Tuesday, October 31, 2023

CINEMA TALKS - MAAMANNAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

இந்த படத்துடைய கதையை ஸ்பாய்லர் பண்ணாமல் இந்த படத்தை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவது கஷ்டம் , இந்த கதை சேலம் மாவட்டத்தில் நடக்கிறது நேர்மையான மனம் உள்ள ஒரு நல்ல மனிதராக இருக்கிறார் எம். எல். ஏ. மாமன்னன் , தன்னுடைய வாழ்க்கையில் பிரிவினையும் வெறுப்பும் காரணமாக நிறைய பாதிப்புகளை சந்தித்து இருக்கிறார். இன்னொரு பக்கம் ஊருக்குள் மிகவும் மரியாதையான குடும்பமாக இருக்கும் குடும்பமதான் ரத்னா வேலுவின் குடும்பம். சின்ன வயதில் இருந்தே பிரிவினையை விதைத்தே வளர்த்ததால் தன்னுடைய குடும்பம் அதிகாரமான அடிப்படையில்தான் செயல்படவேண்டும் என்றும் அடிமட்ட குடும்பங்களில் இருந்து யார் வந்தாலும் அவர்களை தாக்கலாம் என்றுமே எண்ணத்தில் வாழ்பவர். இந்த நிலையில் பணவசதி இல்லாத அடிமட்ட கல்லூரி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தொடங்கப்பட்ட இலவச சேவை அமைப்பு ரத்னவேலுவின் அண்ணனால் தாக்கப்படுகிறது . இதனால் வன்முறை அதிகமாகவே ஒரு கட்டத்தில் நியாயம் கேட்டு முறையாக சமாதானமாக போய்விடவேண்டும் என்று நம்பிக்கையோடு  ரத்னவேலுவிடம் பேச சென்ற மாமன்னனையும் அவருடைய பையனையும் அடித்து அவமானப்படுத்துகிறார் மேலும் கொல்லவும் முயற்சிகளை பண்ணுகிறார். இந்த நிலையில் பொதுத்தேர்தல்லில் நின்று நிறைய பிரச்சனைகளையும் வன்முறைகளையும் சந்திக்கும் மாமன்னனும் அவருடையை பையன் அதிவீரனும் கடைசியில்  எப்படி ரத்னவேலு கொடுக்கும் பிரச்சனை எல்லாமே கடந்து வெற்றி அடைகின்றனர் என்பதே இந்த படத்தின் கதை. போன படமான கர்ணன் படம் பார்த்து முடித்ததும் மனதுக்கு ரொம்ப நாட்கள் பாரமாக இருந்த படம் என்றே சொல்லலாம். இந்த உலகத்தில் சமஉரிமை என்பது பிறந்த குழந்தைக்கு கூட கிடைக்க வேண்டும். ஒரு காலத்தில் பணம் இருப்பவர்கள் அவர்களுடைய குடும்பத்துக்கு மதிப்பு எப்போதுமே கிடைக்க வேண்டும் என்பதால்தானே பிரிவுகளை பிரித்து சமுதாயத்தையே பிரித்து வைத்தார்கள் ? அவர்களுடைய இந்த செயல்தான் தவறானது. இந்த படம் மிகவும் கவனமாக சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பாஸில் கதாப்பாத்திரம் மிக அருமையாக உள்ளது. தன்னுடைய குடும்பம் தன்னுடைய ஈகோ எப்போதுமே பெரிதாக மதிக்கப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக எந்த எல்லைக்கும் சென்று உயிரை எடுக்கவும் தயங்காத ஒருவர். இன்னொரு பக்கம் ஒரு சின்ன தவறு பண்ணியதற்காக அவர்களுடைய நெருக்கமான மூன்று உயிர்களை இனவெறியின் வன்முறையில் இழந்து நின்ற மாமன்னன் குடும்பம். இந்த படம் சொல்லவந்த கருத்தை கிளைமாக்ஸ்ஸில் கடைசியாக சொல்லி முடிக்கிறது. ஒரு நேர்மையான படம். இங்கே மனிதர்களுக்குள் பெரியவர்கள் சின்னவர்கள் என்று பார்க்க கூடாது என்று ஒரு அடிப்படை கருத்தை மிக சரியாக சொன்ன படம் என்று சொல்லலாம். நிறைய அரசியல் மற்றும் சமூக அமைப்பின் குறைகள் இந்த படத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பான காட்சிகளின் அமைப்பால் மனதை படத்தின் கதைக்குள் ஆழமாக புதைத்துவிடும் அளவுக்கு காமிரா ரொம்ப பிரமாதமாக இந்த படத்தில் இருக்கும். ஒவ்வொரு ஷாட்ஸ்ஸும் ஒரு சிம்பிள்ளி அமேஸிங்காக இருக்கும். ஒரு நிஜ வாழ்க்கை கதையை பார்ப்பது போலவே படமும் காட்சிகளும் வசனங்களும் என்று ஒவ்வொரு சின்ன சின்ன விஷயமும் படத்தின் கதையோடு சென்றுக்கொண்டுதான் இருக்கிறது. கதைக்கு அவசியமற்ற காட்சிகள் என்று எதுவுமே இல்லை என்பதால் அதையும் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு சொசைட்டியில் சாதியும் பேதமும் எந்த அளவுக்கு பாதிப்பை கொடுக்கிறது என்று இந்த படம் ரொம்ப சரியான நேர்கோட்டில் சொல்லி இருக்கிறது. இங்கே சுதந்திரம் பிறப்புரிமை என்ற கருத்தை சிறப்பாக முன்வைக்கிறது. இந்த படத்தை ஸ்டூடண்ட்ஸ் , இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த படத்துடைய நோக்கம் நிறைய பேரை சேரவேண்டும். மாரி செல்வராஜ் உண்மையில் ஒரு பிரமாதமான கதையை தடைகளை உடைத்து நுணுக்கமான கதையமைப்பின் மூலமாக ஒரு இண்டென்ஸ் எமோஷனல் லீகல் டிராமாவாக கொடுத்து இருக்கிறார். இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...