Tuesday, December 21, 2021

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - ENTERTAINMENT 2021 - TAMIL REVIEW - ORU BASIC ACTION PADAM - [REGULATION 2024 - 00072]

 

RED NOTICE ரெட் நோட்டீஸ் இந்த படம் 2021 இல் வெளிவந்தது . ராயன் ரெனால்ட்ஸ் கால் கடோட் மற்றும் டுவெய்ன் ஜான்சன் நடித்து வெளிவந்த இந்த படம் நெட்ஃப்லிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிரம்மாண்டமான படைப்பு அப்படின்னு சொல்லலாம். இந்த படத்துடைய கதை. வரலாற்று கலைப்பொருட்கள் அதிகமான பண மதிப்பு கொண்டதாக இருந்தால் கண்டிப்பாக பிளான் போட்டு எடுத்து செல்வதில் நினைத்ததை முடிப்பவனாக இருக்கும் ரெனால்ட்ஸ். ஆனால் அவருக்கு நேர் எதிராக இருக்கும் சிறப்பு காவல் துறை அதிகாரி ஜான்சன். பாரம்பரிய மதிப்பு மிக்க கிளியோபட்ராவின் பொன் அணிகலன்களை மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு அதனுடைய ஒரு பாகத்தை ரெனால்ட்ஸ் கொள்ளையடிக்கும்போது அரும்பாடுபட்டு செம்ம சண்டைகள் நிறைந்த சேஸிங் காட்சிகளுடன் தடுக்கிறார் ஜான்சன். ஆனால் இப்போதுதான் கதைக்குள் ஒரு செம்ம டுவிஸ்ட். பிஷப் என்று அழைக்கப்படும் உலகின் மிக சிறந்த கொள்ளையராக இருக்கும் கடோட் ரொம்பவுமே எளிமையாக அந்த கலைப்பொருளை கொள்ளையடித்துவிட்டு மேற்கொண்டு பழியை ஜான்சனிடம் போட்டுவிட்டு சிறப்பாக எஸ்கேப் ஆகிறார். இந்த‌ சம்பவத்தால் ரஷ்ய சிறையில் மாட்டிக்கொள்ளும் ஜான்சன் மற்றும் ரெனால்ட்ஸ் அங்கே இருந்து வெளியே வந்து கலைப்பொருளின் மற்ற இரு பாகங்களை அதற்கான இடங்களுக்கு பயணித்து கண்டறியும் ஒரு அட்வென்சரான கதைதான் இந்த ரெட் நோட்டிஸ். படத்துடைய ப்ளஸ் பாயிண்டாக மிகப்பெரிய பஜ்ஜெட் மற்றும் சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் அட்வென்சரின் எல்லைகளை தொட்டு வருகிறது. உலகம் முழுவதும் பயணிக்கும் கதைக்களம் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தி கதைகள் மற்றும் காட்சிகளுக்கு தொண்ணூறு சதவீதம் வேகத்தை கூட்டுகிறது என்றால் வண்ணமயமான CGI மற்றும் துல்லியமான வசனங்கள் கதையோடு சேர்ந்த திரைக்கதைக்கு மிஞ்சிய பத்து சதவீதத்தை மொத்தமாக கொடுக்கிறது. உள்ளுர் மொழிகளில் டப்பிங் கொடுத்த கலைஞர்களுக்கு படத்துடைய கடைசியில் CREDITS கொடுத்த நெட்பிளிக்ஸ்க்கு ஒரு SPECIAL THANKS !!! ONE LINE REVIEW : RED NOTICE - மூன்று பேர் - மூன்று மோதல் !!!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...