Wednesday, October 13, 2021

CINEMATIC WORLD - 049 - THE DARK KNIGHT - TAMIL REVIEW - திரை விமர்சனம் [REGULATION 2024 - 00069]

இந்த திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த பேட்மேன் பெகின்ஸ் என்ற திரைப்படத்துக்கு அடுத்ததாக வெளிவந்துள்ளது. லீக் ஆப் ஷாடோஸ் அமைப்பின் மூலமாக பெற்ற பயிற்சியினால் GOTHAM நகரத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்துகிறார் பணக்காரர் தொழில் அதிபர்  BRUCE WAYNE என்ற BAT MAN - இந்த நிலையில் வங்கி கொள்ளை மூலமாக பெரிய மிகவும் மோசமான மனநிலை பாதிக்கப்பட்ட வில்லனாக மாறிய ஜோக்கர் இப்போது பேட் மேனை நேருக்கு நேராக எதிர்க்கிறார். பேட்மேன் அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜோக்கர் அப்பாவிகளை தாக்குகிறார். வழக்கறிஞர் ஹர்வே டென்ட் எல்லோரையும் காப்பாற்ற தான்தான் பேட் மேன் என்று சொல்கிறார். ஆனால் ஜோக்கர் உருவாக்கிய விபத்தால் ஹர்வே டென்ட் மற்றும் ரேச்சல் மிகவும் பாதிக்கப்படுகிறா்கள். ரேச்சல் இறப்புக்கு பின்னால் பேட்மேன் / ப்ரூஸ் வெய்ன் நகரத்தில் ஜோக்கரிடம் எல்லோரையும் காப்பாற்ற எடுக்கும் கடினமான முயற்சிகள் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கிறது. இந்த படம் திரைப்பட வரலாற்றில் மிகவும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது. ஜோக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஹேத் லெட்ஜெர் அவர்களின் மறைவுக்கு பின்னால் அவருடைய கடைசி திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் பேட்மேன் விட ஜோக்கர் கதாப்பாத்திரத்தின் அமைப்பு சூப்பர் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சொசைட்டி மேலே அவ்வளவு மனக்கசப்பு இருக்கிறது. மனசு முழுக்க விஷம் விஷம். இந்த படத்தை பார்த்து இன்ஸ்பேர் ஆகி களத்தில் குதித்தால் காவல் துறை உங்களை துவைத்து கிளிப் போட்டு காயப்போட்டு விடுவார்கள். பேட்மேன் ஆக இருங்கள் . காசு வைத்து இருந்தாலும் நல்லவராக இருங்கள். ஜோக்கர் பார்த்து இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கொண்டு தப்பான பாதைக்குள் பைத்தியம் போல போக வேண்டாம். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...