ஒரு நடுத்தரமான அன்பான மெக்ஸிக்கன் குடும்பத்தில் பிறந்து வளரும் ரொம்ப சாதாரணமான பையன்தான் நம்ம ஹீரோ ஜெய்மி ரேஸ் - இவன் ஒரு கட்டத்தில் குடும்பத்துடைய கஷ்டத்தை புரிந்துகொண்டு பெரிய பட்டப்படிப்பு படித்து இருந்தாலும் வெளியே நல்ல வேலை கிடைக்காமல் இருப்பதால் தற்காலிகமாக KORD நிறுவனத்தில் சின்ன சின்ன பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டு இருக்கிறான். இன்னொரு பக்கம் KORD நிறுவனத்தின் சொத்துக்களின் ஒரே வாரிசாக இருக்கும் நம்ம ஹீரோயின் ஜென்னி கார்ட். இவளுடைய அத்தைதான் படத்தின் வில்லனாக இருக்கும் விக்டோரியா கார்ட். இந்த விக்டோரியா KORD நிறுவனத்தின் ஆராய்ச்சி டெக்னாலஜிக்களை பூமிக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு காலத்தில் விண்வெளியில் இருந்து பூமியில் வந்து விழுந்த மிக மிக அதிகமான சக்திகளை உடைய வேற்றுகிரக உயிரினமாக கருதப்படும் SCARAB பை வைத்து யாராலும் கொல்ல முடியாத இயந்திர போர் வீரர்களை உருவாக்கவேண்டும் என்று ஒரு ப்ராஜக்ட் பண்ணி நிறைய வருடங்களாக முயற்சிகளை பண்ணிக்கொண்டு இருக்கிறார். இந்த அபாயகரமான ப்ராஜக்ட் நடைமுறைக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று ஜென்னி அந்த SCARAB ஐ யாருக்கும் தெரியாமல் எடுத்து ஜெய்மி ரேஸ்ஸிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க சொல்கிறாள் ஆனால் தவறுதலாக அந்த SCARAB இப்போது பாதிக்கு மேல் ஜெய்மி ரேஸ்ஸின் உடலுக்குள் கலந்து ஒரு பிரிக்கவே முடியாத பயோலாஜிக்கல் இணைப்பை உருவாக்கிவிடுகிறது. இதனால் KORD நிறுவனத்தால் துரத்தப்படும் ஜெய்மியும் அவருடைய குடும்பமும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ? விக்டோரியா கார்டின் இயந்திர போர்வீரர்களின் திட்டத்தை ஜெய்மியால் முறியடிக்க முடிந்ததா ? என்றுதான் இந்த படத்தின் கதை செல்கிறது. இந்த படமும் மற்ற சூப்பர் ஹீரோ கதைகளை போல ஒரு ஹீரோவுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. வில்லன் அந்த சூப்பர் பவர்ரை அடைய நினைக்கிறான். ஹீரோ அவனுடைய செயல்களை தடுத்து அவனை கட்டுப்படுத்துகிறான் என்ற வழக்கமான சூப்பர் ஹீரோ ஆரிஜின் கதைகளுக்கு கொஞ்சமுமே மாற்றம் இல்லாத கதைதான். இந்த படத்தில் திரைக்கதை நன்றாகவே பண்ணி இருப்பார்கள். குறிப்பாக மெக்ஸிக்கோ கலாச்சாரம் அதிகமாக இடம்பெற்ற முதல் சூப்பர் ஹீரோ படம் இதுதான் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு வேறு நல்ல மெக்ஸிக்கன் படங்கள் தெரிந்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்கள் !
DCEU எப்போதோ MCU போல கதைகளில் ஒரு நல்ல எமோஷனல் கனெக்ஷன் மற்றும் ஸ்டோரிக்களின் கன்டினியூவிட்டி எல்லாம் பார்ப்பதை நிறுத்திவிட்டது. DC இன் METAHUMAN வரிசையில் புதிய அறிமுகமாக களத்தில் இறங்குகிறார் இந்த புளூ பீட்டில். இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் இந்த படம் நல்ல ஃபேமிலி வேல்யூஸ் கொண்ட படம். சூப்பர் பவர் காட்சிகளில் விஷுவல் எஃபக்ட்ஸ் போதுமானதாக இருந்தது. சண்டைக்காட்சிகள் எதுவுமே குறை சொல்வது போல இல்லை. THE FLASH படம் போலவே படத்தின் டோன்னில் கொஞ்சம் கலகலப்பான காட்சிகளை மிக்ஸ் பண்ணித்தான் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து AQUAMAN படம்தான் இன்று வரைக்கும் DC CINEMA UNIVERSE இன் அதிக கலெக்ஷன் எடுத்த சூப்பர் ஹீரோ படம். இந்த படமும் அதே போல வெற்றிப்படமாக அமைந்து இருக்கலாம் ஆனால் பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்பை விட குறைவுதான் என்பதால் DC இன் ஃப்யூச்சர் பற்றிய பிளான்ஸ் இன்னும் ஸ்டுடியோவுக்கு கடினமாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் இந்த படம் ஒரு நல்ல படம். ஒரு கம்பேர்ரிஸன்க்கு சொல்லவேண்டும் என்றால் VENOM , MORBIUS . THE INHUMANS போன்ற சூப்பர் ஹீரோ ORIGIN களை கம்பேர் பண்ணி பார்த்தால் இந்த படம் இந்த DC டைம்லைன்னில் ஒரு நல்ல பாஸிட்டிவ் ஆன வெளியீடுதான். கண்டிப்பாக இந்த மாதிரியான நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ்ஸாக இருக்கும் நீங்கள் சப்போர்ட் பண்ணுங்கள். RESTORESNYDERVERSE க்காக இந்த மாதிரியான நல்ல படங்களை வரவேற்பு கொடுக்காமல் இருக்கவே வேண்டாம். அதுதான் என்னுடைய கருத்து. இது ஒரு GOOD MOVIE . எனக்கு குறை என்று சொல்ல எதுவுமே இல்லை.
No comments:
Post a Comment