Sunday, September 26, 2021

CINEMATIC WORLD - 042 - THE PRESTIGE - TAMIL REVIEW - தொழில் முறை போட்டி போராக மாறிய கதை - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0061]

 


THE PRESTIGE - இந்த படம் CHRISTOPER NOLAN இயக்கத்தில் வெளிவந்த ஒரு செம்ம ஹாலிவுட் திரைப்படம் என்று சொல்லாம். உங்களுக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்தான் தி ப்ரெஸ்டிஜ் - இந்த படத்துடைய கதை. 1950 களில் ஆல்ஃபிரட் ஒரு மாயாஜால வித்தைகளை காட்டும் ஃபேமஸ் மேஜிஷியானாக இருக்கிறார். மேஜிக் நடக்கும்போது ஒரு எதிர்பாராத விபத்தில் அவருடைய மனைவி இறந்த பின்னால் அந்த இறப்புக்கு காரணம் அவரோடு பணிபுரியும் போரான் என்பவர்தான் என்று நினைத்து அவர்மீது கோபமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் போரானை தாக்க முயற்சிக்கும்போது போரானுக்கு பாதிப்பு உருவாகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னால் அவரும் ஆல்ஃபிரட்டை எதிர்த்து போட்டி போடுகிறார். ஆல்ஃபிரட் மாயாஜாலம் செய்யும்போது அவருடைய மாயாஜாலங்களை தடுத்து அவரை காயப்படுத்துகிறார். இவர்களுக்குள் நடக்கும் இந்த பிரச்சனைஇன்னும் சீரியஸ் ஆகும்போது ஒரு கட்டத்தில் ஸ்டேஜில் ஒரு இடத்தில் இருந்து மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றும் ஒரு மிகவும் கடினமான மேஜிக்கை செய்ய இவர்களுக்குள் மிகப்பெரிய போட்டி உருவாகிறது.  இதனை அடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் ப்ரெஸ்டிஜ் திரைப்படத்தின் கதைக்களம். இந்த படம் 2006 ல் வெளிவந்தது. இந்த படம் அவ்வளவு சூப்பராக இருக்கும். கிட்டத்தட்ட மிஸ் பண்ணாமல் பாருங்க.. உங்களால் கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை கெஸ் பண்ண முடியாது. இவ்வளவு அருமையான திரைப்படம் எப்படி நான் மிஸ் பண்னினேன் என்று எனக்கே தெரியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக இந்த இருவருடைய வெறுப்பு DEVOLOP ஆகும்போது ஒருவரை ஒருவர் அழித்தே ஆகவேண்டும் என்று சபதம் எடுக்காத குறையாக சண்டைப்போட்டுக்கொள்வார்கள். ஒரு படம் பார்த்தால் கிளைமாக்ஸ் வரைக்கும் இந்த படம் ஒரு MYSTERY படம் ஆனால் CLIMAX இல் இந்த படம் ஒரு SCIENCE FICTION படம் என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சர்ப்ரைஸ்ஸாக இருக்குமோ அவ்வளவு சர்ப்ரைஸ்ஸாக எனக்கு இந்த படம் பார்க்கும்போது இருந்தது .  



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...