Sunday, September 26, 2021

CINEMATIC WORLD - 043 - TENET - TAMIL REVIEW - காலத்தை இன்வேர்ட் பண்ண முடிந்தால் ? - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0063]


TENET - இந்த படத்தை பற்றிய இண்டரெஸ்ட்டிங் ஆன விஷயம் என்ன தெரியுமா ? இந்த படத்தில் கடைசி வரைக்கும் ஹீரோவின் பெயர் சொல்லப்பட்டு இருக்காது. இந்த படத்தில் ஹீரோ எதிர்காலத்தில் இருந்து காலத்தில் ரேவர்ஸில் பயணிக்க கூடிய ஒரு பரிமாண சக்தியை ஆராய்ச்சி செய்யும் ஒரு குழுவில் சேர்க்கிறார். இந்த சக்தி இந்த உலகத்துக்கு அழிவு உருவாகாமல் தடுக்க எதிர்காலத்தில் இருந்து அனுப்பப்படுவதாக கருதி இந்த சக்திகளை உடைய பொருட்களையும் நடக்கும் சம்பவங்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ள நிறைய இடங்களுக்கு சென்று கடைசியில் இந்த படத்தின் வில்லனை சந்திக்கிறார்கள். ஹீரோவும் அவருடைய குழுவில் இருப்பவர்களும் இந்த வில்லன் இந்த உலகத்தை அழிப்பதற்கு முன்னால் நடக்கப்போக்கும் சம்பவங்களை தடுக்க முடிந்ததா என்பதுதான் இந்த படத்துடைய கதைக்களம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த இந்த திரைப்படம் கண்டிப்பாக எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது. இந்த படத்துடைய கதை மிகவும் அருமையாக இருக்கும். நிறைய காட்சிகள் கொஞ்சம் புரியவில்லை என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு பெரிய சயின்ஸ் ஃபிக்ஷன் வெப் சீரிஸ்ன் SEASON 2 EPISODE 15 ஐ பார்ப்பது போலத்தான் இருந்தது. கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஒரே நேரத்தில் பயணம் செய்தால் அந்த காட்சிகள் எப்படி இருக்கும் என்ற இமாஜினேஷன் இந்த படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்துள்ளது. இனசெப்ஷன் திரைப்படத்தில் கனவுகள் - இன்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தில் விண்வெளி என்று ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கான்செப்ட்டாக காலத்தை பயன்படுத்தும் காட்சிகள் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். MISS பண்ணாம பாருங்க.. இந்த இயக்குனருக்கு மட்டும் எங்க இருந்து இவ்வளவு கிரியேட்டிவ் ஆன ஐடியாக்கள் கிடைக்கிறது , நான் எல்லாம் பேனாவும் நோட்புக்கும் எடுத்து வைத்துக்கொண்டு கதை எழுதினால் ஒரு பக்கம் கூட எழுத முடிவது இல்லை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனம் நடந்தது நடந்துடுச்சு இந்த ஒரு வார்த்தை நம்பி தான் இந்த உலகமே உன்னைப் பொறுத்தவரைக்கும் அதுக்கு பேரு என்ன ? அதுக்கு பேர் தான் எதார்த்தம் !!! இது எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம். இந்த மாதிரியான படங்கள் கண்டிப்பாக உலக சினிமாவுக்கு கிரேயடிவிட்டி எல்லைகளை எல்லாமே கடந்து வெற்றி அடைய சொல்லிக்கொடுத்து இருக்கிறது. இந்த படம் ரொம்பவே பாராட்டப்பட வேண்டிய விஷயம் !!




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...