1. PIRATES OF THE CARIBBEAN : CURSE OF THE BLACK PEARL (2003)
இந்த படத்தை நான் நிறைய முறை பார்த்து இருக்கிறேன் , இந்த படம் 2003 ல வெளிவந்தது ஆனால் இன்னைக்கு பார்த்தால் கூட லேடஸ்ட் காமிரா வாங்கி ஷாட் பண்ணுண மாதிரி இருக்கும், விஷுவல்லி ஸ்டன்னிங் அப்படின்னு ஒரு படம் . கேப்டன் ஜாக் ஸ்பேரோவுடைய கடற்கொள்ளைக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் இந்த படத்தில் ஒரு அழகான கதையான நல்ல கலகலப்பான நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். முதல் காட்சியில இருந்து கடைசி காட்சி வரைக்கும் இந்த படம் போர் அடிக்காது , அவ்வளவு இண்டரெஸ்ட்டிங்காக இருக்கும். இப்போ ஒரு படம் பார்க்கிறோம் ஆனால் அந்த படத்தில் THE CONTRACTOR படம் மாதிரி மிகவுமே பரிச்சியமான ஆன ஒரு கதையை சொல்வதை விட ஏதாவது புதுசா பண்ணனும். பெரிய பட்ஜெட் இருக்கு, பெரிய ஸ்டுடியோ இருக்கு , மேலும் பராக்டிக்கல்லாக ஆர்ட்வொர்க் கொடுத்து ரொம்பவுமே நேர்த்தியாக ஸ்டண்ட் வொர்க் பண்ணியிருப்பார்கள். கத்தி சண்டை எல்லாம் அவ்வளவு உண்மையாக இருக்கும். இந்த ஒரு புதையல் தேடும் கதைதான் ஆனால் சொல்லப்பட்ட விதம் ரொம்பவுமே வேல்யூவான விதம். ஒரு சினிமாவை சினிமாவா எப்படி ரொம்ப கிராண்ட்டாக காட்டலாம் என்ற விஷயத்தில் இந்த படம் ஒரு நல்ல எக்ஸாம்பில்.
2. CASINO ROYALE (2006)
பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படம் என்றாலே ஒரு ஃபார்மட் இருக்கும் ஆனால் இந்த படம் அந்த ஃபார்மட்க்கு நேர் ஆப்போஸிட்ல இருக்கும் , ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் ஒரு பெரிய தொகையை மீட்டுக்கொடுத்து கெட்டவங்களை தோற்கடிக்க அவங்களுடைய நெட்வொர்க்குக்கு உள்ளே போகிறார் என்றபோது இந்த படம் பார்க்க சாதாரணமான ஒன் லைன் போல இருந்தாலும் எக்ஸிக்யூஷன் பண்ணியிருப்பது வேற லெவல்லில் இருக்கும். பொதுவாக நல்ல ரசனை என்பது ஒரு நல்ல கதையில் அந்த விஷுவல் ஸ்டைல் நன்றாக இருந்தால் மட்டும்தான் ஆடியன்ஸ்க்கு பெர்பெக்ட்டாக எடுத்துக்கொள்ள முடியும். இந்த படத்தில் இப்படி ஒரு ஸ்ட்ராங்க்கான திரைக்கதை இருப்பதால்தான் பெஸ்ட்டாக இருக்கிறது.
3. MINIONS (2016)
இந்த படம் நான் முதல் டைம் பார்க்கும்போது நான் DESPICABLE ME படங்களை பார்த்தது இல்லை. மினியான்ஸ் கதாப்பத்திரங்கள்க்கு ஒரு இன்ட்ரோ கொடுப்பாங்க பாருங்களென் , ரொம்ப இன்னொஸெண்ட் இந்த மினியான்ஸ் ஆனால் டைனோஸர்கள் காலத்தில் இருந்தே உயிரோடு இருக்கும் இந்த குட்டி பையன்கள் வேலை பார்த்தால் சூப்பர் வில்லன்களுக்காக மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும் என்ற பாலிசியோடு அலைந்துகொண்டு இருக்கும் . சிங்கிள் செல் ஆர்கானிஸம்ஸ் என்பதால் மட்டும் இல்லை எமோஷனல்லாகவும் மினியான்ஸ் எல்லாரிடமும் நன்றாக பழக்குகிறது, கம்யூனிகேட் பண்ணுகிறது. ஈவென் இந்த படத்தில் மினியான்ஸ்ஸின் ஆரிஜின்ஸ் பற்றி எதுவுமே தெரியவில்லை என்றாலும் மினியான்ஸ் ஒரு பார்ட் ஆஃப் தி லைப் ஸ்லாப்ஸ்டிக் அனிமேஷன் கதாப்பத்திரங்கள். இந்த படம் செம்ம காமெடியாக இருக்கும். இந்த படத்தில் ஒரு நல்ல உணர்வு இருக்கும். இந்த மினியான்ஸ்க்கு நல்ல இண்டெலிஜன்ஸ் லெவல் இருக்கிறது ஆனால் நல்ல கேரக்டர் டேவலப்மெண்ட்டும் இருக்கிறது அதுதான் இந்த படத்தில் எனக்கு ஸ்பெஷல்லாக இருந்தது.கடைசியாக கம் ஆன் இந்த கியூட்டான குட்டி மினியான்ஸ்களை யாருக்குதான் பிடிக்காது ?
No comments:
Post a Comment