Wednesday, May 29, 2024

MUSIC TALKS - ASKU MAARO ASKU MAARO ULTIMATE NAMMA PAIRO LOOKU VITTA WORLD WAARO SONG - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !




ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !


உன்னால உன்னால எல்லாமே உன்னால

ஓக்கேன்னு சொன்னாலே கெத்தாவேன் தன்னால

கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால

360 DEGREE - ல நான்ஸ்ட்டாப்பா செஞ்சாளே !


உன்னப்போல் ஆள நான் பாத்ததில்ல 

யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்ல

HEART- தான் போகுது ஸ்கூலுகுள்ள LOVE SYLLABUS-ஐ நீ சொல்ல

மெல்லமா வந்தனா மிஸ் வேர்ல்டு

கொஞ்சம் வேகமா வந்தனா மிஸ் கோல்டு

சொல்ல சொல்ல என் நெஞ்சுக்குள்ள ஹை வோல்ட் கரண்ட்டு


ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !

ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !


சுத்தாத சுத்தாத ரீல் ரீலா சுத்தாத

இல்லாத பொல்லாத கதையெல்லாம் விடாத

கொல்லாத கொல்லாத ஸீன் போட்டு கொல்லாத

கத்தாத கத்தாத என் காதுல கத்தாத


உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு நான் பாத்தவ கொஞ்சம் நீ வாய மூடு

செல்லதா செல்லதா காயபோடு என்கிட்டதான் செல்லாது

அப்புடி இப்புடி நூல விட்டு வந்து டெய்லிதான் மொக்கையும் வாங்கிகிட்டு…

காறி துப்புனாலும் மூஞ்சய வச்சு கேளு இது என்னடா பொழப்பு ?


அஸ்கு மாரோ அஸ்க மாரோ ஆள பாத்தா பக்கா ஜீரோ

பல்பு நிறைய வாங்கிட்டானோ கரண்ட்டு பில்ல கட்டிட்டானோ 


ASKU MAARO ASKAA MAARO 

ஆள பாத்தா பக்கா ZERO

BULB நிறைய வாங்கிட்டானோ

கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ


ASKU MAARO ASKAA MAARO 

ஆள பாத்தா பக்கா ZERO

BULB நிறைய வாங்கிட்டானோ

கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ


I WANNA MARRY YOU !

YOU - என்னை - MARRY ME ?

ஃபோர் ட்வெண்டி ஃபோர் ட்வெண்டி

இப்ப ஜோடி போட்டாச்சு !! 


MUMMY- ம் DADDY - ம் வெய்ட்டிங் ஃபார் யூ !

UNCLE-ம் AUNTY-ம் வெயிட்டிங் ஃபார் மீ



நீ ரீலுதான் ரீலுதான் ஓட்டினாலும்  நம்ம தியேட்டரு ஃபுல் ஆகும் !

MY HOUSE -தான்  HOUSE OPEN ஃபார் யூ !


இனி LOVE-ஸ் தான் பண்ணலாம் கம் வித் மீ

நீ விழுந்து வாரி மொக்கை வாங்குனாலும் தில்லா நிக்கிற ஐ லவ் யூ

ASKU MAARO - ஹோ !  ULTIMATE - ஹோ ! 

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !


ASKU MAARO ASKAA MAARO 

ஆள பாத்தா அட்சா HERO  ! 

EYES - இரண்டும் குத்தும் AIRROW

யாரோ யாரோ இவன்தான் யாரோ ?

ASKU MAARO ASKU MAARO 

ULTIMATE - நம்ம PAIR- O

LOOK-U விட்டா WORLD WAAR-O குண்டு போடும் குட்டி SPARROW !

MUSIC TALKS - ENNAVALE ENNAI MARANDHATHU YENO ENNI VANDHEN UN NINAIVUGAL THAAN - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !




என்னவளே என்னை மறந்தது ஏனோ ? எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்

என்னை சிதைத்தவள் பின்பு அணைத்தவள் இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

என்னவளே என்னை மறந்தது ஏனோ ? எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்

என்னை சிதைத்தவள் பின்பு அணைத்தவள் இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

அடி காலையிலே உன் புகை படம் பார்த்து வேலைக்கு போக தோணல பாப்பு

கேளடி இந்த யாசகன் பாட்டு உள்ளத்திலே என்னை பூட்டு

உப்பங் காற்றே மீண்டும் என் மேல் வீசு  என் மேல் வீசு

காதல் பெண்ணே என்னிடம் காதல் பேசு காதல் பேசு

நெற்றியில் நான் வைத்தேன் குங்கும பொட்டு குங்கும பொட்டு

சொல் பெண்ணே ஏன் சென்றாய் என்னை விட்டு என்னை விட்டு

உன் போல் பெண் யாரென சொல்லு இதயத்தை நீ வந்து கேளு

காத்திருக்க நேரம் இல்லை வந்து சேரு கொல்லுதடி நினைவுகள்

என்னவளே என்னை மறந்தது ஏனோ ? எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்

என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள் இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

என்னவளே என்னை மறந்தது ஏனோ ? எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்

என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள் இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

பெண்ணே நம் காதல் கைகூடும் நேரம் வந்தால்

விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்

நானே என்றால் மனம் வானம் செல்லும் சென்ற பின்னால் மழை சாரல் தூவும்

ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் ? எதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில் 

மனம் தேடும் உன்னை இன்று தந்தேன் என்னை  நீங்காதே என்னை இல்லை இல்லை

என்னவளே என்னை மறந்தது ஏனோ ? எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்

என்னை சிதைத்தவள் பின்பு அணைத்தவள் இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

CINEMA TALKS - TEASING MASTER - TAKAGI SAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இது ஜப்பானில் நடக்கும் வளர் இளம் பருவ காலங்களில் நிறுத்தி நிதானமாக சொல்லப்பட்ட பள்ளிக்கூட காதல் கதையாக இருக்கிறது. இந்த படம் இதே பெயரை வைத்துள்ள ஒரு தொடரின் கிளைமாக்ஸ் போர்ஷன்க்கான ஒரு திரைப்பட அடாப்ஷனாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகி எப்போதுமே விளையாட்டுட்டுத்தனமாக அவருடைய கதாநாயகரை கலாய்த்து கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவருமே பள்ளிக்கூடம் மாணவர்களாக இருப்பதால் விடுமுறை காலங்களில் இவர்கள் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று கதாநாயகர் கடினமாக முடிவு எடுக்கிறார் கதாநாயகனுக்கு எப்படியாவது கதாநாயகி பேச்சு சாமர்த்தியத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று ஆசைதான் இருக்கிறது. ஆனால் கதாநாயகி எப்போதுமே கதாநாயகனை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு அமைதியான சந்தோஷமான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எப்படி நடக்கக்கூடிய சம்பவங்கள் கதாநாயகியின் காதலை கதாநாயகனிடம் சொல்ல வைக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை‌. பேண்டஸி காட்சிகள் எல்லாம் இல்லாமல் சராசரி ரொமான்டிக் திரைப்படம் ஆகவே இந்த படம் இருக்கிறது. ஜப்பானிய அனிமேஷன் படங்கள் உங்களுக்கு ஃபேமிலியராக இருந்தால் இந்த படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். மற்றபடி தமிழ்நாடு ஆடியன்ஸ்க்கு என்று பார்த்தால் இதுவுமே ஒரு சராசரியான காதல் கதை தான்.பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை நடக்கக்கூடிய ஒரு சராசரியான காதல் கதை நமக்கு வேண்டுமென்றால் இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இதுதான் இந்த படத்தை பற்றியே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் இந்த படத்தை பற்றி உங்கள் கருத்துக்களைப் போல மேலும் நிறைய கருத்துக்கள் தெரிந்து கொள்ள இந்த வலைப்பூவை நீங்கள் சந்தா செய்து கொள்ளவும். இந்த மாதிரியான அருமையான காதல் கதைகளை பார்த்தால் நம்ம தமிழ் படங்களில் இண்டர்வெல் ஷாட்டில் ஹீரோயினை தீர்த்துக்கட்டும் அட்லி படங்களை எல்லாம் பிளேலிஸ்டில் இருந்து எடுத்துவிடுவீர்கள் என்பது சிறப்பான ஒரு  ஃபன் ஃபேக்ட் ! 

GENERAL TALKS - உடலும் மனதும் சரியான நிலையில் இருக்க வேண்டும் !



நம்ம உடலும் மனதும் சரியான நிலைமையில் இல்லாத போது நாம் என்னதான் முயற்சிகள் பண்ணினாலும் நம்மால் வெற்றி அடைய முடியாது . இது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் தப்பான விஷயங்களாலும் நம்முடைய வாழ்க்கைக்கு சப்போர்ட் இல்லாத சுற்றுப்புறச் சூழல்களாலும் கூட நடக்கிறது. பெரும்பாலும் பணக்கார குடும்பங்களில் இருப்பவர்கள் இது போன்ற கஷ்டங்களை அனுபவிப்பது இல்லை. உடலையும் மனதையும் எப்போதும் சரியாக நிலைமையில் பார்த்துக் கொள்ள அவர்களிடம் எப்போதுமே போதுமான பணம் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் உடலையும் மனதையும் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் நாம் வெற்றியை அடைந்தாலும் அந்த வெற்றிக்கான சந்தோஷம் நமக்கு இருக்காது. இது ஒரு விதமான கலை வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்தான் இத்தகைய கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும். வெற்றியடைய போராடுபவர்கள் அனைவருக்குமே வெற்றி கிடைக்காது ஏனென்றால் ஜெயிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். யாராவது வாழ்க்கையில் வெற்றி அடைவது சுலபமான விஷயம் என்றும் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது சுலபமான விஷயம் என்றும்  சொன்னால் அவர்களிடம் ஏற்கனவே பணமும் வெற்றியும் இருக்கிறது என்று தான் அர்த்தம். இல்லையென்றால் அவர்கள் உங்களை ஏமாற்றவும் மேலும் தவறாக பயன்படுத்தவும் இத்தகைய வார்த்தைகளை சொல்லலாம். நம்முடைய உடலும் மனதும் எதனால் இப்போது சரியாக இல்லை என்பதை கவனமாக யோசிக்க வேண்டும் ! சொல்லப் போனால் இன்னும் நன்றாக யோசித்து கண்டிப்பாக ஒரு நிதானமான முடிவு எடுக்க வேண்டும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கப் போகும் கஷ்டங்கள் ஒரு வரைபடத்தை போல வெற்றியை நோக்கி உயரத்தில் சென்று கொண்டே தான் இருக்கும். கஷ்டங்கள் குறைய வாய்ப்பில்லை ஆனால் நம்முடைய திறமைகளை குறைய நாம் விடக்கூடாது. இந்த உலகத்தில் நீங்கள் யாரைத்தான் நம்புவீர்கள் உங்களுடைய பெற்றோர்களையா ஆசிரியர்களையா நண்பர்களையா சகோதரர்களையா இல்லை சொந்தமா பந்தமா யாராக இருந்தாலும் சரி அவர்கள் உங்களுடைய தோல்வியில் உங்களை விட்டு விட்டு தரையில் விட்டு விட்டு சென்று தான் விடுவார்கள் ! இந்த உலகத்தில் கடைசி வரைக்கும் உங்களுக்கு சப்போர்ட் என்று நீங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் மற்றவர்களுடைய கருணையின் பார்வையையும் கைகளில் ஆதரவையும் நீங்கள் எப்போதும் பெற முயற்சிக்க வேண்டாம்‌. உங்களுக்கு என்று ஒரு கௌரவமான வாழ்க்கையை கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய உடலை மனதையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமான ஒரு விஷயமாகும். இந்த விஷயத்தை இந்த வலைப்பூவில் இருந்து தெரிந்துகொண்டு வலைப்பூவுக்கு சந்தா செய்துவிடுங்கள் !

MUSIC TALKS - NEE ASAINDHU NADAKKUM AZHAGAI RASIKKA AYAL DESANGAL KENJUM ! - TAMIL LYRICS !

 


நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்

உன் அழகை மொத்தம் அச்சிட வைக்க தமிழே வந்து கொஞ்சும்

நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்

உன் அழகை மொத்தம் அச்சிட வைக்க தமிழே வந்து கொஞ்சும்


உன் உதட்டில் இருந்து தெறிக்கும் சிவப்பில் செவ்வானம் நனையும்

உன் அருகாமை கிடைத்தாலே என் ஜீவன் மலரும்


உன் மெல்லிய கூந்தல் துள்ளியபோது உயிரே அதில் உறையும்

உன் பரிபூரண பளிங்கு வண்ணம் பெருமூச்சு நலரும்


சாமஜவரகமனா நீ சாகசங்களின் குணமா இடையில் அதிரும் 

உடையில் அசையும் பருவ திமிரின் ரதமா

ஆவரணங்கள் நகமா இவள் ஆயுள்காலம் வரமா

மனதை அள்ளி உயிரை கில்லி உரசுராயே சுகமா


 நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்

உன் அழகை மொத்தம் அச்சிட வைக்க தமிழே வந்து கொஞ்சும்

மன்மத வாசமா மல்லிகை தேசமா உன் உடையில் மூடும் 

முறைவிடங்கள் இயற்பியல் மரபா ?

காந்தமே தேகமா கனிமங்கள் பாகமா

உனை கண்டு நானும் மாறினேனே காகித மரமா

நீ நீராடும் நளினமா ஆயுதமே அகரமா சிதறுதே இதயமே வா வா

உன் அருடம் மதுரவா கை கண்டால் சிதறுமோ 

அருகில் நின்று அசையும்போது சுட சுட சுகமா


நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்

உன் அழகை மொத்தம் அச்சிட வைக்க தமிழே வந்து கொஞ்சும்


உன் உதட்டில் இருந்து தெறிக்கும் சிவப்பில் செவ்வானமே நனையும்

உன் அருகாமை கிடைத்தாலே என் ஜீவன் மலரும்

MUSIC TALKS - URUKKIYA NATCHATHIRA THOORAL THOORAL - TAMIL LYRICS - VERA LEVEL PAATU



உருக்கிய நட்சத்திரத் தூறல் தூறல் 

கிறக்கிய என் அழகின் சாரல் சாரல்

பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல் மூரல்

நெருக்கி இறுக்கி செருக்கை எாிக்கும் ஆறல் ஆறல்

மனோகாி. மனோகாி கள்ளன் நானோ உன்னை அள்ள 

மெல்ல மெல்ல வந்தேன்! எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!


ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள

சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல். தேடல்

உருக்கிய நட்சத்திரத் தூறல் தூறல் 

கிறக்கிய என் அழகின் சாரல் சாரல்


மேக துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ வேறு என் தேடல் வேறு

காந்தள் பூவை கிள்ளி கைவிரல் செய்தானோ வேறு என் தேடல் வேறு

ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!

யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம் ரெண்டைச் செய்தானோ!

வழக்கிட வா! மனோகாி மனோகாி மனோகாி மனோகாி

பூவை விட்டு பூவில் தாவி தேனை உண்ணும் வண்டாய்

பாகம் விட்டு பாகம் தாவினேன்! ஒளித்து மறைத்த 

வளத்தை எடுக்க தேடல். தேடல்

உருக்கிய நட்சத்திரத் தூறல் தூறல் 

கிறக்கிய என் அழகின் சாரல் சாரல்

GENERAL TALKS - மெட்ரிக் டன் கணக்கில் பொய்களை சொல்லுவது எப்படி ?



பொதுவாகவே காதல் என்று வந்துவிட்டால் பொய்கள் கட்டாயமாக இருக்கிறது. உண்மையான காதல் என்பது உலகத்தில் மிக மிக கொஞ்சமாகத்தான் இருக்கும் ! சராசரி காதல் என்றால் கன்டெய்னர் கன்டெய்னராக பொய்களை சொன்னால்தான் காதல் நிலைக்கும் என்பது உலக நியதி !  ஒரு மன்னருக்கு பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும். ஒருமுறை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார். இரு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம் கோபமாக, ”என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்!“ என்று கூறியது. இதனைக் கேட்ட மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த புறாவிடம், “என்ன புறாவே. இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே. எப்படி உன்னால் முடியும்?“ என்று கேட்டார். அதற்கு அந்த ஆண்புறா, ”மன்னரே. என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன் மனைவியிடம் சென்றது. “மன்னர் கூப்பிட்டாரே. எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது. “நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படி யெல்லாம் செய்தவிடாதே என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“என்றதாம் ஆண்புறா. காதலிக்கும் பறவைகள் என்றாலும் பொய்களும் கதைகளும் இல்லாமல் வாழ்க்கையில் மரியாதையை வாங்கவே முடிவது இல்லையே ? கம்மிட்டட் மக்கள் ரொம்பவே பாவம் ! 

GENERAL TALKS - பட்டை சாதம் டோக்கன் ! - ஒரு அவார்ட் வின்னிங் (பண்ண வேண்டிய) சிறுகதை !







ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைப்பயிற்சி போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா. அப்போ அங்க ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்கரத பார்த்த ராஜா மந்திரி அந்த வெள்ளரிக்காய பரிச்துகிட்டு வா சாப்பிடலாம் ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனப்போ அது கிட்ட உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் “ஐயா! அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்” ன்னு. ராஜா சொன்னான் யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு வாந்தி வருதான்னு பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டான் “யோவ்! கபோதி இதுக்கு என்ன மருந்து”ன்னு. அந்த குருடன் சொன்னான் “அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும் அத கைல கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிக்கும்” ன்னு. ராஜா அதேபோல் அந்த இலையை கொடுக்க மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து கேட்டான் “உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட் ஆ சொன்ன!” அப்படின்னு. குருடன் சொன்னான் “ராஜா! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வெச்சிடுவான்.” ராஜாக்கு சந்தோஷம். “இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலியா இரு”. சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா “எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிரீங்களா?” ன்னு கேட்டான். ராஜா சரி இதுல அசல் வைரம் எது போலியானது எதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுண்ணு மந்திரிய கூப்ட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததாலே எங்கயாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னு ட்டான். ராஜா சொன்னான் “மந்திரி போய் அந்த கபோதிய கூட்டிண்டு வா அவன்தான் காரண காரியத்தோட கரெக்டா சொல்லுவான்” னான். மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் “டேய்! இதுல ஒரிஜினல் வைரம் எது? போலியான வைரம் ஏதாவது இருக்கா ன்னு பார்த்து சொல்லு.” அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொருத்து அத கைல எடுத்து பிரிச்சு ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான். ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடன பார்த்து கேட்டான். “எப்படி கண்டு பிடிச்ச காரண காரியதோட சொல்லு”. குருடன் சொன்னான் “ராஜா! வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம் ன்னு பிரிச்சேன்.” ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து “போடா! மேற்கு வாசலுக்கு. டோக்கன்ன குடுத்து பட்ட சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு” ன்னு சொல்லி அனுப்பிச்சான். இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு ஒரே குழப்பம். யார தேர்ந்து எடுக்கரதுன்னு. மந்திரி கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே சொல்றான். ராஜா பார்த்தான் “கூப்ட்ரா அந்த கபோதிய!”. குருடன் வந்தான். ராஜா குருடன் கிட்ட சொன்னான் “என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கரேன். எந்த ராஜாவோட ராஜகுமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு” அப்படின்னான். குருடன் சொன்னான் “ராஜா! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்ததுப்பான்.” ராஜாவுக்கு ஒரே குஷி. “சபாஷ்!. இந்தாட டோக்கன் போடா. வடக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு” அப்படின்னான். குருடனும் போய்ட்டான். கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான். “டேய்! நான் ஒண்ணு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லணும்” அப்படின்னான். குருடனும் சரின்னான். “இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற” அப்படின்னான். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல. ராஜா திரும்ப கேட்டான். குருடன் சொன்னான் “ராஜா! நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான்” அப்படின்னான். ராஜாக்கு ரொம்ப வருத்தம். “ஏண்டா!” ன்னு கேட்டான். “ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா குடுத்தது இலவச டோக்கன் பட்ட சாத்துக்கு. ராசாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை குடுத்து இருப்பான். அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பான். ஆனா நீங்க குடுத்தது பட்ட சாத டோக்கன். மூணாவது ஒரு ராஜ்யமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பான். நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன். இதுலேர்ந்து தெரியர்து சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு. ஏன்னா உங்க புத்தி டோக்கனோட முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போவல. “அந்த குருடன் நிலைமைல தான் ஓட்டு போடற நாம இருக்கோம். நம்ம என்னதான் தெளிவா இருந்தாலும் கிடைப்பது என்னவோ பட்டை சாதம்தான். இதே நிலைதான் அலுவலகத்திலும் நாம் என்னதான் வேலையை ஒழுங்காக செய்தாலும் கிடைப்பது என்னவோ என்னவோ பட்டை சாதம்தான். இந்த கதையை எழுதுனவனுக்து தங்க மெடலே கொடுக்கலாம் என்னிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லாததால் இந்த கதையை எழுதிய அந்த நல்ல உள்ளம் கம்மேன்டில் இ-மெயில் ஐடியை போடுங்கள் ! உங்களுக்கு கிப்ட்டாக ரூபாய் 50 GPAY ல் அனுப்பப்படும் ! 

GENERAL TALKS - கொளுத்தி போடும் மீடியா மான்ஸ்ட்டர்கள் ! - 1




ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் இரவு ஒரு பேய் கயிற்றை அறுத்து கழுதையை விடுவித்தது. கழுதை சென்று பக்கத்து விவசாயி ஒருவரின் நிலத்தில் பயிர்களை நாசம் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயியின் மனைவி கழுதையை சுட்டுக் கொன்றார். கழுதையின் உரிமையாளர் நஷ்டம் அடைந்தார். பதிலுக்கு அவர் விவசாயியின் மனைவியை சுட்டுக் கொன்றார். மனைவி இறந்ததால் கோபமடைந்த விவசாயி அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரைக் தாக்கி கொன்றார். கழுதையின் உரிமையாளரின் மனைவி கோபமடைந்தார், அவளும் அவளுடைய மகன்களும் விவசாயியின் வீட்டிற்கு தீ வைத்தனர். விவசாயி, தனது வீட்டை சாம்பலாக்கியதைப் பார்த்து, கழுதையின் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகளை பரலோகம் அனுப்பிவிட்டார். இறுதியாக, விவசாயி வருந்தியபோது, அவர் பேயைக் கேட்டார், அது ஏன் அனைவரையும் கொன்றது? பேய் பதிலளித்தது, "நான் யாரையும் கொல்லவில்லை, நான் ஒரு கயிற்றில் கட்டப்பட்ட கழுதையை விடுவித்தேன். உங்களுக்குள் இருந்த பிசாசுகளை விடுவித்தவர்கள் நீங்கள் அனைவரும் தான், அதன் பிறகு நடந்த அனைத்து மோசமான விளைவுகளுக்கும் இது விளைவித்தது.  அந்த பேய் மாதிரி தான் இன்றைய செய்திகளும் சீரியல் ரியாலிட்டி ஷோ போன்ற அனைத்து ஊடகங்களும் வேலை பார்த்து தினமும் கழுதைகளை விடுவித்து வருகிறது. மற்றும் மக்கள் ஒருவரையொருவர் எதிர்வினையாற்றுகிறார்கள் மற்றும் வாதிடுகிறார்கள், ஒருவரையொருவர் காயப்படுத்துகிறார்கள், இரண்டாவது சிந்தனை இல்லாமல். இறுதியில், ஊடகங்கள் எல்லா பொறுப்புகளையும் தட்டிக்கழிக்கின்றன. எனவே, ஊடகங்கள் வெளியிடும், ஒவ்வொரு கழுதைக்கும், எதிர்வினையாற்றாமல், நமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்துடனான உறவைப் பேணுவது நமது பொறுப்பு! இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இப்போது எல்லாம் தொலைக்காட்சியின் பாக்கிய லட்சுமியை நம்புவார்கள் ஆனால் உண்மையான வாழ்க்கையின் நம்முடைய பாட்டி மகாலட்சுமியை நம்ப மாட்டார்கள் ! குடும்ப பெரியவர்களுடன் சொந்தக்காரர்கள் நண்பர்கள் தொழில் முறை பழக்கங்கள் பக்கத்து வீட்டார் என்று நிறைய பேருடைய சப்போர்ட்டுடன் ஒரு சமுதாயமாக வாழ்வதுதான் வாழ்க்கை. இந்த மீடியா மற்றும் என்டர்டெய்ன்மெண்ட் இன்டஸ்ட்ரியின் பாலோவராக இருந்தால் வாழ்க்கையே வெறுத்துவிடும் ! இவர்கள் கொளுத்தி போடுகிறார்கள் , காட்டுத்தீயாக மக்கள் வாழ்க்கையில் பாதிப்புகள் உருவாக்கும்போது குளிர் காய்ந்துகொள்ள விளம்பரங்களுடன் செய்திகளை போட்டு அல்லது தவறான தகவல்களை கொடுத்து மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதே இவர்களுக்கு வேலையாக போய்விடுகிறது !

GENERAL TALKS - இதுவும் கடந்து போகும் ! கவனமாக இருப்பதே வாழ்க்கை !








ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது, அதாவது, "தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு, அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?" என்பதே அந்த சிந்தனை. மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை, உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான். “வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான். நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள். நமசிவாய என்றார் ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை. எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை. இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள். அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும், மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான். சில வருடங்களுக்குப்பின். திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது. தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான். நாடு, மனைவி, மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான்.தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன். தூரத்தில் ஒரு மலையினை கண்டான். இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான். தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான்.அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான். உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன. “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள். அதுவரை இதனை பார்க்க வேண்டாம்” இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம். என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான். மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான். ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது . அந்த வாசகம் இதுதான். "இந்த நிலை மாறும்." அவ்வளவுதான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான். தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான். தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான், கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான். அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான். மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள். இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான். நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அரண்மனையில் மக்கள் கூட்டம். அரியணையில் மன்னன். அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள். ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான். தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன். "மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன். மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன். இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே, நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள். அந்த மனிதன், "மன்னா! இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே “ மன்னன், “ஆமாம் அது உண்மைதான் அன்பரே.” அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன். உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அதே மந்திர வாசகம் இருந்தது. *"இந்த நிலை மாறும்."* மன்னர் விழிக்க, அந்த மனிதன், "இதுதான் மன்னா வாழ்க்கை. இந்த நிலையும் மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள். நான் வருகின்றேன்." என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன். நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன். இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்! ஆதனால், நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த முடிவெடுக்கும் முன்னரும் நமக்கும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.- இந்த நிலை இப்படியே இருக்காது ! கண்டிப்பாக ஒரு நாள் மாறும் ! நம்முடைய உடலையும் மனதையும் சரியான கன்டிஷனில் வைத்து இருப்பது நம்முடைய சாமர்த்தியம் ! 

GENERAL TALKS - இது தேவைப்படக்கூடிய கருத்து !




பொதுவாக தொழில் அடிப்படையான விஷயம் என்றால் நாம் யாரை இன்ஸ்பிரேஷன் பண்ணும் குருவாக ஏற்றுக்கொள்கிறோம் என்பது மிகவுமே முக்கியமான விஷயம் !ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர்.கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார். சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார். குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். ”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குரு தான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும். ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள். சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். “சீடனே! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு. மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன். ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப் படுத்தி விடுவார். சீடனின் கர்ம பலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள். இதுதான் சொல்ல வரும் விஷயம் ! கடவுளால் நேரடியாக நன்மை என்றும் தீமை என்றும் பாரபட்சம் பார்த்து செயல்பட முடியாது ஆகவே நமக்கு தொழில் முறையில் முன்னேற்றமோ பின்னடைவோ ஏற்பட்டால் கடவுள்தான் காரணமா என்பதை நன்றாக யோசித்தே முடிவு எடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும்போது இதுவரை இருக்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தானாக தான்தோன்றலாக வேலையில் இறங்கி பணத்தை முதலீடு போடுவது ரிஸ்க்தான். மேச்சுரிட்டி என்று இருந்தால் மற்ற மனிதர்களை குருவாக ஏற்றுக்கொண்டு இன்ஸ்பிரேஷன் பண்ணிக்கொள்வது தவறு இல்லை ! இதுதான் இன்றைக்கு என்னுடைய கருத்து !

MUSIC TALKS - PATTUKOTTAI AMMALU PAARTHUPUTTA NAMMALU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


கேடி பையன் நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்

கேடி பையன் நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்

அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே கம்பி 

ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா ! ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா

நாடு அறிஞ்ச போக்கிரிதான் நான் அறிஞ்ச அம்மாளு

ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மா இரு !


பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


பாசம் உள்ள தம்பியை போலே  பார்த்திருக்கேன் ஆயிரம் ஆளே

பாசம் உள்ள தம்பியை போலே  பார்த்திருக்கேன் ஆயிரம் ஆளே

அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா

நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே

உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சால் என்னாகும்

பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும்


பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


இந்த பாட்டு எப்படியோ இந்த காலத்தில் டிரெண்ட் ஆகிவிட்டது !

GENERAL TALKS - இங்கே வெற்றிக்கான செயல்பாடு என்ன ?


தொடர்ந்து தோல்விகள் வந்துகொண்டே இருக்கிறது. செய்ய வேண்டிய செயல்களும் அளவுக்கு அதிகமாக உள்ளது. நாம் என்னதான் மிகவுமே தெளிவாக சொன்னாலும் நாம் சப்போர்ட் பண்ணுவார்கள் என்று நினைப்பவர்கள்தான் கடைசியில் நம்மை காலை வாரிவிட்டு சென்றுவிடுகிறார்கள். மனதுக்கு இதுவே மிகப்பெரிய பாரமாக உள்ளது. தரையில் விழுந்து உடைவது நான் அல்லவா ? இங்கே அடிப்படையில் விதியை மாற்றுவது அவ்வளவு சாத்தியமான விஷயம் கிடையாது. ஒரு கண்ணாடி பொருள் தரையை தொட்டு உடையும் முன்னால் எப்படியாவது தடுத்து நிறுத்தி பிடிக்கதான் பார்க்கின்றோம் ஆனால் வாழ்க்கை அவ்வாறு பிடிக்க இடம் கொடுப்பது இல்லையே ? இந்த பொருள் உடைய வேண்டும் என்று விதி முடிவு பண்ணிவிட்டால் நாம் என்னதான் பாதுகாப்பு கொடுத்தாலும் விதி அந்த பொருளை உடைத்துவிடுகிறது. நாம் என்னதான் ஒருவரை காப்பாற்ற நினைத்தாலும் விதி நினைத்தால் அவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்க செய்கிறது அல்லது சாகடிக்கவும் செய்கிறது. இருந்தாலும் வெற்றியை அடைந்தே ஆகவேண்டும். நாளைக்கு கடவுள் வந்து முன்னால் நின்றால் கூட நம்முடைய வெற்றிகளையே மதிப்பார். நம்முடைய பொருட்களை எல்லாம் மதிக்கவே மாட்டார். இதுதான் இந்த நேரம் நான் சொல்லும் கருத்து. இந்த வலைப்பூவின் தகவல்கள் மற்றும் கருத்து பதிவுகள் பிடித்து இருந்தால் மறக்காமல் சந்தாவை பண்ணிக்கொள்ளுங்கள் !

GENERAL TALKS - டெக்னாலஜி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துகொண்டு இருக்கிறது !

 



இன்றைக்கு தேதிக்கு எல்லாமே ஆன்லைன் வந்ததால் எதையுமே நம்ப முடியவில்லை ! போதாத குறைக்கு AI விஷயங்கள் வேறு இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே ரெகார்ட் செய்து நம்மை மிகவும் பிளாக் மெயில் பண்ணக்கூடிய அடிமையாக மாற்றுகிறது ! இன்னைக்கு தேதிக்கு AI வந்ததும் டெக் கம்பெனிகளுக்கு நன்றாக கொம்பு சீவி விட்டது போல ஆகிவிட்டது. இணையத்தில் போட்டோ , வீடியோ , ஆடியோ , கால் ரெகொரடிங் , மெசேஜ் , லொகேஷன் என்று அனைத்தையும் AI கவனித்து இவர் நல்லவர் என்றும் இவர் கெட்டவர் என்றும் AI அதுவாக முடிவுகளை எடுத்துவிடுகிறது ! இன்னைக்கு தேதிக்கு நெட்பிலிக்ஸ் ஒரு மாதத்துக்கு கேட்கும் தொகை சுமாராக 1677/- ரூபாய் பிரதி மாதத்துக்கு கேட்கிறது ! இன்னைக்கு தேதிக்கு சுமாராக 150 கிலோமீட்டர்களை உபர் டாக்சியில் கடக்க வேண்டும் என்றால் நீங்கள் 26000/- பக்கமாக கொடுக்க வேண்டும் ! இப்படி டேக்னாலஜி என்று வந்த கம்பெனிகள் எல்லாம் மக்களிடம் அதிகமாக காசுதான் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் ! உங்களுக்கு குறைவான காசில் இந்த சேவைகள் எல்லாம் வேண்டும் என்றால் மாசம் மாசம் கடமைக்கு 4000/- கம்பெனிக்கு செலுத்தும் வகையில் சந்தாதாரராக மேம்பேர்ஷிப் போட்டு மாறிவிடுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறது. இப்படி டெக்னோலஜி மக்களுக்கு பிரயோஜனம் இருக்கும் ஒரு விஷயமாக இல்லாமல் மக்களை நசுக்கும் ஒரு கார்ப்பரேட் பணம் தின்னும் ஒட்டுண்ணியாக மாறி இருக்கிறது ! இது அடுத்த தலைமுறைக்கு பெரிய ஆப்பு என்று மாற அதிகமான வாய்ப்புகள் உள்ளது ! 

GENERAL TALKS - கார் எதுக்காக தனிப்பட்ட தகவல்களை ரெகார்ட் பண்ண வேண்டும் ?

 



இன்னைக்கு தேதிக்கு ஒரு கார் வாங்கினோம் என்றால் எடுக்காக வாங்குவோம் ? கண்டிப்பாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லத்தான் வாங்குவோம் ? ஆனால் இப்போது எல்லாம் அமெரிக்க கார்களில் டேட்டாவை (SMS , PHONE CALL RECORDS , GPS , SPEED , LOCTAION , CAMERA , VOICE RECORDING ) என்று எல்லாமே கலேக்ஷன் பண்ணப்போகிறார்கள் என்கிறார்கள் ! சமீபத்தில் ஒரு பெண்மணிக்கு எப்போது ஒரு நாள் வேகமாக போனது கார் கம்ப்யூட்டரில் ரெகார்ட் பண்ணியதுக்காக வேகமாக போனதை குற்றம் சாட்டி லைசென்ஸ்ஸை முடக்கிவிட்டார்கள் மேலும் ஐந்து நாட்கள் சிறையில் அடைக்க பார்க்கின்றார்கள் ! நாம் பெர்ஸனலாக யாராவது பார்க்க போகிறோம் என்று கருதுங்களேன் ! இல்லை என்றால் ஆபீஸ்ஸில் வேலை பார்க்கும்போது முதலாளி கழுவி ஊற்ற போகிறார் எனுங்களேன் ? இந்த விஷயங்கள் எதுக்காக கார் கம்பெனி முதலாளிகளுக்கும் காவல் துறைக்கும் கொடுக்க வேண்டும் ?  வாடிக்கையாளர்களுடைய பெர்ஸனல் தகவல்கள் ஃபோன்னில் இருந்தால் பரவாயில்லை ? என்ன மயிருக்கு கார் ஒரு மனிதனின் தகவலை சேர்த்து வைக்கிறது ? இங்கே ப்ரைவசியே இல்லையா ? சுதந்திரமாக இல்லாமல் இந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் நாம்தான் இவர்களின் இந்த ஆட்டிட்யூட்க்கு பலி ஆடுகளா  ? கண்டிப்பாக இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட வேண்டும் ! ஒரு அவசரமான தீபாவளி துணி பெர்ச்செஸ் ஆப்பர்ரில் துணியை எடுக்க செல்கிறோம் என்று யோசித்து பாருங்களேன் ! துணியை வாங்கி மிச்சம் பண்ணிய காசை வேகமாக போனதுக்கு அபராதமாக கட்ட வேண்டுமா ? யோசிங்க மக்களே யோசிங்க !

Tuesday, May 28, 2024

GENERAL TALKS - இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது !

 


இங்கே எப்போதுமே பணம் தகுதியை உள்ளவர்களுக்கு மட்டுமே சேரும் என்று சொல்ல முடியாது. கெட்டவர்களின் கைகளில் பணம் என்ற சக்தி கிடைக்கும்போது அவர்களுடைய மோசமான எண்ணங்களை எல்லாம் அவர்களை விட சக்திகளில் பொருளாதாரத்தில் குறைந்தவர்களை நன்றாக போட்டு வாட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். ரஞ்சித் , மாரி செல்வராஜ் , வெற்றி மாறன் படங்களை எல்லாம் பார்க்க பிடிக்கவில்லை என்று பிறந்ததில் இருந்தே உயர்வான பிறப்பு மற்றும் வளர்ப்பு என்று வசதி வாய்ப்புகளால் வாழ்ந்து மற்றவர்களை கஷ்டப்படுத்தியே சந்தோஷமாக இருந்த மனங்கள் பேசுகிறது. குழந்தையாக இருக்கும்போதே யாரை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து விடுகிறார்கள். இவர்களை சொல்லி குற்றம் இருக்காது. இருந்தாலும் இவர்கள் பண்ணும் விஷயங்கள் எல்லாம் குற்றங்கள்தான். ஒரு மனிதனை சக மனிதன் நன்றாக மதிக்க வேண்டும். ஒரு வீட்டு குழந்தையை இன்னொரு வீட்டு குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக மாறினாலும் இப்படித்தான் தாழ்வாக நடத்த வேண்டும் என்று எல்லாமே சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள். இது எல்லாமே சமூகத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இவர்களிடம் எப்படியோ பணம் நன்றாக சேர்ந்துவிடுகிறது. பிறப்பு முதல் பிரிவிலேஜ் வி.ஐ. பி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பதால் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு சாம்பார் இல்லாமல் வெறும் தயிரையும் ரசத்தையும் பிசைந்து சாப்பிட்டு குழந்தைகளை அன்பாக வளர்த்து கொடியோர் கைகளில் சிக்காமல் பார்த்துக்கொண்டு பெற்றவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள் என்று இவர்களுக்கு எல்லாம் எப்படி புரியப்போகிறது. ? இவர்கள் வார்த்தைகளை கடைசி வரைக்கும் நம்பவே முடியாது. வசதி வாய்ப்புகள் இருப்பதால் நம்பிக்கை வைத்தவர்களை நன்றாக தூக்கி எறிந்துவிடுவார்கள். வசதி வாய்ப்புகள் இருப்பதாக இருந்தால் அவர்கள் தலைவராக இருக்க தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல கூடாது. மக்களுடைய கஷ்டத்தை எடுக்க வேண்டும் என்று போராடுகிறார்கள் , இதுவரைக்கும் மக்களுக்கு நடந்த அநியாயங்கள் இனிமேல் நடக்க கூடாது என்று விழிப்புணர்வை உருவாக்குகிறார்கள் இளைய தலைமுறை இயக்குனர்கள். இவர்களை சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் உங்களிடம் வசதி வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக தவறாக பேசாதீர்கள் ! 

CINEMA TALKS - ALAIPAYUTHE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



ஒரு நிஜமான வாழ்க்கையில் நடக்கும் லவ் ஸ்டோரி என்று இந்த படத்தை பார்த்தவுடன் நம்பிக்கை வரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் ! அவ்வளவு எதார்த்தமான ஆனால் ரசிக்கும்படியான காதல் கதைதான். சுதந்திரமாக குடும்பத்துக்கு தெரியாமல் காதலித்து ரேஜிஸ்ட்டர் மேரேஜ் செய்து வீட்டை விட்டு பிரிந்து வந்து காதல் செய்து திருமணம் செய்து கொள்ளும் இரண்டு பேருடைய இணைந்த வாழ்க்கை ! புதிதாக வாழ்க்கையை தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் பார்க்க நினைக்கும் இவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது ? எப்படி இவர்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய கஷ்டங்களை எல்லாம் வெற்றி அடைந்து சிறப்பான ஒரு காதல் கதையை அமைக்கிறார்கள்  ? என்பது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை. இயக்குனர் மணிரத்தினம் சராசரியாக பெண்களை காட்சி பொருளாக மட்டும் அமைக்க வேண்டும் என்றமற்ற இயக்குனர்களின் முட்டாள்தனமான கருத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு மிகவும் ஸ்ட்ராங்கான கேரக்டரை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கொடுத்து இருக்கிறார். ஒரு சில குறிப்பிட்ட காட்சிகளில் சராசரியான காதலுக்கு உள்ளே   நடக்கும் இயக்கமும் பிரிவும் பொறாமையும் தவிப்பும் ரசனையும் என்று நிறைய விஷயங்களை இந்த படத்தில் நன்றாகவே கொடுத்துள்ளார். நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷாலினி அவர்களின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் வேறு லெவலாக இருக்கிறது சாப்ட்வேர் இன்ஜினியராகவும் டாக்டராகவும் படிக்கக் கூடியவர்கள் இரண்டு பேரும் அவர்களோடு துறையில் வெற்றி அடைய நிறை கஷ்டப்படும்போது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதை மிகவும் வருந்துவது இந்த படத்தில் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது‌. படத்துடைய பாடல்களும் பின்னணிய செய்யும் இந்த படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கின்றன. மக்களின் ரசனை கேட்டு புதிய தலைமுறை காதல் கதையாக இத்தனை படங்கள் வந்தாலும் காதல் கதைகளுக்கென்று தனி ஒரு இடம் இந்த படத்தில் இருக்கிறது. இந்த காலத்தில் இந்த மாதிரியான பட்ஜெட் படங்களை கண்டிப்பாக மக்கள் எல்லா கட்டத்திலுமே எதிர்பார்க்கலாம் ! காரணம் என்னவென்றால் எப்போதுமே கமேர்ஷியல் படங்கள் மட்டுமே சினிமாவில் நிறைந்து இருந்தால் எப்படி ? உண்மையான காதல் என்பது என்ன என்றும் அதனுடைய இனிமையை சொல்லவும் இளைய தலைமுறைக்கு இந்த மாதிரி நல்ல படங்கள் கண்டிப்பாக தேவை !

CINEMA TALKS - SARKARU VAARI PATTA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




பொதுவாக வங்கி கடன்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களில் கடன்களை ஏழை எளிய மக்களிடம் இருந்து வசூல் பண்ணும் அணுகுமுறை மக்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை மிகவும் தெளிவான கம்மேர்ஷியல் படமாக இந்த படம் இருக்கிறது. மக்கள் ரசிக்கும்படியான ஒரு தெலுங்கு திரைப்படத்தில் காதல், ஆக்ஷன், காமெடி , ஸாங்க்ஸ் என்று எல்லாமே கலந்த கதையாக இந்த படத்தின் திரைக்கதை இருப்பதால் கமேர்ஷியல் படங்களில் இருக்கும் அந்த ஸ்டைல்லை விட்டுவிடாமல் திரைக்கதையில் பின்னப்பட்ட படம் என்று இந்த படம் மாஸ் காட்டி இருக்கிறது. மகேஷ்பாபுவின் ஐக்கானிக்கான பஞ்ச் டயலாக்குகள் , மரண மாஸ் சண்டை காட்சிகள் மேலும் கியூட்டான ஆட்டிட்யூட் ரொமான்ஸ் காட்சிகள் என்று கிட்டத்தட்ட 2.30 மணி நேரத்துக்கு ஆடியன்ஸ்க்கு வழக்கமான மகேஷ் பாபுவின் பிளாக் பஸ்ட்டர் படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் எல்லாம் இந்த படத்தில் தாறுமாறாக அமைந்துள்ளது.கீர்த்தி சுரேஷ் வழக்கமான சமர்த்தான கதாநாயகியாகவே இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.இந்த படத்தில் எத்தனை காட்சிகள் வேகமாக நகர  செய்தாலும் கடைசியில் இந்த படத்தின் கருத்தை நன்றாகவே கதையில் சொல்லி முடித்து இருக்கிறார்.  இயக்குனர் கமேர்ஷியல் ஆங்கில்லில் இருந்து ஃபைனான்ஸ் லெவல் அட்டூழியங்களை தட்டி கேட்கும் விதமாக கருத்தாக சொல்ல வந்த விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்படுகிறார் அதுவே இந்த படத்தை நன்றாக பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. நிறைய கமர்சியல் காட்சிகள் இந்த படத்தில் வந்து கொண்டே இருந்தாலும் படத்தோட கதை இந்த படத்தில் முதல் காட்சி யிலிருந்து கடைசி காட்சி வரை சரியாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது மற்றபடி தெலுங்கு படங்களில் இருக்கக்கூடிய சண்டைக் காட்சிகளில் குறைவே இல்லை மேலும் தெலுங்கு படங்களில் இருக்கக்கூடிய கமர்சியல் வேல்யூக்களுக்கும் இந்த படத்தில் குறைவே இல்லை. நடிப்பு பிரமாதமானதுதான் ஒருவரி கதையாக இருந்தாலும் இந்த படத்துடைய கதைக்களத்தை நன்றாகவே கொண்டு வந்துள்ளார்கள். வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தரமான படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

TAMIL TALKS - EP. 100 - நம்ம நம்பிக்கையும் நாணயமும் !



பொதுவாக தொழில் முறைப்படி நாம் யாருக்காவது பரோமிஸ் பண்ணிக்கொடுத்தால் கண்டிப்பாக நாம் நிறைவேற்ற வேண்டும். நம்மால் நிறைவேற்ற முடியாத சத்தியங்களையும் வாக்குகளையும் கொடுப்பது மிக பெரிய தவறு என்பதை விடவும் நம்மை நம்பி இருப்பவர்களுக்கு நஷ்டத்தையும் பின்னடைவையும் கொடுத்துவிடும். நம்பிக்கைகள் இருந்தால்தான் நம்மை நம்பி நமக்காக நிறைய வேலைகளை அல்லது ப்ராஜக்ட்களை கொடுப்பார்கள். நமக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என்னும் பட்சத்தில் நாம் எதுக்காக இப்படி எல்லாம் பிராமிஸ் கொடுத்து மாட்டிக்கொள்கிறோம் என்று நிச்சயமாக புரிவதே இல்லை. இப்படி ஒரு பிராமிஸ் பண்ணிக்கொடுத்து அவைகளில் மாட்டிக்கொண்டால் எப்படி வெளியே வருவது ? இந்த மாதிரி நேரங்களில் மட்டும்தான் நம்முடைய வாழ்க்கையில் யோசிக்கவும் முடிவை எடுக்கவும் நிறைய நேரம் நமக்கு கிடைக்கிறது. நாணயம் என்பது பண அளவிலான வரவு செலவுகளை மிக சரியாக பண்ணிக்கொண்டு இருந்தால்தான் கிடைக்குமே தவிர்த்து எப்போதுமே சும்மா சாலையில் போகிறவர் வருகிறவர் எல்லாம் நாணயமான மனிதர் என்று சொல்லிவிட முடியாது. நமக்கு பெர்ஸனலாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை என்று வந்தால் நாம் வாய்ப்புகளை எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் உள்ளது ! இன்றைக்கு தேதிக்கு என்னுடைய பிரச்சனைகளை சமாளிக்க என்னுடைய மூளையின் ஏதேனும் ஒரு மூலையில் இருந்து நன்றாக யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். காரணம் என்னவென்றால் நிறைய மிகப்பெரிய லட்சியங்களாக நாம் வைத்துள்ளதால் இதுபோன்ற விஷயங்களுக்காக நிறைய பணம் மற்றும் நிறைய நேரம் செலவு செய்வது கண்டிப்பாக தவறானது. 

Sunday, May 26, 2024

TAMIL TALKS - EP. 99 - இது ஒரு கவனிக்க வேண்டிய விஷயம் !

 


இந்த மாதிரியான ஒரு விஷயத்தை நான் கவனித்தே ஆகவேண்டும். நிறைய பிராமிஸ்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். போதுமான நேரம் கிடைக்கவில்லை. போதுமான சக்திகளும் பொருட்களும் நம்மிடம் இல்லை. இந்த காலம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டுகிறது. வாழக்கை நாரகமாக செல்கிறது. வாழ்க்கையில் எந்த ஒரு வகையிலும் நமக்கு இந்த உலகத்தை பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். உதாரணத்துக்கு நம்முடைய உலகத்தில் ஜப்பானிய படங்களின் கதாப்பாத்திரங்கள் எடுத்துக்கொள்ளும்போது வளர்இளம் பருவ மாணவர்கள் கூட நன்றாக மெச்சூரிட்டியாக நடந்துகொள்வது போல காட்சிகள் அமைக்கப்படுகிறது. நம்முடைய ஊரில் இருக்கும் ஃபிக்ஷன் வொர்க்ஸ்கள் எல்லாம் எப்போதுமே வயதில் பெரியவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் ஆக்ஷன், ரொமான்ஸ் , அட்வென்சர் நிறைந்த படங்களாகத்தான் இருக்கிறது. இளம் ஆடியன்ஸ்க்கு நம்ம கலாச்சாரத்தில் அதிகப்படியான சுதந்திரம் கொடுக்க கூடாது என்ற ஒரு கட்டுப்பாடு நம்முடன் இருக்கிறது. ஆனால் அந்த கட்டுப்பாடுகள் நமக்கு அறியாமையை உருவாக்க விட்டுவிட கூடாது. நாம் வாழ்க்கையில் நிறைய இடங்கள் செல்ல வேண்டும் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும் அவர்களோடு பேசி அவர்களின் குணங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். நாமும் எதுவும் தெரியாமல் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் அவர் எந்த வகையிலும் போதுமான அறிவுத்திறன் இல்லாமல் இருந்தால் நம் மீது காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். நம்மை தாக்க முயற்சிப்பர்கள். இவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பது வேஸ்ட்தான். இவர்களுடைய கணிப்புகளை கண்மூடித்தனமாக நம்பினால் முட்டாள்களுடைய வளர்ப்பில் வளர்ந்த பெரிய முட்டாளாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டும். இது எல்லாவற்றுக்குமே முக்கியமான காரணம் அறியாமைதான். இவர்களுடைய அறியாமையான வாழ்க்கையை மாற்றுவது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தால் கூட ஒரு கட்டத்துக்கு மேலே மாற்ற முடியாது. அறியாமை ஒரு நோய். முதலாளித்துவம் அறியாமையை பயன்படுத்திக்க மட்டும்தான் ஆசைப்படுவார்கள். ஏமாற்றத்துக்கும் போதை பழக்கத்துக்கும் ரொம்பவே அடிமைப்படுத்த பார்ப்பார்கள். அறியாமையை அடுத்த தலைமுறைக்கு எஜூக்கேஷன் ஸ்டாண்டர்ட்ஸ் என்று சொல்லப்படும் கல்வி தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே முடியும். நீங்கள் வாகை சூட வா படம் பார்த்து இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த கருத்துக்கள் நான் எழுத அந்த படமும் ஒரு காரணம்தான். 

TAMIL TALKS - EP. 98 - இன்ஸேக்யூரிட்டியை வெல்ல நினைப்பது கடினமானது.

 


இந்த வாழ்க்கையில் இந்த ஒரு விஷயம்தான் மோசமானது ! தொடர்ந்து நம்ம வாழ்க்கையை வாழ்வதற்கே பிடிக்காமல் போக்கக்கூடிய ஒரு நிலை. இந்த நிலை நம்மை வாழ்க்கையில் எப்போதுமே இல்லாத அளவுக்கு ரொம்ப ரொம்ப அதிகமான அளவுக்கு யோசிக்க வைக்கிறது. நம்ம கையில் போதுமான விஷயங்கள் இல்லை. நாம் செய்யப்போகும் விஷயங்களுக்கு நம்முடன் கூடவே இருந்து சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. இந்த மாதிரியான நிலைப்பாடு நம்ம வாழ்க்கையில் வரும்போதுதான் எல்லா லட்சியங்களையும் மொத்தமாக பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு நமக்கு சப்போர்ட் பண்ணக்கூடிய ஒரு பெர்ஸனை நாம் தேடவேண்டும். இங்கே தொலைந்துபோன ஒளிந்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை கண்டுபிடிப்பதை விட கடினமானது நம்மை சப்போர்ட் பண்ணக்கூடிய ஒரு பெர்ஸனை நாம் கண்டறிவது. நம்முடைய ஆசைகள் கனவுகள் மற்றும் செயல்களுக்கு கடவுளே சப்போர்ட் இல்லை என்று சொல்லி நம்மை தீர்த்துக்கட்ட பார்த்தாலும் சப்போர்ட் பண்ணக்கூடிய பெர்ஸன் மற்றும் பெர்ஸன்களுடைய ஆதரவு இருந்தால் நம்மால் கடவுளையும் எதிர்த்து சண்டைபோடமுடியும் மேலும் விதியை மாற்றியும் எழுதமுடியும். இதனை நாம் செய்தே ஆகவேண்டும் ஆனால் நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் எல்லாம் எப்போதும் போல கத்தியால் முதுகில் குத்தி முடக்கி விடுகிறார்கள். பின்னர் நெஞ்சிலும் குத்திவிட்டு அடிப்படையில் நம்மை காலி பண்ணிவிட்டுதான் மறுவேலை பார்க்கின்றார்கள். நிறைய நேரங்களில் வேலையில் இருந்து தப்பித்து நிதானமாக யோசிக்கும்போது நம்முடைய மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது என்னவென்றால் தனியாக இப்படி மாட்டிக்கொண்டு இருப்பதுதான். இன்னொரு பக்கம் நமக்காக நம்முடைய கஷ்டத்தையும் சேர்த்து அனுபவித்து நம்மோடு வாழ்க்கையில் கஷ்டப்படாமல் மற்றவர்கள் சந்தோஷமாகத்தானே இருக்கின்றார்கள் ? சூழநிலைகளில் நடக்கும் கடினத்தன்மையை யாராலும் மாற்ற முடியாது. நம்முடன் எல்லோருமே இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறோம் உண்மையில் நாம் பண அளவில் செல்வம் , கல்வி , பழகும் திறன் , நம்பிக்கை என்று நிறைய விஷயங்கள் இருந்தால்தான் நம்மோடு எல்லோருமே இருப்பார்கள். நம்முடைய கைகளில் எதுவுமே இல்லை என்றால் யார்தான் சப்போர்ட் பண்ணுவார்கள் ? எல்லோருக்குமே நம்முடைய முகத்தை பார்க்க கூட பிடிக்காது. நம்மை யாருமே சப்போர்ட் பண்ணாமல் இருப்பது நமக்கு உண்மையில் பயமாகத்தான் இருக்கிறது. இந்த இன்ஸேக்யூரிட்டியை எப்படியாவது வென்றாக வேண்டும். 

Saturday, May 25, 2024

TAMIL TALKS - EP.97 - இன்றைக்கு தேதிக்கு மனதில் இருக்கும் கருத்துக்கள்




நிறைய நேரங்களில் நாம் ஸ்மார்ட்டாக இருப்பதாக நினைக்கிறோம் , இந்த உலகத்துடைய மொத்த ஸ்மார்ட்னஸ்ஸையுமே பார்த்தால் நாம் வெறும் சிறிய மழை துளிதான். நமக்கென்று வெற்றி அடைய கண்டிப்பாக ஏதேனும் மாயாஜாலம் தேவை. இது எதனால் நான் சொல்கிறேன் என்றால் இந்த மொத்த உலகத்துக்கும் ஒரு கவனமான மாற்றம் தேவை. பிளாஸ்டிக் பொல்யூஷன் முதல் தாய் குலத்துக்கு எதிரான குற்றங்கள் வரை எல்லா விஷயங்களையும் வெற்றி அடைய நமக்கு ஒரு மிகப்பெரிய சக்தி தேவைப்படுகிறது. இந்த குற்றங்களை தடுக்க அதனை விட பெரிய குற்றங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் மோசமான எண்ணங்களில் இருந்து யோசிப்பவர்களுடைய கருத்து. நம்ம கண்களின் முன்னால் குற்றங்கள் நடக்கிறது. இந்த குற்றங்களை தடுக்க மட்டும் அல்ல இந்த குற்றங்களை தடுத்த பின்னால் நம்மை இந்த குற்றங்களின் பின்னணியில் இருப்பவர்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும் அதிகமான சக்தி தேவைப்படுகிறது. நாம் எப்போதுமே வாழ்க்கையை விளையாட்டாக நினைத்துககொள்கிறோம். இப்படி நினைப்பதால் நமக்கு வாழ்க்கையை சமாளிக்க போதுமான சக்திகள் இருப்பதாக நாம் ஒரு போஸிட்டிவான கருத்தை நமக்குள்ளே கொண்டுவந்து போதுமான சக்திகள் இருந்தாலும் இல்லை என்றாலும் பிரச்சனைகளை எதிர்த்து வெற்றிகளை அடைகிறோம். இருந்தாலும் இதுவரைக்கும் நடந்த பிரச்சனைகளில் நான் கடவுளிடம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இதுவரைக்கும் நடந்த எல்லா விஷயங்களிலும் பாதிப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது. கண்டிப்பாக பெரிய காம்பென்ஸேஷன் கொடுத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் இந்த உலகத்தை காப்பாற்றவே முடியாது. இந்த உலகத்தை சப்போஸ் இதுவரைக்கும் பண்ணியது போல ஒரு கொடிய மனிதனை உருவாக்கி அராஜகம் பண்ணி அட்டூழியம் பண்ணி மக்கள் எல்லாம் கஷ்டப்படும்போது கடவுள் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து வலியும் வேதனைகளையும் அனுபவிப்பது போல நடித்து கெட்டவனின் வாழ்க்கையை நாசம் பண்ணி கடைசியில் அவனை காலி பண்ணிவிட்டு நல்லவனாக ஸீன் போட்டுவிட்டு கெத்தாக வாழ்க்கையை வாழ்வது எல்லாம் அப்போது மொக்கை சிஸ்டம் வைத்து படிப்பறிவு இல்லாத மக்களை ஏமாற்றுவதற்கு செட்டாக இருந்து இருக்கலாம். இப்போது படிப்பும் ஸ்மார்ட்னஸ்ஸூம் ஒருங்கிணைந்த ஆடியன்ஸ்ஸாக இருப்பதால் கடவுள் அவதாரம் எல்லாம் வேலைக்கே ஆகாது. நல்லோருக்கு சக்திகளை கொடுப்பதை விட நல்ல யோசனை என்று வேறு இல்லை. அவ்வளவுதான் என்னுடைய கருத்து. மற்றபடி இந்த வலைப்பூவுக்கு ஆதரவு கொடுத்ததுக்கு நன்றிகள். நான் உங்களுடைய சப்போர்ட்டை அப்ரிஷியேட் பண்ணுகிறேன்.  

TAMIL TALKS - EP. 96 - மன நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோமா ? - 2



மன நிறைவான வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கிடைக்கும்போது நல்ல கௌரவம் உங்களுக்கு கிடைக்கிறது. ஒரு மோதல் நடக்கும்போது உங்களால் நீங்கள் யாரிடம் மோதுகிறீர்களோ அவர்களை கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கவேகூடாது. நம்மை விட சக்திவாய்ந்த மனிதர்களிடம் மோதும்போது நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இழக்க கூடாதவைகளை இழந்துவிட்டு பின்னாட்களில் கடந்த காலத்தை குறை சொல்வது நிச்சயமாக பயனற்ற ஒரு செயல் ஆகும். கடந்த காலம் என்பது முடிந்துபோன விஷயம் , நீங்கள் என்ன விதமான சொதப்பல்களையும் கடந்த காலத்தில் பண்ணி இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் உங்களுடைய சக்திகளை அதிகரித்துக்கொள்ளும் பட்சத்தில் உங்களை பிடிக்காதவர்கள் கூட உங்களை மதித்து உங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்து கொடுப்பார்கள். சக்திகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதுவே வெற்றியின் ரகசியமாக மாறுகிறது. உங்களுடைய கடந்த காலத்தை நினைத்து கவலைப்படலாம். இப்போது உங்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களை கடந்த காலத்தின் ஒரு பகுதி என்று நீங்களே நியாயப்படுத்தலாம். என்னுடைய கடந்த காலம் நன்றாக இருந்தால் நானும் நன்றாக இருந்து இருப்பேன் என்றும் என்னிடம் இப்போது இயலாமையாக உள்ளது என்றும் இந்த நிலை எனக்கு நிரந்தரமாக இருப்பதால் என்னால் ஒண்ணுமே பண்ண முடியவில்லை என்றும் நம்பிக்கை இல்லாமல் கதைகளை விடவேண்டாம். இந்த உலகத்தில் எந்த ஒரு இயலாமையும் மாறக்கூடியது. மனிதன் கைகளை இழந்தால் என்ன ? இயந்திர கைகள் இருக்கிறது , கால்களை இழந்தால் என்ன ? இயந்திர கால்கள் இருக்கிறது , நிறைய விஷயங்கள் இப்படி காலப்போக்கில் உங்களுக்கு கிடைத்துவிடும். குடும்பம் , குழந்தைகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கெட்ட பழக்கங்களை நீங்கள்தான் விடவேண்டும். உங்களுடையை கௌரவத்தை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் கெட்ட விஷயங்களை நீங்கள்தான் விடவேண்டும். கௌரவம் இருந்தாலே உடலும் மனதும் தானாக ஒரு நேருக்கு அமைந்து வந்துவிடும். உங்களுக்கு முக்கியமானது உங்களுடைய கௌரவமான வாழ்க்கையா ? அல்லது கெட்ட பழக்கங்கள் நிறைந்த வாழ்க்கையா என்பதை நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும். இதனால் நீங்கள் கெட்ட பழக்கங்களை விடுவதால் உங்களின் மோதலில் நீங்கள் வெற்றி அடைந்து விடுவீர்கள் என்று நம்முடைய கம்பெனியின் சார்பாக உத்திரவாதம் கொடுக்க முடியாது ! உங்களுடைய மோதலின் வெற்றி தோல்வி என்ற விஷயங்கள் கெட்ட பழக்கங்களை விடுவதை விடவும் நிறைய காரணிகளுடன் சம்மந்தப்பட்டது ஆனால் நீங்கள் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டால் வாழ்க்கையை உங்களால் நன்றாக வெற்றியடைய முடியும். அது வேண்டுமென்றால் கம்பெனி சார்பாக உறுதியாக உத்திரவாதமாக சொல்லலாம். மன நிறைவான வாழக்கையை அடைவதும் தக்கவைப்பதும் கடினமான விஷயம்தான் ஆனால் முடியாத காரியம் இல்லை !

TAMIL TALKS - EP. 95 - மன நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோமா ? - 1



 

இந்த உலகத்தில் பிறந்ததுக்கான காரணமாக என்னதான் சொல்ல முடியும் ? இப்போதைக்கு என்னுடைய மனதுக்குள்ளே இருக்கக்கூடிய காரணம் என்னவென்றால் ஒரு விதமான மன நிறைவை அடைவதுதான். நம்ம மனதுக்குள்ளே ஒரு மன நிறைவை அடையவேண்டும். மனது நிறைவாக இல்லை என்றால் வாழ்க்கை சந்தோஷமாக அமையவே அமையாது. இந்த மன நிறைவைத்தான் மக்கள் எல்லோருமே தேடுகிறார்கள். கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் வாழ்க்கையில் எல்லாமே இருந்தாலும் இந்த மன நிறைவும் சேர்ந்து இருக்கும். நாம் உண்மையில் எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்பட்டோம் ? நம்முடைய உள்மனது சொல்லும் வாழ்க்கை என்ன ? அந்த வாழ்க்கை ரொம்ப எக்ஸ்பென்ஸிவ்வாக இருந்தாலும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் மட்டும்தான் மன நிறைவை அடைய முடியும். மறு ஜென்மங்களில் நமக்கு நம்பிக்கை கிடையாது. இருப்பது ஒரு உயிர்தான். இங்கே அவ்வளவு தங்கமாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் விதி நமக்கு கஷ்டத்துக்கு மேலே கஷ்டம் கொடுத்து உலகம் மன நிறைவை கடைசி வரைக்கும் அடையமுடியாத அளவுக்கு மிகவும் தெளிவாக வைத்துசெய்துவிடுகிறது. உங்களுடைய ஆசைகளிலும் உங்களுடைய நேசிப்பவர்களுக்கு நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று பிளான் போடுவதிலும் மனநிறைவு கிடைக்காது. அந்த ஆசைகள் எல்லாமே நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றினால் மட்டும்தான் மனதுக்குள்ளே நிறைவு கிடைக்கும். கடைசி காலத்தில் சாகுமபோது அப்பாடா ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற சந்தோஷம் உங்களுடைய மனதுக்குள்ளே உருவாவதை நீங்கள் பார்த்து சந்தோஷப்படுவீர்கள். உங்களுடைய மனதின் ஆசைகளை நிறைவேற்றினால் மட்டுமே மன நிறைவு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. மொத்ததமாக முழுமையாக நிறைவேற்ற வேண்டும். எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும். நம்ம மனதுக்கு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து சாவதுதான் வெற்றி , நம்ம மனதுக்கு நிறைவாக இல்லை , பற்றாற்குறையாக இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக ரொம்ப பாதிப்புகளை கொடுக்கக்கூடிய விஷயம். இந்த மன நிறைவு கிடைக்காமலே ஒருவர் இறந்து போகிறார் என்றால் அவரை விட அதிர்ஷ்டம் கெட்ட மரணம் வேறு யாருக்குமே அமையாது இங்கேயும் ஒரு ஸ்பெஷல் கேஸ் இருக்கிறது. அதாவது நடிப்பவர்கள். நடிப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நல்ல மனநிறைவு கிடைத்தால் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டுமோ அப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள். நடிப்பதில் கிடைக்கும் மன நிறைவே போதும் வாழ்க்கையை சமாளித்துவிடலாம் என்ற ஒரு அபாரமான நம்பிக்கை அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கிறது. இந்த உலகத்தில் எல்லாமே கிடைத்தது போல கற்பனை பண்ணிக்கொண்டு வாழ்வது கொஞ்சம் தர்மசங்கடமான செயல். கற்பனையை சாப்பிட முடியாது. ஆனால் நிஜத்தை அடைந்தால் சாப்பிடலாம். நமக்கான மன நிறைவு உண்மையான பொருட்களில் மட்டுமே உள்ளது. கற்பனை பொருட்களுக்கு மதிப்பு இல்லை என்று தெரிந்துகொண்டு நிஜமான பொருட்களை வாங்க வேண்டும். மன நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும். கண்ணால் பார்க்கும் எல்லாவற்றையும் அடைந்தால்தான் அந்த மன நிறைவு கிடைக்கும் என்றால் அப்படி அடைவது தவறே இல்லை. 

TAMIL TALKS - EP. 94 - மூளையற்ற மனிதராக இருக்க கூடாது !


இந்த உலகத்துடைய இப்போதைய தேவை ஒரு கடினமான அதிகாரம். பொதுவாக சக்திகள் அப்படின்னு நீங்கள் என்னென்ன விஷயங்களை சொல்லுவீர்கள். கடினமான அதிகாரம் உங்களுக்கு கிடைத்தால் எல்லாமே உங்களுக்கு கிடைத்துவிடும். கண்டிப்பாக கடவுள் அந்த அதிகாரத்தை பெற அனுமதிக்க மாட்டார். நாம்தான் பெற வேண்டும். இங்கே ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டும். நமக்கு தேவையான விஷயங்களை அடையவேண்டும் என்று போராடுவது ரொம்பவுமே அவசியமானது. கோபப்படாமல் இருந்து வாழ்க்கையில் என்னதான் சாதித்து விட முடியும் ? கோபப்படாமல் இருந்து விட்டால் உலகத்தில் இருப்பவர்கள் சாதிக்காமல் இருந்துவிடுவார்களா என்ன ? இந்த உலகத்தில் அடிப்படையில் கொஞ்சம் முட்டாள்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது. அவர்களுடைய வாழ்க்கையும் கெடுத்துவிட்டு அடுத்தவர்களின் வாழ்க்கையும் கெடுத்துவிடுவார்கள். இவர்களின் மேல் கோபம் கொள்ள காரணம். இவர்களை திருத்த முயற்சித்து வரம் கொடுக்க நினைத்தால் வரம் கொடுத்தவன் தலையில் கையை வைத்து சாகடிக்க பார்ப்பார்கள். இவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். வேட்டைக்காரன் தன்னுடைய வேட்டையாட வேண்டிய இலக்குக்கு மிக அருகில் இருப்பது போல உச்சகட்ட கவனத்தில் இருக்க வேண்டும். காலமும் கடவுளும் இவர்களை பார்த்து பரிதாபம் அடைய சொல்லும் ஆனால் அந்த தவறை மட்டும் பண்ணிவிடாதீர்கள். நீங்கள் மட்டும் பரிதாபம் கொடுத்துவிட்டால் இவர்கள் தலைக்கு மேலே சுத்தியல் வைத்து அடித்துவிடுவார்கள். அவ்வளவு மோசமான உதவாக்கறை ஜீவன்கள். நன்றாக சாப்பிட்டு தூங்கிவிட்டு அடுத்தவர்கள் வாழ்க்கையை நாசம் பண்ணவே பொறந்த முட்டாள்தனமான மூளை இல்லாத ஜீவன்கள். இவர்களுடைய வளர்ப்பில் ஒரு செடி வளர்ந்தால் கூட அந்த செடிக்கு கேவலம். இவர்கள் எல்லாம் குப்பையிலும் குப்பைகள். இவர்களை வைரங்களாக மாற்றுவது மட்டும் அல்ல ஒரு செங்கல்லாக மாற்றுவது கூட நடக்காத காரியம். கடவுள் இவர்களுக்குதான் சப்போர்ட் பண்ணுவார். அதுவும் நல்ல விதத்தில் எல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டார். இவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்று எதுவுமே கொடுவந்துவிட மாட்டார். இவர்களால் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில்தான் பின்னடைவுகளை கொண்டுவருவார்.  நல்ல விதத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களும் கூட நாசமாக போவது இந்த முட்டாள்கள் இருப்பதால்தான். தானும் வாழ மாட்டார்கள். அடுத்தவர்களையும் வாழவிட மாட்டார்கள். இவர்களைத்தான் கடவுளுக்கு கைபொம்மைகளாக வேலை பார்க்க வேண்டுமென்று விதி வைத்து இருக்கிறது. நாம் எப்போதுமே போராடுவது இந்த முட்டாள்களையும் இவர்களுடைய முட்டாள்தனங்களையும் எதிர்த்துதான். இந்த முட்டாள்களை எதிர்த்து கண்டிப்பாக கோபப்பட வேண்டும். இந்த முட்டாள்களை எதிர்த்து கண்டிப்பாக போராடவேண்டும். இவர்களுடைய மனதுக்குள் நஞ்சு நிறைந்த குணங்களும் அடுத்தவர்களை முன்னேற விடாமல் எப்போதுமே காலடியில் கிடத்த வேண்டும் என்ற தவறான அணுகுமுறையும் இருக்கிறது. கடவுள் பூமியை மாற்றும் சக்திகளை கொடுக்க வேண்டிய தங்கமான மனிதர்களை இதுபோன்று குப்பையான முட்டாள்களிடம் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கைக்களை தொடர்ந்து நாசமாக்கிக்கொண்டே வருகிறார். 

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...