இந்த 3 மணி நேரம் 13 நிமிஷம் இருக்கும் ஒரு EPIC SEQUEL படம் உங்களுக்கு மறக்கவே முடியாத ஒரு அட்வென்சர் கொடுக்கும் , ஒரு பக்கம் பாண்டோரா பிளானெட்டை மனிதர்களின் படையெடுப்பில் இருந்து காப்பாற்றி அங்கேயே நிரந்தரமாக தங்கி குடும்பம் குழந்தைகள் என்று சந்தோஷமான ஒரு வாழ்க்கையை ஜேக் வாழ்ந்தாலும் ஒரு ஒரு முறையும் எதிரிகளின் தாக்குதலை எதிர்பார்த்து கவனமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஆனால் புதிதாக படைகளை சேர்த்துக்கொண்டு மறுபடியும் பல வருடங்களுக்கு பின்னால் போன படத்தின் கொடூரமான கோபக்கார வில்லனான மைல்ஸ்ஸின் க்ளோனை மறுபடியும் உயிரோடு கொண்டுவந்து அவதார் உலகத்தின் உடலில் உருவாக்கியதோடு மட்டும் இல்லாமல் அவரின் மொத்த இராணுவ படையையும் மறுமுறை உயிர்கொடுத்து கொண்டுவந்துவிடுகிறார்கள். இப்போது ஜேக் குடும்பத்தை பழிவாங்க மொத்த ஆர்மியையும் களம் இறக்கி பாண்டோராவின் மேல் படையெடுக்கிறார் இந்த ஜேக் V. மைல்ஸ் போராட்டத்தில் குடும்பத்தில் இருப்பவர்களின் உயிரை காப்பாற்ற கடல் பகுதிகளில் தீவுகளில் வாழும் மக்களாக இருக்கும் OMATIKAYA தீவுகளில் அடைக்கலம் கேட்கிறார் . பின்னால் எப்படி ஜேக் அவருடைய குடும்பத்தை காப்பாற்ற மைல்ஸ்ஸின் படைகளை எதிர்த்து போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து சொல்லவேண்டும் என்றால் முதலாவதாக நான் சொல்ல வேண்டிய விஷயம் போன படம் போல போதுமான இம்ப்ரஷன் இல்லாமல் ஒரு நேரான வேகமான பிரபஞ்ச மோதல் கதை என்று இல்லாமல் நிறுத்தி நிதானமாக ஒரு EPIC படத்தை ஸ்டுடியோ கொடுத்துள்ளது. விஷுவல் எஃப்பக்ட்ஸ் ஃபிரேம்களை பார்க்கும்போது இன்னொரு பிளானெட்டின் கடல் அடியில் இருக்கும் உயிரினங்களை பார்க்கிறோம் என்று காட்சிகளுக்குள் குதிக்கும் அளவுக்கு அவ்வளவு தெளிவான விஷுவல்ஸ். இங்கே AI இன்ஸ்டால் பண்ணி மிகவும் கிரியேட்டிவ்வான உலகத்தை உருவாக்க முடிவதால் போன படத்துக்கு இந்த படம் ஒரு பக்கா UPGRADE. பொதுவாக இங்கிலீஷ்ஷில் பார்க்க வேண்டும். தமிழில் பார்ப்பவர்கள் மட்டமான டேஸ்ட் உள்ளவர்க்ள் என்று சில பேர் கருத்துக்களை சொல்வார்கள். ஃபேன் டப்க்காக மொழி மாற்றம் பண்ணிய அதே கம்ப்யூட்டர் வாய்ஸ்களை பார்த்து அதுதான் தமிழ் டப்பிங் என்று நினைக்க வேண்டாம். நம்ம ஊரு தமிழ் டப்பிங் கலைஞர்கள் ரொம்பவும் ஸ்வாரஸ்யமாக வசனங்களை கொடுப்பதில் மிகவும் திறமையான மனிதர்கள் , விஜய் சேதுபதி [AVENGERS ENDGAME] , சித்தாரத் [THE LION KING] , ஸ்ருதி ஹாசன் [FROZEN 2] , இன்னும் சொல்லப்போனால் ஆர்யா [TERMINATOR - DARK FATE] என்று CELIBRITY STATUS இருப்பவர்களை வந்து புரஃபஷனல் டப்பிங் பண்ண சொல்லலாம் ஆனால் நான் சொல்லும் கருத்து என்னவென்றால் DUBBING TEAM இந்த விஷயத்தில் அனுபவம் உள்ளவர்கள். படம் டப்பிங் என்ற வகையில் பார்த்தால் DUBBING TEAM இந்த WORK கை எடுத்துக்கொண்டால்தான் நன்றாக இருக்கும். KONG SKULL ISLAND , MISSION IMPOSSIBLE FALLOUT போன்ற படம் எல்லாம் பெஸ்ட் டப்பிங்க்கு ஒரு நல்ல சாட்சி. அவதார் படமும் ENGLISH வெளியீட்டில் பார்த்தால் அது உங்கள் விருப்பம் ஆனால் TAMIL DUBBING நன்றாகவே உள்ளது. ஸ்டூடியோக்கள் பிரபலமானவர்களை தேடாமல் நல்ல DUBBING EXPERTS களை பெரிய ப்ராஜக்ட்டில் பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடய கருத்து. இப்போது இந்த படத்தை விட்டுவிட்டு OUT OF TOPIC சென்றுவிட்டேன். இப்போது படத்தை பார்க்கலாம். போன படம் போல இல்லாமல் இந்த படத்தில் நிறைய புதிய கதாப்பாத்திரங்கள் மேலும் சூப்பர் ஹீரோ படங்கள் போல தரமான ஆக்ஷன் காட்சிகள். இந்த உலகத்தில் இயற்கையை அழிக்க கூடாது என்ற மெசேஜ் இன்னும் இந்த படத்தில் கடல்களை அழிக்க கூடாது என்று கடினமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு தேதிக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துகொண்டு இருப்பது ஆயிரத்தில் ஒருவருக்கு கூட தெரியவே இல்லை. ஆனால் இந்த படம் இன்னொரு முறை பூமியை நாம் எப்படி கட்டுப்படுத்தி உயிரினங்களின் வாழ்க்கையை நம்முடைய சுயநலத்துக்காக அழிக்கிறோம் என்று நன்றாக சொல்லியுள்ளது. இந்த மாதிரி படங்கள் கிடைப்பது அரிது. மொத்ததில் ஒரு அழகான சினிமாட்டிக் ப்ரெஸ்ஸேன்டேஷன். IMAX இல் பாருங்கள். 3D விட IMAX நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment