Sunday, October 29, 2023

POWER OF THINKING - உங்களால முடியுமா ? முடியாதா ? - இங்கே என்ன பிரச்சனை ?




இந்த உலகத்தில் நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கே ரொம்ப அதிகமாக சொல்லப்பட்டு கேட்கப்படும் கருத்து என்னன்னா வெற்றியை அடைவது எப்படி ? இந்த விஷயத்தை பற்றி வெற்றி அடைந்த எல்லோரையும் கேட்கும்போது சொல்லும் பதில் நிறைய WORK பண்ணனும் ? ஆனால் எங்கே ? எப்படி ? அது பற்றி எதுவுமே சொல்வதற்கு இல்லை. இன்னைக்கு ஒரு வீடு கட்டனும்னா உங்களிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது. ஃபேக்டரில ப்ரொடக்ஷன் நடக்கணும்னா அதுக்கும் பணம் இருந்தால் மட்டும் போதாது. விவசாயம் , ரோடு போடறது , எலக்ட்ரிசிட்டி , பப்ளிக் சர்வீஸ்ன்னு எந்த ஒரு வேலையாக இருந்தாலும் கடைநிலையில் வேலை செய்யும் மக்களுடைய கடின உழைப்பு காரணமாக உருவானதாகத்தான் அந்த வெற்றி இருக்கும். இங்கே நிறைய பேருடைய பணம் இல்லாத நிலையை பயன்படுத்திக்கொள்கிறார்கள். தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் இருக்கும்போது அதனையும் பயன்படுத்திக்கொண்டு இலாபம் பார்த்துவிடுவார்கள். இந்த விஷயத்தை நானும் இளம் வயதில் பண்ணியிருக்கிறேன். எனக்கும் இந்த விஷயத்தை நிறைய பேர் செய்து இலாபம் பார்த்து இருக்கிறார்கள். உங்களால் முடியும் என்று நிறைய பேர் நிறைய விஷயத்தை சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா ? உங்களால் முடியாது. உண்மை அதுதான் உங்களால் முடியாது. பணம் , பலம் , அறிவு , திறன்கள் , இல்லைன்னா ஏதாவது ஒரு பேக் அப் உங்களிடம் இருக்கணும். அப்படி ஒரு பேக் அப் இல்லைன்னா இந்த மாதிரி விஷயங்களை பன்னும்போது உருவாகும் போட்டியை உங்களால் கண்டிப்பாக சமாளிக்கவே முடியாது. நீங்க ஒரு சினிமா படத்தின் ஹீரோ போல கிளைமாக்ஸ்ல வெற்றி அடைந்துவிடலாம் என்று நினைத்து இருக்கலாம். உண்மையான வாழ்க்கையுடைய கிளைமாக்ஸ் ரொம்ப கெட்டவர்களின் உலகத்தில் நீங்களும் கெட்டவாராக வாழவேண்டும் என்றுதான் கட்டாயப்படுத்தும். இதனை யாராலும் மறுக்க முடியாதே ! உங்களுக்கு ஒரு பாதிப்பை இன்னொருத்தர் கொடுக்கும்போது அவங்களுக்கு மறுபடியும் நீங்கள் ஒரு பாதிப்பை கொடுக்கும் அளவுக்கு பலம் உள்ளவராக இருக்க வேண்டும் அப்போதுதான் உங்களை அவங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது. இங்கே வெற்றி அடைய கடினமான உழைப்பு தேவை என்கிறார்கள். உண்மையில் பேக் அப் தேவை. போன தலைமுறையின் சொத்துக்கள் இல்லாமல் இந்த தலைமுறை சாதிக்க வேண்டும் என்பது மீன்களே இல்லாத நடுக்கடலில் வலையை வீசிவிட்டு படகு ஓட்டும் அளவுக்கு தர்மசங்கடமான விஷயம். இங்கே ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும். இங்கே எதனால் பணம் என்று சொல்கிறேன் என்றால் மேல்மட்டம் என்னைக்குமே அடிமட்டத்தில் இருப்பவர்கள் இன்னுமே அடிமட்டம் போக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்; பணம் இல்லாமல் நீங்கள் சொந்தமாக முயற்சி பண்ணினால் ஒரு வருடம் நீங்கள் வேலை பார்த்தாலும் ஒரே நாளில் உடைத்து மணலும் மண்ணும்மாக மாற்றிவிடுவார்கள். மேல்மட்டம் என்னைக்குமே மேல்மட்டம்தான் அவர்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அடிமட்டம் தேவை. எல்லோருமே மேல்மட்டம் ஆகக்கூடாது என்று நிறைய விஷயங்களை பண்ணுவார்கள். இந்த மேல்மட்டம் மட்டும் எப்படி முன்னேறினார்கள் என்றால் இவர்கள் வேலை பண்ணுவதே இல்லை. இவர்களை வெற்றி அடையவைத்தது அடிமட்டம்தான். நான் பார்த்தவரைக்கும் கொஞ்சம் நல்ல மனசு உள்ளவர்கள்தான் இந்த விஷயங்களை புரிந்துகொண்டு அடிமட்டத்தில் இருப்பவர்கள் மேலே வரவேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் நிறைய மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அடிப்படை மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க கூட தயங்குவார்கள்.இப்படியும் ஒரு மட்டமான மேல்மட்ட ஆட்கள் இருக்கும் இடத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். மேல்மட்டத்துக்கும் அடிமட்டத்துக்கும் நடக்கும் போரானது என்னைக்குமே மாறவே மாறாது. இந்த மாதிரியான விஷயங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள மட்டும்தான் முடியும். இல்லை மாற்ற வேண்டும் என்றால் 2000 வருடங்களுக்கு மேல் தேவைப்படலாம் ஆனால் நம்முடைய ஆயுட்காலம் என்பதே வெறும் 70 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதானே ? நாம் என்னதான் பண்ண முடியம் ? இங்கே பிரச்சனை நம்முடைய உழைப்பை மேல்மட்டம் எடுத்துக்கொள்வதுதான். கடவுளும் அவர்களுக்குதான் சப்போர்ட் பண்ணுகிறார். மெடிக்கல் செலவு பண்ண முடியாமல் தேய்ந்து தேய்ந்து புள்ளியாக போன குடும்பங்கள் ரொம்ப அதிகம் ! இன்னும் சொல்லப்போனால் பணத்தை ஏமாந்துவிட்டுவிட்டு இன்னைக்கு வரைக்கும் இந்த சமூகத்தில் முன்னேற முடியாமல் கவலையில் வாழும் குடும்பங்களும் ரொம்ப அதிகம் ! மேல்மட்டம் விழுந்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையுமே இல்லை. அடுத்த நொடி அவர்களின் பலத்தை மறுபடி பெற்றுவிடுவார்கள். கடவுளும் அவர்களுக்குதான் சப்போர்ட் பண்ணுவார் ஆனால் அடிமட்டம் விழுந்தால் மறுமுறை எழுந்து நிற்கவே முடியாது. வாழ்நாள் முழுவதும் தரையில் விழுந்து மனம் உடைந்து உடல் தளர்ந்து இருக்க வேண்டியதுதான். நகராத கல்லறையாக அடிமட்டம் அவர்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் என்பதால் வாழ்நாளில் அவர்களால் முன்னேறுவதை பற்றி யோசிக்கவே முடியாது. அடிப்படையில் உங்களால் முடியும் முடியும் என்று உங்கள் மானதுக்குள்ளே சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். உங்களுடம் எதுவும் இல்லை என்றால் உங்களால் முடியாது. உங்களிடம் பணம் இருந்தால்தான் உங்களால் முடியும். உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன செயல்கள் தேவைப்படுகிறதோ அதனை மட்டுமே செய்யுங்கள். காலத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம். காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது. 99 / 100 பேர் பணத்தால் மட்டும்தான் ஜெய்க்கிறார்கள். வேறு எந்த விஷயமும் அவர்களுக்கு தேவைப்பட்டது இல்லை. 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...