VENOM - LET THERE BE CARNAGE - மார்வெல் மற்றும் சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் காமிக் புத்தக கதாபாத்திரங்களாக இருக்கும் வெனோம் மற்றும் கார்நெஜ் ஆகிய கதாப்பாத்திரங்கள் இடம்பெறும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு 2018 இல் வெளிவந்த வெனோம் திரைப்படத்தின் அடுத்த பாகமாக இந்த திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்த பத்தி சொல்லணும் என்றால் இந்த படம் முதல் பாதியை போல இல்லாமல் கொஞ்சம் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. முதல் வெனம் திரைப்படம் 800 மில்லியன் வசூல் குவித்த சாதனை படைத்த காரணத்தால் இந்த திரைப்படம் வெளிவந்த சோனி மார்வெல் பிரபஞ்ச திரைப்படங்களில் இப்போது ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம். கொள்ளையடிக்க முயற்சி செய்தவரை விட்டுவிட்டு காப்பாற்ற வந்த வேனமை பார்த்து மக்கள் பயந்து ஒடும் காட்சியாக இருக்கட்டும் ஹர்டிக்கு புரியாத கேசடியின் கிறுக்கல்கள் கொடுக்கும் தகவல்களை வெனம் கண்டுபிடிக்கும் காட்சிகளாக இருக்கட்டும் ஹர்டியிடம் இருந்து பிரிந்து மாறுவேடம் போடும் பார்ட்டிக்கு செல்லும் வெனோம் அங்கே செய்யும் அட்டகாசங்களும் கொடுக்கும் சொற்பொழிவும் இரு துருவங்களாக வெனமும் ஹர்டியும் இருந்தாலும் கலகலப்பான காட்சிகளாக அமைந்துள்ளது.டாம் ஹார்டி மற்றும் வெனோம் கதாபாத்திரங்களின் இடையில் இருக்கும் பிரிக்க முடியாத வாக்குவாதம் செய்யும் கட்சிகள். வில்லைன் கேசடியாக நடிக்கும் வுட்டி ஹரல்சன் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய சி ஜி ஐ சண்டை காட்சிகள் என ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ் படங்களின் விறுவிறுப்பு தன்மையோடு சலிப்பு தட்டாமல் திரைக்கதையை நகர்த்தி வெனம் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு அதன் அடுத்த திரைப்படத்தை கொண்டு வந்திருக்கும் இயக்குனர் செர்கிஸ் அவர்களுக்கும் பாராட்டுகள். கடைசி காட்சியில் மார்வெல் சினிமா திரை பிரபஞ்சத்தை சொனியில் இணைத்து இருப்பது இந்த திரைக்கதை நுணுக்கங்களை காட்டும் கலையின் அடுத்த கட்டம் என்றே சொல்லலாம். மார்வெல் சினிமாக்களின் பாணியில் முதல் திரைப்படம் அமையாமல் போனாலும் இரண்டாவது திரைப்படம் இந்த முயற்சியில் மிகவும் சரியாகவே வெற்றியை அடைந்துள்ளது. மொத்தத்தில் ONE LINE REVIW : வெனோம் லெட் தேர் பி கார்நெஜ் _ SONY LET THERE BE MARVEL
No comments:
Post a Comment