சமீபத்தில்தான் A2D V. TT சேனல்களின் கருத்து பற்றிமாற்றமாக URUTTU TECH என்று ஒரு வீடியோ பார்த்தேன் , உண்மையை சொல்லவேண்டும் என்றால் A2D சேனல்லில் நான் பார்த்த முதல் வீடியோவே இந்த வீடியோதான், ஆனால் இந்த வீடியோ அடிப்படையில் நிறைய கேள்விகளையும் யோசிக்க வேண்டிய விஷயங்களையும் நம்முடைய மனதுக்குள் கொடுக்கிறது. இந்த காலத்தில் பொதுவாக TECH என்று எதை சொல்ல வேண்டும் ? என்று மிக சரியாக இந்த வீடியோ சொல்லியுள்ளது ! இங்கே விளம்பர நோக்கமுள்ள சேனல்களுக்காக நிறைய கடுமையான விமர்சனங்களையும் கொடுத்து இருக்கிறது, கடைசியில் TT சேனல் விஷயத்தை புரிந்துகொண்டு ACCEPT பண்ணியது பாராட்டுக்கு உரியது என்றாலும் அடிப்படையில் கவனிக்க வேண்டியது வேறு விஷயம். இந்த வீடியோல நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டு உள்ளது. நான் சொல்வதை விடவும் இந்த காணொளியை பாருங்கள் புரியும் !!
நான் முதல் முதலாக ஃபோன் வாங்கியபோது சப்ஸ்க்ரைப் பண்ணின 2 சேனல்கள் , C4ETECH மற்றும் TT ஆனால் இப்போதுவரைக்கும் இந்த TT சேனல் ஃபோன்களை மட்டுமே விமர்சனம் பண்ணினாலும் PCDOC போல PROFESSIONAL PC & SOFTWARE தயாரிக்கும் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்ட்வேர் டேவலப்மெண்ட்டில் சிறப்பாக இருக்கும் ஒரு சேனல் மேல் விமர்சனம் கொடுக்கப்படும்போது கொஞ்சம் அந்த சேனல்லின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு உங்களின் விமர்சனத்தை கொடுத்து இருக்கலாமே !!
இங்கே YOUTUBE இல் நிறைய விமர்சனம் பண்ணும் CHANNEL கள் சொல்லும் தகவல்களில் நிறைய MISINFORMATION - களும் FLAWS - களும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒரு சில CHANNEL கள் மட்டும்தான் உள்ளது உள்ளபடி என்று தகவல்களை சரியாக சொல்கிறது !
இதுமட்டும் இல்லாமல் PAYMENT கிடைக்கும் என்ற பட்சத்தில் இந்த ப்ராடக்ட் மிக சிறப்பு என்றும் உண்மைக்கு கொஞ்சம் மாற்றான கருத்துக்களை சொல்ல ஒரு சில சேனல்கள் பண்ணும் விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது ! இந்த PRODUCT-இல் தரம் இல்லை என்றால் வாங்கியவர்கள் நிலைமை என்ன ஆவது ? !
இங்கே REVIEW AND NEWS பண்ணும் ஒரு சேனல் எதுக்காக மற்ற சேனல்களுடன் சேர்த்து தன்னை TECH COMMUNITY என்று சொல்லவேண்டும ? TECH REVIEW COMMUNITY என்று சொல்லலாமே ? அதே போல இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது . ஒரு லேப்டாப் ஓபன் பண்ணியோ அல்லது SOLDERING பண்ணியோ உங்கள் சேனல்களில் எந்த வீடியோவும் இல்லை என்னும்போது TECH என்ற வார்த்தைக்கு நீங்கள் கொடுக்கும் JUDGEMENT என்ன ?
TECH PROFESSIONAL லாக PC தயாரிப்புகள் மற்றும் REPAIR களை பண்ணும் அளவுக்கு உயர்ந்து இப்போது YT யில் விமர்சனங்களை கொடுக்கும் ஒருவரை எதுக்காக இப்படி தாக்கி பேச வேண்டும் ? A2D இன்றைக்கு வரைக்கும் அவங்க சேனல்லை நன்றாக அப்டேட் பண்ணி இருக்கிறார்கள். விமர்சனங்களில் ஒரு குறிப்பிட்ட ELECTRONIC பொருள் அதனுடைய CAPACITY யை விட அதிகமாக கொடுக்கும் என்று பொய் சொல்லும்போது உண்மையில் அதனுடைய CAPACITY இவ்வளவுதான் என்று சொன்னால் கூட அதனை தவறு என்று குற்றம் சாட்டி சம்மந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை கொடுக்கும் அளவுக்கு மோசமான COMPANY களும் உலகத்தில் இருக்கிறது என்பதை இந்த காணொளி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் !!
RAM அளவு VS. PROCESSOR SPEED என்பதே வேறு வேறு விஷயம் என்று எனக்கு A2D பார்த்த பின்னால்தான் புரிகிறது ! 32 BIT X86 OS க்கும் 64BIT X64 OS க்கும் என்ன வித்தியாசம் ? இந்த மாதிரி கேள்விகள் எல்லாமே TECHNICAL ஆன கேள்வி , A2D இன் கருத்து என்னவென்றால் சப்போஸ் நான் இப்போது ஒரு YT TECH CHANNEL ஆரம்பித்து இங்கே நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளாமல்லே வெறுமனை நுனிப்புல் மேய்ந்துவிட்டு தகவல்களை மேலோட்டமாக படித்துவிட்டு வீடியோவில் ஸீன் போட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் ?
இப்படி நடந்து நான் அடைப்படை தெரியாமல் பேசினால் நான் ஒரு தரமான TECH PERSON - ஆ ? !! ஒரு வேளை நான் இது போன்று ஒரு மனிதனாக இருந்தால் கடைசியில் என்னுடைய மனதுக்குள் நான் மட்டுமே சிறந்த கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்றும் எனக்கு எல்லாமே தெரியும் என்றும் என்னால் எல்லாமே முடியும் என்றும் கற்பனையாக நம்பிக்கொண்டு இல்லாத CONCEPT களை எல்லாம் சொல்லி என்னுடைய BRAIN ஐ நானே மிகைப்படுத்தி காட்டிக்கொண்டு இருப்பேன். அதனால்தான் MISINFORMATION களை கொடுப்பது தவறு ! தவறு ! தவறு !
இதனால் நான் பணம் சம்பாத்திக்கலாம் [?] ஆனால் எத்தனை நாட்களுக்கு ? கொடுக்கபட்ட REPLY வீடியோவில் குறிப்பட்ட சில விஷயங்கள் எதிர் தரப்பாலும் கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது பாராட்டுக்கு உரியது . A2D CHANNEL நேர்மையாக தன்னுடைய CHANNEL மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் சரியான நிரூபணம் கொடுத்து சரியான தகவல்களை மட்டும்தான் கொடுக்கிறோம் என்று A2D சேனல் தரப்பில் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக நான் சொல்வது என்னவென்றால் இந்த காலத்தில் TECH REVEIWER க்கும் TECH PROFESSIONAL க்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. ஒரு FOOTAGE இல் நீங்கள் தவறாக ஒரு இன்ஃபர்மேஷன் கொடுத்துவிட்டால் பின்னாட்களில் YOUTUBE EDITING இல் சரிபண்ணிவிடலாமே !! அல்லது COMMENT SECTION இல் இந்த இன்ஃபர்மேஷன் நான் கொடுக்கும்போது தவறாக கொடுத்துவிட்டேன். உண்மையில் இதுதான் சரியான விஷயம் என்று உண்மையான CORRECTED INFORMATION - ஐ சொல்லிவிட்டு அடுத்த விஷயங்களை பார்க்கலாமே. !! அதனை விட்டுவிட்டு களத்தில் இறங்கி பேச்சுவார்த்தைகளை பண்ணுவது இன்னுமே பிரச்சனைகளைத்தானே கொண்டுவரும் ?
No comments:
Post a Comment