மோனா - இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. கடலுக்கு நடுவில் மக்கள் தனித்து வாழும் ஒரு யாரும் அறியாத தனிதீவில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பழங்குடி கிராம குழுவினரின் தலைவரின் மகளான மோனா அங்கே இருக்கும் கிராம மக்கள் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற காரணத்தால் பழங்கால போர்கடவுள் மாயியை கஷ்டப்பட்டு கடல் மொத்தமும் தேடிச்சென்று ஒரு வழியாக சந்திக்கிறார். இவருடைய உதவியின் காரணமாக இதுவரைக்கும் அவளுடைய கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் விவசாய பிரச்சனை ஒரு மாயாஜால சாபத்தால் உருவாகிறது என்பதை அறிந்த மோனா இப்போது சாபம் கொடுத்த கடலின் கோபத்தில் இருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் தான் இந்தத் திரைப்படத்தின் கதைக்களம்-ஆக இருக்கிறது. இந்த படத்தில் இருக்கும் கலர் கலரான விஷுவல்ஸ் மற்றும் பழங்குடி மக்களுடைய வாழ்க்கைக்கும் அவர்களுடைய நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுத்து எழுதப்பட்ட கதைக்களம் எல்லமே இந்த படத்துக்கு பிளஸ் பாயிண்ட். இந்த படம் நிறைய பிரமாதமாக காட்சி அமைப்புகளை கொண்டு இருப்பதால் இந்த படத்துக்கு பின்னால் வரும் படங்களுக்கு கூட பெஸ்ட் யூஸ் ஆஃப் CGI கொடுக்க இன்ஸ்பிரேஷன்னாக இருந்தது என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. டிஸ்னி நிறைய இளவரசிகளின் ஃபேண்டஸி கதைகளை சொல்லியுள்ளது அந்த வகையில்தான் இந்த கதையும். ரொமான்டிக் ஆங்கிள்க்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் டெமிகாட் மாயி மற்றும் பிரின்சஸ் மோனாவின் கலகலப்பான சக்திகளை மீட்க முயற்சி பண்ணும் காட்சிகள் படத்துக்கு நல்ல மோமென்ட்ஸ் கொடுக்கிறது. கிளைமாக்ஸ் எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இயற்கை சார்ந்த வாழ்க்கை குறித்த ஒரு நல்ல மெசேஜ் இந்த படத்தின் கிளைமாக்ஸ்ல கிடைக்கிறது. ஒரு நல்ல படம். உங்களுடைய பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment