செவ்வாய், 21 டிசம்பர், 2021

CINEMATIC WORLD - 052 - SHANG CHI LEGEND OF TEN RINGS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 00075]

 

 இந்த படம் 2021 இல் வெளிவந்தது. அவெஞ்ஜர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் படங்களோட சம்பவங்களை கடந்து இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டு உள்ளது. கதை ஷங் சியின் பெற்றோர்கள் சாகாவரம் பெற்ற வென்வோ பேரரசர் மற்றும் தற்காப்பு கலைகள் மிகச்சிறந்த வீராங்கனையானயான டா லோ திருமணம் செய்துகொள்வதில் இருந்து தொடங்குகிறது. இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாங் சி மற்றும் அவருடைய தோழி கேட்டி ஒரு உணவகத்தில் வரவேற்பாளர்களாக சராசரி ஏஸியன் அமேரிக்கன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் ஒரு கட்டத்தில் ஒரு மோசமான அமைப்பை சார்ந்த மெம்பர்கள் சாங் சியுடன் சண்டை போட்டு ஒரு பேருந்தையே கேக் வெட்டுவதை போல வெட்டுவார்கள். தோழி கேட்டி இப்போது ஷாங்சியிடம் அவனுடைய ஃப்ளாஸ் பேக்கை அவன் வென்வோ பேரரசரின் மகன் அப்படின்னு தெரிஞ்சுக்கறாங்க. பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ஷாங் சியின் சகோதரியுடன் சேர்ந்து வென்வோ பேரரசரின் மனைவியை மறுபடியும் உயிருடன் கொண்டுவருவதாக சொல்லும் மாயாஜால காட்டின் தீய சக்திகளுடன் போராடுவதே படத்தின் கதைக்களம். இந்த படம் ஒரு சிறப்பான திரைப்படம். மிகைப்படுத்தி சொல்லாமல் எதார்த்தமான காட்சிகள் கதையின் பின்னணி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது‌. மேன்டரின் கதாப்பாத்திரம் சக்திவாய்ந்த வில்லனாக மட்டுமே காட்டப்படாமல் ஒரு சராசரி மனிதராக வாழ்க்கையில் நேசித்த ஒருவரை இழந்து அவரை மறுபடியும் உயிரோடு கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுக்கும்போது மனதை தொடுகிறது. டென் ரிங்ஸ் - டாக்டர் ஸ்டேரேஞ்ச்ன் வாங் கதாப்பாத்திரம் - அயர்‌மேன் 3 ன் பென் கிங்ஸ்லேயின் ட்ரெவெர் கதாப்பாத்திரம் எல்லாமே எம்.சி.யூ‌. மெமரிஸ். கேட்டி கதாப்பாத்திரத்தின் தோழமையான நட்பு மற்றும் கலகலப்பான பேச்சுகள் திரைப்படத்துக்கு இன்னமும் ரசனையை கொடுத்து இருக்கு. ஆரம்பத்தில் 'மார்வெல்' உலகத்தில் இடம்பெறுமா ? என்ற யோசனையை கொடுத்தாலும் படம் முடியும்போது அடுத்த பாகத்துக்காக கண்டிப்பாக காத்திருக்கலாம் என்ற அளவுக்கு திரைக்கதை அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் எப்போதும் போல பிரம்மாண்டமான CGI மோதல்‌. மொத்தத்தில் இந்த படத்தில் நல்ல பொழுதுபோக்கு நிச்சயமாக கிடைக்கும். ஒரு சராசரி மனிதர்களாகவே காதல் இல்லாமல் நட்பு வட்டாரங்கள் என்று படம் மொத்தமும் பயணிக்கும் கேட்டி மற்றும ஷங் சியின் கதாபாத்திரங்களுக்கு மறுபடியும் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம் ONE LINE REVIEW : SHANG CHI - LEGEND OF TEN RINGS - "BRAND NEW CHAPTER" நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...