Saturday, October 2, 2021

CINEMATIC WORLD - 044 - PRINCE OF PERSIA - TAMIL REVIEW - கெத்தான GAME ! கெத்தான PADAM ! - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0064]

 பிரின்ஸ் ஆப் பெர்சி யா - சான்ட்ஸ் ஆப் டைம். இந்த திரைப்படம் 2012 ல் வெளிவந்தது. ஆதரவற்ற சிறுவனாக இருந்து பின்னாளில் பெர்சியா நாட்டின் அரசரால் எடுத்து வளர்க்கப்படும் கதாநாயகர் இளவரசர் தஸ்தான். ஒரு கட்டத்தில் அல்மொண்ட் என்ற புனித இடத்தை அடைய முயற்சி செய்யும் போது அங்கே இருந்து ஒரு அதிசக்தி வாய்ந்த காலத்தை கடந்து கொஞ்சம்  நிமிடங்கள் பின்னோக்கி செல்லக்கூடிய ஒரு குருவாளை மீட்கிறார். ஒரு கட்டத்தில் அரசருடைய மறைவுக்கு இளவரசர்தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்படும்போது அவரால் எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்தது என்பதுதான் இந்த திரைப்படத்துடைய கதைக்களம். கோல்டன் காம்பஸ், வார் கிராஃப்ட், அசாஸின்ஸ் கிரீட் , அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் படங்கள் மாதிரி அடுத்த  பார்ட் ல பார்த்துக்கொள்ளலாம். அடுத்தடுத்து படங்களை எடுத்து கதையை சொல்லலாம் என்று இல்லாமல் ஒரு ஸ்டேண்ட் அலோன் திரைப்படமாக முழுமையாக ஒரு கதைக்களம் கொடுத்து பெர்சியா அல்லது பாரசீகம் சார்ந்த ஒரு உலகத்தையே டிசைன் செய்து ஒரு ஆக்ஷன் அடவெஞ்சர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட்.. இந்த படத்தின் கிளைமாக்ஸ் எட்ஜ் ஆப் டோமரோ திரைப்படத்தை உங்களுக்கு நினைவு படுத்தலாம்.. இந்த படத்தின் இன்னொரு பிளஸ் பாய்ண்ட் இந்த படத்துடைய விஷூவல் எஃபெக்ட்ஸ்.. மாயாஜால காட்சிகள் - ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் அருமையாக காட்சியமைப்பு செய்யப்பட்டு இருக்கும்.. வீடியோ கேம் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.. இந்த படம் எனக்கு பெர்சனல் ஃபேவரைட் எனலாம்.. ஒரு அருமையான ஃபேண்டஸி அடவெஞ்சர் திரைப்படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த ஜங்கிள் க்ரூஸ் திரைப்படம் கூட ஃபேண்டஸி அடவெஞ்செர் ஜெனரில் வெளிவந்து ஹிட் கொடுத்தது. இருந்தாலும் இந்த திரைப்படம் இப்போது பார்த்தாலும் நன்றாக இருக்கும்.. பொதுவா PRINCE OF PERSIA - SANDS OF TIME - கேம் விளையாடுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் இந்த GAME ஐ முடிப்பது எவ்வளவு கஷ்டம் என்ற விஷயம் ! யாராவது PRINCE OF PERSIA - SANDS OF TIME விளையாடி இருக்கிறீர்களா ? COMMENT பண்ணுங்க !! நமக்கு பிடித்த சாய்ஸ் எல்லாம் GTA VICE CITY .ZIP FILE மற்றும் GTA SAN ANDREAS .ZIP FILE மட்டும்தான் !!




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...