாட்டு பிடிக்காம போய்விட்டது என்றுதான் சொல்கிறேன். பள்ளிக்கூடம் படிக்கும் காலங்களில் நல்லா டான்ஸ் ஆடுவது போல "அடி லட்சாவதியே , என்ன அசத்துற ரதியே" போன்ற பாடல்கள்தான் நான் தொலைக்காட்சிகளில் எதிர்பார்த்தேன். எனக்கு சன் மியூசிக் பார்க்க தொலைக்காட்சி ரிமோட் கிடைக்கும் நேரமே கொஞ்சமதான் . அந்த கொஞ்சம் நேரத்திலும் இந்த பாட்டை யாராவது சன் மியூசிக்கில் கேட்டுவிடுவார்கள் இல்லையென்றால் எஸ். எம். எஸ் பண்ணி விண்ணப்பம் போட்டுவிடுவார்கள். ஒரு நூறு முறைக்கும் மேல் இந்த ஒரு பட்டை மட்டும் கேட்டு கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது. 


சந்தோஷ் சுப்ரமணியம் படம் போல இளைஞர்களின் பேஷன் சென்ஸ் தெரியாமல் ஃபுல் ஹேன்ட் ஷர்ட் எடுத்து கொடுத்துவிட்டு இதுதான் பெஸ்ட் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. உங்களுடைய கருத்து நியாயமாகவே இருந்தாலும் வாஷிங் மெஷின் லிக்விட் டிடர்ஜென்ட் போட்டு இன்னொருவரையும் மூளையை கழுவி உங்களுடைய கருத்துக்களை திணிக்க முயற்சி பண்ணக் கூடாது. இன்னைக்கு தேதிக்கு பிறந்ததில் இருந்து வாழ்க்கையின் போர்க்களம் என்று எல்லாம் கருத்து பேசாமல் அப்பாவின் சொத்துக்களால் நன்றாக வாழும் நிறைய பேர் இருக்கின்றனர். இப்போது உங்கள் பாயிண்ட் ஆஃப் வியூவில் பார்த்தால் அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ? மெஜாரிட்டி கூட்டத்துடன் சேர்ந்துவிடாமல் தனித்து ஒரு கருத்தை முன்வைப்பவர்களை உலகம் எனிமியாக பார்க்க கூடாது. ஜெய்ப்பவர்கள் எல்லோருக்குமே மோட்டிவேஷன் பாடல்கள் தேவைப்படுவது இல்லை. 


இந்த படம் பார்க்கும்போது எனக்கு இந்த கதைதான் நினைவுக்கு வந்தது. அதனால்தான் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இப்போது இந்த படத்துக்கு வருவோம். இந்த படத்துடைய கதை , ஸ்பேஸ்ஸில் ரோட் போடவேண்டும் என்பதற்காக பூமியை அழித்து விடுகிறார்கள் , நமது கதாநாயகன்னும் அவனின் வேற்றுகிரக பயணியாக இருக்கும் நண்பனும் மட்டும்தான் உயிரோடு இருந்து தப்பிக்கிறார்கள். முன்னே பின்னே விண்வெளியில் சென்று அனுபவம் இல்லாததால் தி ஹிட்ச் ஹைக்கர்ஸ் கைட் டூ கேலக்ஸி என்ற ஸ்பேஸ் மொத்தமும் அதிகமாக விற்பனை பண்ணப்பட்ட புத்தகத்தை நம்பி மொத்த ஸ்பேஸ்க்கும பயணித்து கிடைக்கும் அனுபவங்கள்தான் இந்த படத்தின் கதை. இந்த படம் ஒரு டீசண்ட்டான காமெடி ஸ்பேஸ் டிராமா என்டர்டென்மெண்ட். பொதுவாக ஸ்பேஸ் படங்களை கலாய்ப்பது போன்ற டோன் இந்த படத்தில் இருந்தாலும் 2005 களில் இந்த படம் வெளிவந்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு பெரிய பட்ஜெட் காலேஜ் ப்ராஜக்ட்க்காக எடுத்து சப்மிட் பண்ணப்பட்டது போல இந்த படத்தின் திரைக்கதை அவ்வளவு புதுமையாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. நான் பெரிய பட்ஜெட் மாஸ்டர் பீஸ் மட்டும்தான் பார்ப்பேன். சின்ன பட்ஜெட் படங்களை பார்க்க மாட்டேன் என்று ஈகோ இல்லாமல் ரசனை மிக்க எந்த ஆடியன்ஸ்ஸும் இந்த படத்தை நன்றாகவே ரசித்து ஒரு முறை பார்க்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த படம் நிஜமாகவே ஒரு பெஸ்ட் செல்லர் புத்தகத்தின் பிலிம் அடாப்ஷன்.

இந்த படத்தின் தமிழ் டப்பிங் நான் பார்த்து இருக்கிறேன் , இப்போது வரைக்கும் நான் இந்த படத்தின் தமிழ் டப்பிங் பிரிண்ட்டை தேடிக்கொண்டு இருக்கிறேன் 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...